ஞாயிறு 24 2011

உஷா இருங்கோ !.......................உஷாருங்கோ !

அமெரிக்க முன்னால் அண்ணன் சொன்னார்.இந்தியர்கள. நிறைய
சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள் என்று. அண்ணனுக்கு வாயில
கொழுப்பு ,அந்த கொழுப்ப குறைக்க உளறிக்கொட்டினார் அண்ணன்

இந்தியாவிலும் குறிப்பா தமிழ்நாட்டில்  திண்டு்ம் தின்னாமலும்
கொழுப்பேறி குண்டானவர்கள் . உடலை எடையை குறைக்க
படாதபாடு படுகிறார்கள்.ஆண்களைவிட பெண்களின் பாடு ரெம்பவும்
கஷ்டம் . ஒன்னோ,ரெண்டோ பிள்ளகளை பெற்றுவிட்ட பெண்கள்
குடும்ப கட்டுப்பாடு செய்துவிட்ட பிறகு உடம்பு எடை கூடுவதும்
அதை குறைக்க படாதபாடு படுகிறார்கள்

படித்த,வசதியுள்ள பெண்கள் ஆண்களைப் போலவே அதி காலையில்
நடைபயணம் பயிலுகிறார்கள். ஒல்லியாக இருக்கும்போது குண்டாக
விரும்புவதும்.குண்டான பிறகு நார்மலாக இருக்க விரும்புவதுமாக
சிந்தனையிலும் அல்லாடுகின்றனர்.

கனவர்களுக்கும்,சக பெண்களுக்கும் பார்ப்பற்கு அழகாகவும்,பெருமை
பேசவெண்டும் என்பதற்காக முன்னோர் காலத்திலிருந்து பெண்கள்
தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் வாழ்நாளில் பாதி நாட்களை
 இதற்கே செலவழித்துகொண்டு இருக்கிறார்கள்

இந்த இருபத்தினோறாவது நுாற்றாண்டு காலத்திலும் விடாது .
ஆண்கள் முடிதிருத்தம். சலுனாக மாறிஆண்கள் அழகு நிலையமாக
இயங்குவது போல், பெண்களுக்கென்றே பெண்கள் அழகு நிலையம்
பியுட்டி பார்லர்.......இப்படி....இதற்காக ...டி.வி,பண்பலை ரேடியோ
பேன்ஸி ஸ்டோர்களில்  விதவிதமான விளம்பரங்கள்.

இதுமாதிரி பெண்களக்கான விளம்பரங்களில்  ஒரு மாதிரியான
விள்பரத்தை,“படித்த,மேதாவிகளின்,நடுத்தர ”மக்களின் நல்ல
பத்திரிக்கையென பெயரெடுத்த தினமணியின் இனைப்பான
தினமணிகதிரில் ஒரு விளம்பரம்.எடுப்பான மார்பகங்கள்-என்ற
விளம்பரம் இதிலும் போலிகள் வந்துள்ளதால்  அடையாளம்
பார்க்கவும் என்ற குறிப்பு வேறு.

வீரிய எழுச்சிக்கு, நீண்டநேரம் அனுபவிக்க.......இப்படி ஆண்களுக்கான
விள்ம்பரம்.  அழகான,கவர்ச்சியான, நளினமிக்கதாக.எடுப்பான
மார்பகங்கள் ..இப்படி பெண்களுக்கான விளம்பரங்கள்.

எப்படி எப்படியோ,சிந்திக்கிறாங்கப்பா என்ற மாதிரி எப்படி எப்படியோ
விளம்பரங்களும் ,தொழில்களும் வல்லரசாகும் இந்தியாவில்
பெருகி போச்சு..

இருக்கிறவர்கள் ஏமாறமாட்டார்கள்.அப்படி அவர்கள் ஏமாந்தாலும்
பிரச்சினையில்லை.இல்லாதவர்கள் ஏமாந்தால்...............

எம்ஜியாரை புரட்சி நடிகராக ஏற்றிவிட்ட பட்டு கோட்டையின்
பாட்டு போல, 

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலே!......என்று பாடலாமா?

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள்.
ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்று.ஆறுதல் படுத்தி
கொள்ளலாமா?......எம்ஜியாருக்காக டிஎம்எஸ. பாடிய

ஏ...மா...றா...தே!  ஏமாறாதே!.-என்று ஏமாறுபவர்களுக்கும்
ஏமாற்றாதே! ஏமாற்றாதே!! - என்று எமாற்றுபவர்களுக்கு்ம்
மனு கொடுக்கலாமா???

நாய்கள் ஜாக்கிரதை ,மாதிரி விளம்பரங்கள் ஜாக்கிரதை
என்று வெளியிடு்ங்கப்பா!!............என்னது அப்படி போடுவது
பத்திரிக்கை தர்மம் இல்லையா? அய்யயோ! அய்யயோ!!

உஷா இருங்கோ!............உஷாருங்கோ!.......விளம்பரங்கள்
உஷாருங்கோ!.........

3 கருத்துகள்:

  1. nandru.


    ஆரம்பித்து இரண்டு வருடங்கள் ஆகி .. இப்போதுதான் இந்த வலைப்பூ வை தொடருப்படி அமைத்து உள்ளேன் . இதுவரை சுமார் ஐம்பது போஸ்ட் களை செய்த பிறகு இப்போதுதான் இதை ஆரமிப்து இருக்கிறேன்..


    ஏற்கனவே வருகை தந்தவர்களும் , புதிதாக வருகை தருபவர்களும் இணைத்து கொள்ளவும் ...

    வலைபூ நண்பர்கள் இணைந்தால் disccusion forum கலை கட்டும் ..


    அதற்க்காகவே ஒரு புதிய பக்கம் தொடங்குவதால் .. நண்பர்கள் இணைத்துக்கொண்டால் ,நண்பர்களை பின் தொடரவும் வசதியாக இருக்கும்


    நன்றி
    http://vallinamguna.blogspot.com/

    பதிலளிநீக்கு
  2. for more articles about misleading advertisement...

    http://suryajeeva.blogspot.com/2011/07/blog-post_19.html

    http://suryajeeva.blogspot.com/2011/07/blog-post_08.html

    www.facebook.com/ascisocial

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...