வெள்ளி 19 2011

உண்மையைச் சொன்னா ஒத்துக்கனும்!.!!

கந்துவட்டி,ரன்வட்டி,மீட்டர்வட்டி.இன்னும் என்னென்ன அளவுகள்
உள்ளனவோ , அத்தனை அளவுகளிலும்வட்டி வசூலிக்கும் தொழில்
நுட்பத்தை கண்டுபிடித்த பெருமையெல்லாம் யாருக்கு சேருமுன்னு
பாரத்தால்.அந்த பெருமை மதுரை மாவட்டம்,உசி லை வட்ட மற்றும்
தேனி மாவட்ட சேர்ந்த மேற்குப்பகுதியைச்சேர்ந்த ஆதிக்க சாதியைச்
சேர்ந்த பிரமலைக்கள்ளர்களையே  சேரும்.

இவர்கள் கண்டுபிடிப்பு இதோடு மட்டும் நிற்கவில்லை.உடன் பிறந்த
அக்காள் மகளை(சொத்து வெளியே போயிடக்கூடாதாம்)வயதுக்கு
வந்த சில நாட்களில் திருமணம் முடிக்கும் பழக்கத்தையும் அறிமுகப்
படுத்தியவர்களும் இவர்கள்தான்.அக்கா மகள் வயதுக்கு வந்து நீராட்டு
விழா நடக்கும் நாளில் கொட்டுமுழக்கத்துடன் சீர்வரிசையுடன் தெருக்
களில் ஊர்வலம் வந்து வெடிவெடிக்கும் பழக்கத்தையும் அறிமுகப்
படுத்தியவர்கள்  ஒருமுறைக்கு நான்கு முறை காணிவிழாநடத்துவதும்
அழைப்பிதழை சிறு புத்தகம் அளவுக்கு பெயர்களை சேர்த்து அடிப்பதும்
“மொய் நோட்டைத் திருப்பி பார்க்கவும்” என்று கொட்டை எழுத்துகளில்
அச்சடித்து வெளியிடுவார்கள்.தப்பித்தவறி மொய் செய்யாமல் இருந்து
விட்டால் அவர்கள் வீட்டுக்கு சென்று வசைமாரி பொழியும் வசவுகளை
கண்டுபிடித்ததும்  இவர்கள்தான்.

தாழ்த்தப்பட்டவர்களை நா கூசாமல் சாதியைச்சொல்லி திட்டுவதும்
இவர்கள்தான். இவர்கள் பரப்பிவிட்ட கண்டுபிடிப்புகள் ஏழை ஆதிக்க
சாதியினரிடம் அல்லாமல் எல்லா வகைப்பட்ட ஆதிக்க சாதியினர்
மற்றும் எல்லாவகை ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியினரிடமும்
பழக்கவழக்கமாகிவிட்டது.

உசிலம்பட்டி மற்றும் மேற்குப்பகுதியில் பெண் சிசுக் கொலைக்கு
முதல் மூலகாரணம்  பிரமலைக்கள்ளர்கள் கண்டுபிடித்த தொழில்
நுட்பம்தான். ஒவ்வொரு திசைக்கும் ஒரு வரலாறு இருப்பது மாதிரி
இந்தப்பகுதியில் இருந்துதான் மற்ற பகுதிகளுக்கு பரவியிருக்கலாம்.

அன்மையில்கூட பத்திரிக்கையில் மதுரை மாவட்ட எஸ்.பி அவர்கள்
கந்துவட்டி பற்றி கடுமையாக எச்சரிக்கை விட்டுருந்தார் என்றால்
அதன் கொடுமை எப்படியிருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம்.

சரி,இப்படிபட்ட நல்ல வல்ல பழக்கவழக்கங்களை ஆதிக்க சாதியை
சேர்ந்தவங்களே,கடைபிடிக்கட்டும்.அவுங்க சாதி குலத்தெய்வங்
களுக்கு குருபுசை செய்யட்டும். ஆடாட்டும்,பாடட்டும். அவுங்க
அருமை,பெருமைகளை ஊரு புராசொல்லட்டும் ஏன்? உலகத்துக்கே
பரப்பட்டும்.

ஆனால் சாதீயத்தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட ஏழை
எளிய மக்களும் ஆதிக்க சாதியினரின் பழக்கவழக்கங்களை ஏற்றுக்
கொண்டு,இவர்களும் அடுத்த வகையான ஆதிக்க சாதியாக தங்களை
வளர்த்துக் கொள்வதில்  பெருமையும் போட்டிபோடுவதையும் கண்டால்
வேதனையாக இருக்கிறது.

