பக்கங்கள்

Saturday, April 20, 2019

அதிகாலை கனவு-10.

காரைக்குடி க்கான பட முடிவு

மாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம்  நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ஸ்கூட்டி வண்டியை ஓட்டிக் கொண்டு  நேராக சாராயக்   கடைக்கு சென்று  ரெண்டு லிட்டர் பெட்ரோலை நிரப்பி விட்டு  நேராக மாட்டுத்தாவணியைக் கடந்து மேலூரை நெருங்கினேன். மேலூரை நெருங்கியவுடன். முதல் அனுகு சாலையில் சென்று சிவகங்கை சாலையில் பல தூரம் சென்று பின் நெற்றியில் அடித்துக் கொண்டு திரும்பி வந்து  மேல வளசைகை்கு சென்று முதல் கட்டிங்கில்லே திருப்பத்தூர் சாலையை  நோக்கி இரு சக்கர வாகனத்தில் பயணித்தேன். போகும்போதே...பாதை மாறி வந்துவிட்டேன் என்று தெரிந்தது. மேலூர் ஊருக்குள் செல்லாமல் நான்கு வழி சாலையில் சென்றால் கிழையூர். கீழவளவு இப்படி தெரிந்த ஊர் இல்லாமல் உறங்கான்பட்டி... அப்புறம் பட்டி என்று யாரிடமும் எதுவும் கேட்காமல்  சிவகங்கையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் சென்று... பின் திருப்பத்தூர் ஊருக்குள் செல்லாமல் காரைக்குடி செல்லும் சாலையில் பிரிந்து காரைக்குடிக்கு வண்டியை விரட்டினேன்.

காரைக்குடி பழைய பேருந்து நிலைத்தை சென்றடைந்தபோது மணி மாலை ஆறு ஆகியிருந்து. சந்திக்க வந்த நண்பரை பற்றி கேட்டபோது அவரு தேவகோட்டை பக்கத்து கிராமத்துக்கு ஒரு சோலியா போயிருக்காருன்னு தகவல் கிடைத்தது.

தகவல் சொன்னவரை வண்டியில்  ஏற்றிக் கொண்டு தேவ கோட்டயை நெருங்கியபோது.. இரவு எட்டுமணிக்கு மேல் ஆகிவிட்டது. தேவகோட்டைக்கு அருகில் சென்றபோது  மீசைக்கார நண்பர்  நிணைவுக்கு வந்தார்.  

அவரு உள்ளுரில் இருக்காரோ..வெளியூரில் இருக்காரோ.. அல்லது வெளி நாட்டில் இருக்காரோ.. தெரியாது.. செல்பேசியில் பேசலாம் என்று நிணைத்தால்...இரவு நேரம் வேண்டாம்.....  வந்த வேலை முடியாது... என்று நிணைத்துவிட்டு. சந்திக்க வந்தவரை சந்தித்துவிட்டு.  அவருடன் காரைக்குடி வந்துவிட்டேன்.

திரும்பி வரும்போது... உச்சி வெயில் தலைக்கவசத்தை தாண்டி மண்டையை பொளந்தது.. கண்கள் சொருகிவிட்டது.. வண்டியின் இஞ்சின் வெயில் தாக்கத்தால் ரெம்பவும் சூடாகி விட்டது. நிண்டு நிண்டு  காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் வந்து அங்கிருந்து வழக்கமான தெரிந்த பாதையான கிழவளவு, கீழையூர் அப்புறம் நாலு வழிச்சாலை  அப்புறம் மாட்டுத்தாவணி..வந்து வீடு வந்து சேர்ந்து விட்டேன். முழித்துப் பார்த்தால் விடியேவே இல்லை... உடம்பெல்லாம் அடித்து போட்டது மாதிரி வலி,....

அடப்பாவி..நம்ம எப்படா அவ்வள தூரம் வண்டி ஓட்டி போணோம் என்ற யோசனைதான் முதலில் வந்தது.... பிறகு ஒரு சமயம் முதல் தடவையாக  வேலை சம்பந்தமாக  பஸ்ஸில் காரைக்குடி சென்ற போது..... திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, இன்னும் சில ஊர்களுக்கு   ஏ்ற்கனவே நான் வந்து போனதாகவே என் நிணைவுக்கு தெரிந்தது.....

Thursday, April 18, 2019

அதிகாலை கனவு-9.


தேர்தல் 2019 க்கான பட முடிவு
சற்று முன்புதான் கம்பூ யூட்டர் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை கனவில் கண்டதை எழுதி வைத்த குறிப்பையும் காணவில்லை.

