சனி 06 2011

ஆகா,ஆகா,இவரல்லவோ பறக்கும் அரசியார்!!

சென்னை  சமுத்திரத்தில் குப்பைகளும் கூளங்களும்
துாசிகளும் கிடக்குது..அதை சுத்தம் செய்யக்கூடிய
வழிகளை  ஆராய அரசியார் கிளம்பிட்டாங்கய்யா!
கிளம்பிlட்டாங்க!!

முன்னால் அரசர் ஆட்சியில் மூத்தவர் இருக்க
,இளையவர் பட்டத்து இளவரசர்சென்னை மா
சமுத்திரத்தை அழகுபடுத்துவதற்காக  நான்கு கால
குதிரைகளானஏ.சி டாடா சுமொவிலும்,குவாலிக்ஸிலும்
ஏரியா,ஏரியாகவாக வலம் வந்து குதிரை செல்லமுடியாத
இடஙகளில் வீர நடை போட்டும் பார்வையிட்டு அழகு
படுத்த ஆய்வு செய்தார்.

மகா சமுத்தரத்தின் பேரலையால் அரசரின் செங்கோல்
கீழே விழ..பட்டத்து இளவரசர்  பதவியிழந்தார்.

இதற்காகவே,காத்திருந்த முன்னால் அரசியும் அவர்தம்
தோழியும்புசைகள்என்ன,பரிகாரங்கள்என்ன,அத்தனையும்
சலிக்காமல்பலசெய்து.உள்ளமெல்லாம் பேரானாந்தம் பொங்க
மிக்க களிப்புடன் ஆட்சி கட்டிலேறினார்.

அரசரின் ஆட்சியில் அரசர் கட்டிய அரன்மனையை
புறந்தள்ளியது போன்று பலவற்றை மாற்றிய அரசியார்


பட்டத்து இளவரசர் சென்னை சமுத்திரத்தை அழகாக
மாற்றுவதை மாற்றாமல்குப்பையும் கூழமும் நிறைந்து
கிடக்கும் சென்னை சமுத்திரத்தை துாய்மையாக்க

அம்மாம்,பெரிய பட்டத்து இளவரசரைப்போன்று
நாலுகால் குதிரையில் செல்வது, குப்பையின்
வாசனையை நுகர்வது அரசியார்க்கு பிடிக்காத ஒன்று.
.வீறு நடைபோட்டால் அரசியாரின் பாதம் என்னாவது..
சுனாமி வந்து மக்கள் பிணக்காடனா போதே அரசியார்
நடந்தா போனார்..

அப்பேர்பட்ட அரசியிரின் பாதமும்,நாலுகால் குதிரைகளால்
உடலும் நோகலாமா? சே! சே! சே!

யாரெங்கே? கொண்டு வாருங்கள் வான்வெளி ஓடத்தை
,சூரியனின்பகல்ஒளியில் சர்ரென பறந்து வானிலிருந்து
அழுக்குகள் நிறைந்த சென்னைசமுத்திரத்தை கீழே பார்த்து
ஆய்வு செய்யப்போகிறார்.

ஆகா,ஆகா,இவரல்லவா மதிநுட்பம் நிறைந்த அரசியார்.
டிஸ்கவரி சேனலில்வான்வெளி ஓடத்திலிருந்து ஓடும்
மானையும் முயலையும் பார்ப்பது போல்அரசியாரும்.
ஓடத்திலிருந்து பறக்கும் குப்பைகளையும் பரவும்
துாசிகளையும்அல்லவா?பார்த்து ஆய்வு செய்ய போகிறார்.
எப்பேர்பட்ட ஒளி ஊடுறுவும் பார்வை. இப்படிபட்ட
பார்வைக்கு கொடுத்து வச்சிருக்கனும்மைய்யா!

முன்னால்அரசரையும் பாரு எப்பப்பார்த்தாலும் கருப்பு
கண்ணாடி போட்டுகிட்டு.

மதிநுட்பம் கெட்ட இளவரசரு, எப்பப்பார்த்தாலும்
குதிரையிலும் வீரநடையிலும் படைசூழ சென்று
அல்லாரையும் வெயிலில் அலைக்களித்தாரு்

ஏ.......ஏ.............சென்னை சமுத்திரத்தின் துாய்மையை
கெடுக்கும் குப்பைகளே!கூளங்களே!துாசிகளே!
அரசியார் வான்வளிஓடத்தில் தவழ்ந்து வரும்போது
எல்லாரும் ஓடி மறைந்து கொள்ளுங்கள்.
அரசியார் களைப்படையாமல்
ஆய்வு செய்யட்டும்.

1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...