குற்ற பரம்பரையை ஒழித்தாக சொல்லி அவர்களின் சாதித் தலைவர்க்கு
குருபுசை நடத்தினால், ஆதிக்கசாதியினால் சாதித்தீண்டாமைக்கு
ஆட்பட்ட,இழிவுப்படுத்தப்பட்ட சாதிகளும் ஆதிக்க சாதியின் வழி
முறைகளை,பழக்கவழக்கங்களை  அப்படியே காப்பியடித்து பின்
பற்றுகின்றனர்.

தேவேந்திரகுலவேளாளர் என்று பெயரிட்டுக்கொண்ட பள்ளர் என்ற
தாழ்த்தப்பட்ட ஒருபிரிவினர். ஆதிக்கச்சாதி வெறியினால் கொல்லப்
பட்ட இம்மானுவேல் சேகரனுக்கு, சாதிவெறி குலதெய்வத்தின் குரு
புசை போன்றே  இம்மானுவேல் சேகரனுக்கும் குருபுசை செய்கின்றனர்


இவர்கள் வழியிலே சாதித்தீண்டாமையால் ஒடுக்கப்பட்ட அருந்ததி
அமைப்புகளும் வந்துவிட்டன. சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரரை
சாதியத் தலைவராக்கி   சாதிவெறி குலதெய்வம் போலவே குருபுசை
செய்துவிட்டனர்

இப்பவெல்லாம் யாரு சாதி பார்க்கிறா என்று கேள்வி கேட்கும் அன்பர்்
கள்  இந்த குருபுசையினால் எப்படி சாதிவெறி வளர்க்கப்படுகிறது.என்று மண்டயை கசக்காமல் புரிந்து கொள்ளலாம்.

தாழ்த்தப்பட்டஅமைப்புகளின் ஒருபிரிவான இம்மானுவேல் சேகரன்
பேரவையோ,புதிய தமிழகமோ,தேவேந்திர குலவேளாளர் சங்கமோ?

இன்னொரு பிரிவான விடுதலை சிறுத்தைகளோ,அம்பேத்கர் மக்கள்
இயக்கமோ?

மற்றொரு பிரிவான.அருந்ததியர் விடுதலை இயக்கமோ,ஆதித்தமிழர்
பேரவையோ, தமிழ்ப்புலிகளோ?-இவைகளெல்லாம் தனித்தனியாகவோ
அல்லது கூட்டாகவோ, சாதிவெறிக்கும்,சாதித்தீண்டாமைக்கு மூல
காரணமான வர்னாசிரமத்தை ஒழிக்கவோ ,சாதி ஒழிப்பு நடவடிக்கையோ
சாதி எதிர்ப்பு நடவடிக்கைகளோ, நடத்துவதில்லை.இனிமேலும்
நடத்தும் என்ற வாய்ப்பும் இல்லை. இவைகளெல்லாம் ஆதிக்க சாதி
வழிமுறைகளை போன்றே.ஓட்டுகட்சிகளிடம் தனது சாதி செல்வாக்கை
காட்டி பேரம் பேசவும்,தங்களின் செல்வாக்கையும் பலத்தையும்
உயர்த்தி காட்டவே. செயல்படுகின்றன.

ஆதிக்க சாதிவெறிப்போரில் பலியான,ஆதிக்க சாதிவெறியை
எதிர்த்து போராடிய தலைவர்களின் நினைவுதினத்தை கடை பிடித் தல்
சூளுரைத்தல், பிறந்தநாள் விழா போன்ற வழமையான பழக்கவழக்கங்களை
கைவிட்டுவிட்டன. புறந்தள்ளிவிட்டன.

புதிய ஜனநாகம் மாத இதழின் கூற்றுப்படி
“பிழைப்புவாதமே!தலித்தியமாகவும்,ஒட்ண்ணிகளே! தலைவர்களாகவும்
மாறிவிட்டன.

இனி வருங்காலத்தில்,காமராஜர் குருபுசை,அண்ணா குருபுசை,எம்.ஜியார்
குருபுசை.இப்படி சாதிவெறி குருபுசைகள் நடந்தாலும் வியப்பதற்கிலலை..

2 கருத்துகள்:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...