சரி, போனால் போகட்டும் கனவுக்கா பஞ்சம் என்ற கதையாக நேற்று கண்ட  கனவு  ஏதேச்சையாக வந்து நின்றது......

வென்றால் ஜனநாயகம் வென்றது என்ற கூப்பாடு.. தோற்றால் பணநாயகம் வென்றது என்ற ஒப்பாரி இதுதானே காலம்காலமாக நடந்து வருகிறது..


“அடியே..மாப்ள்ள...தேர்தல் பாதை. திருடர் பாதைதான் ஒத்துக்கிறேன். அதுக்காக.. நீ இப்பவும் ஓட்டு போடலைன்னா... அதாவது உன் பாசையிலே சொல்கிறேன்......... அன்னிக்கு ஒருநாள்.அவன் கேட்டான்ல... ஒங்கப்பன் பன்னயடிமை..ஒங்கொம்மா வீட்டு வேலைகாரி..நீ எப்படிடா  இந்த வேலைக்கு வந்தேன்னு...  அதுமாதிரி..

பாஜாகாரன் இந்த தடவ ஜெயிச்சான்னு வைய்யி... அவுக..அவுக ஆத்தா..அப்பன் செய்த வேலையைச் செய்ய வைப்பாண்டி மாப்பிள்ள...நீ மாடுதான் மேய்க்கனும்டி.....

ஒங்கம்மா..அப்பவே..எங்கம்மாகிட்ட சொல்லுச்சு இவன நாலு எழுத்து படிக்க வைக்கிறதுக்கு பதிலாக பன்னைக்கு வச்சு மாடு மேய்க்க வச்சிருக்கனும்னு


பாஜாகாரன் ஜெயிச்சா  மோடி டீவிக்கவும் பக்கோடா விக்கவும் போவாங்களான்னு இப்படி எடக்கு மொடக்கு கேள்வி என்னிடம் கேட்கலாம் மாப்பிள்ள அவிங்கிட்ட இப்படியெல்லாம் கேட்க  முடியாதிடி.... ஆமா...முடிச்சவிக்கி- மொள்ளமாறி-முடிச்சவிக்கி...மொள்ளமாறி.... இவிங்கதானே மாறி மாறி ஆளுறாங்கே..! ன் னு நீயே  கேட்டுக்கிட்டு இரு மாப்பிள்ள... எனக்கு கேட்டு கேட்டு காது சேவிடாப்போச்சு....

ஒங்க தெருவுல.. நீ ஒருத்தன்தான் ஓட்டு போடாதவன்... நி்ஜமாகவா...என்று என்னைக் கேட்காத....தேர்தல் ஏஜென்டா.. ஓட்டு பூத்ல இருக்கிற உன் பரம்பர வைரி ஒருத்தன் “ சார் அவன் ஓட்டே போடமாட்டான் சார்”என்று சொல்றான்டா  

அவனுக்கு ஆப்பு வைக்கிறதுக்காவாது ..நீ கண்டிப்பா ஓட்டு போடனும்டா மாப்பிள்ள.... ஓங்கிட்ட பேசிக்கிட்டு இருந்ததுல... இன்னிக்கு ஓட்டு போடுறத  மறந்திட்டேன்டா.....போடா...ஒன்னால..  வாய்யிலே  நல்லாவுல...வருது.. விடுடா....  நா....போறேன்.............


Thursday, April 11, 2019

அதிகாலை கனவு-8.காது க்கான பட முடிவு


மெதுவாக என் காதருகே வந்தார்
லேசாக கிசு கிசு கிசுத்தார்
என்ன சொன்னாரென்று தெரியவில்லை
ஒன்னுமே புரியவில்லை என்றேன்

அட, செகுட்டு பயலே...
காதுதான் கேட்கவில்லை.புத்தியுமா
இல்லை என்று திட்டினார்..ஏய்...ஏய்.
ஏய்யா வலிப்போக்கனுக்கு காது
கேட்கவில்லை...புத்தியும் இல்லை
சிறு பிள்ளைகள் விளையாட்டில்
கத்தியது கேட்காத காதுக்கு
கேட்டது...திடுக்கிட்டு முழித்தேன்
வலிப்போக்கன் என்ற எம் புனை
பெயரு எப்படி அதுகளுக்கு
தெரியும் என்பதுதான் முழிப்புக்கு
காரணம்....ஆமா..காதுகிட்ட
வந்து கிசு கிசுத்தது என்னவாக
 இருக்கும் ..உங்களுக்கு தெரிந்தா....