சனி 13 2011

அம்மா நான் பெயிலாகிட்டேன்!

ஒருதடவைக்கு இரு தடவை
படிக்க வெண்டுமென்று அம்மா
நான் பெயிலாகிட்டேன்.

புது புத்தகம் நீ வாங்க
படும் அவஸ்தைக்கண்டு-அம்மா
நான் பெயிலாகிட்டேன்

சொல்லக்கொடுத்த வாத்தியையும்
படித்த பாடத்தையும் மறக்க
கூடாதுண்டு அம்மா நான்
பெயிலாகிட்டேன்

டியுசன் படிக்க வழி
இல்லையென்று பால்ய
சிநநேகிதனுக்கு துனையாக-அம்மா
நான் பெயிலாகிட்டேன்

படித்தவர் பலர் சுயநலக்காரர்
பித்தலாட்டக்காரகள் அதனால்
அம்மா நான் பெயிலாகிட்டேன்

படித்தும் முட்டாளாக
இருப்பதைவிட படிக்காத
அனுபவசாலியாக இருப்பதற்கு-அம்மா
நான் பெயிலாகிட்டேன்


படித்தவன பாட்டைக் கெடுத்தான
எழுதியவன் ஏட்டைக்கெடுத்தான்
நான் எதையும் கெடுக்ககமல் இருப்பதற்கு
அம்மா நான் பெயிலாகிவிட்டேன்


உயர் கல்வி உயர் குலத்தாருக்கு
அரசாங்கம் செப்பி செயலாற்றுவதால்
அம்மா நான் பெயிலாகிவிட்டேன்


பதவிக்கு வந்த அம்மா அரசு
ஆடு மாடு வழங்க போகுதாம்
ஆடடையும் மாட்டையும் மேய்க்க
அம்மா நான் பெயிலாகிட்டேன்

2 கருத்துகள்:

  1. வலி மிகுந்த வார்த்தைகள் தோழா, ஆனால் அரசியல் பாடத்தில் நீங்க பாசாயிட்டீங்க.

    பதிலளிநீக்கு
  2. அரசியல் பாடத்தில் நான் பாசயிட்டேனா? மகிழ்ச்சி
    அளிக்கிறது தோழர்.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...