வியாழன் 22 2011

இருந்தாலும் இந்த சனங்க ரெம்ப மோசமுங்க.....

தமிழ் நாட்டிலே மூடநம்பிக்கையை ஒழிப்பதற்கு அரும்
பாடுபட்ட தந்தை பெரியாரின் பிறந்த நாள் தினம் முடிந்து
24மணி நேரம்கூட கழியல, அதுக்குள்ள மூட நம்பிக்கை
எப்படியெல்லாம் பரப்புறாங்க .அதக்கேட்டு இந்த மூட
மக்களும் எப்படியெல்லாம் ஆட்பட்டு அடிபணிறாங்க.
அதுக்கு இந்த சம்பவமும் ஒரு சாட்சி.

புராட்டாசி மாசம் ஞாயிற்று கிழமையில பிறந்ததால்,
ஒரு பிள்ளை ஆண் குழந்தையுள்ள குடும்பத்திற்கு
ஆகாது.என்றும். இதற்கு பரிகாரமாக விநாயகர்
கோயிலுக்கு சூடம் கொளுத்தி தேங்காய் உடைத்தால்
தோஷம் கழிந்து ஞாயிற்று கிழமையில் பிறந்த புராட்
டாசி மாதத்தின் கெடுதல்கள் நீங்கி நல்லநாளாக மாறி
விடும் என்று இந்து தீவிரவாதிகளோ,அவர்களது வலது,
இடது கைகளோ பரப்பி விட்டனர்.

இதனால் மதுரையிலும் அதனைச்சுற்றியிலுள்ள ஊர்
களிலுமுள்ள பாமரத்தனமும் முட்டாள் தனமும் நிறைந்த
மக்கள் தேங்காய்,சூடத்துடனும் பிள்ளையார் சிலைகளில்
அலை மோதினர்

இரவு பத்து மணிக்குள் பிராயச்சித்தம் செய்து முடித்துவிட
வேண்டும் என்று நேரம் குறித்து பரப்பிவிட்டபடியால்.
வேலைக்கு சென்று திரும்பிய மக்களும் படித்தவர்களும்
படிக்காதவர்களும்ஒரே அலை வரிசையில் சேர்ந்துவிட்ட
தால் கூட்டம் அலைமோதியது.

இப்படித்தான். முன்னோர் காலத்தில் வேலையில்லாத ஆடி
மாத காலத்தில் அச்சாபிஸ் காரன் அச்சடிப்பு வேலைக்காக
பரப்பி விட்ட கதை. அது இன்றளவும் ரவுண்டு கட்டி சூடு,
சொரனை எதுவுமில்லாம வந்துகிட்டு இருக்கிறது பாம்பு
ஒன்னு வந்ததாகவும். அந்த பாம்பு தன் அருமை பெரு
மைகளைச் சொல்லி 500க்கு குறையாமல் நோட்டீஸ் அடித்து
வெளியிடச் சொன்னதாகவும் அந்த நோட்டீசை படித்த ஒவ்
வொருத்தரும் 500க்கு குறையாமல் தங்கள் வசதிக்கு கேற்றார்
போல் அடித்து வெளியிடுமாறு தமிழில் சொன்னதாகவும்
.யாரேனும் நோட்டீசை படித்துவிட்டு அலட்சியமாக இருந்தால்
அவருக்கோ,குடும்பத்திற்க்கோ, நிவர்த்திக்க முடியாத கேடு
வரும் என்று சொல்லி இன்னாரு அலட்சியமாக இருந்ததினால்
இவ்வளவுக்கு கேடு அடைந்தாருன்னு பயமுருத்தி எச்சரிக்கை
விட்டு பாம்பு மறைந்ததாகவும் புருடா விட்டதை இந்த மக்க
ளும் ஆண் பெண் பேதமின்றி பயந்து போயி நிவர்த்தி செய்த
னர். ஒவ்வொரு அச்சாபிசுக்கும் வேலை வந்தது.

இது மாதிரி, ஜவுளிக்கடையில் தேங்கிப்போன பச்சை
சேலையைவிற்பதற்காக அதற்கும் ஒரு மூடக் கதையை
உலாவிட்டனர் இப்படி காலநேரம் பார்க்காமல் ஒவ்வொரு
சீசனுக்கும் நேரத்திற்கும் பொருந்துகிறமாதிரி பகுத்தறிவுக்கு
ஒவ்வாத மூடத்தனத்தை பரப்பி விடுகின்றனர் இந்தக்
கயவாளிக் கில்லாடிகள்

பிள்ளையார் வெளிக்கு போனார்,வேப்பமரம் அழுதது. இப்படி
ஏராளமான புருடா கதைகளை விதைப்பதும் அதைக்கேட்டு
பெருவாரியான மக்கள் பரபரப்பு அடைந்து சிந்திக்க மறுப்பது
பகுத்தறிவாளர்கள், புரட்சியாளார்கள் சொன்னால் ஏற்க
மறுபபதும் தமிழகத்தின் தீராத சாபக்கேடுகள்

பெரியார் இருந்தவரைக்கும் இப்படிபட்ட மூடநம்பிக்கைக்கு
ஆப்பு வைத்துக்கொண்டு இருந்தார். இனிமேல் பெரியார் வரப்
போவதிலலை, அவரின் பெயரை சொன்னவர்களெல்லாம்
பெரிய செல்வந்தர்களாக மாறிவிட்டதால் அவர்கள் இத்தகைய
மூடநம்பிக்கைக்கு ஆப்பு வைக்கமாட்டார்கள்

பெரியாரின் உண்மையான வாரிசுகளும் ,கம்யுனிச புரட்சியா
ளர்களும்தான் மக்களின் மூடத்திரையை அகற்றி மூடப்
பதர்களுக்கு ஆப்பு வைப்பார்கள். மக்களின் பயத்தை போக்கு
வார்கள். இது அவர்களாலதான் முடியும். தன்புத்தியோ அல்லது
சொல் புத்தியோ இல்லாதவர்கள் மூடநம்பிக்கையிலிருந்தும்
விடுபட முடியாது.

2 கருத்துகள்:

  1. தேசிய முற்போக்கு திராவிட கழகம் நு ஒன்னு இருக்கு தெரியுமா? பெரியார் சிலைக்கே சூடம் காமிச்சுட்டு தான் வேலையே ஆரம்பிப்பாங்களாம்... நாத்திகவாதிகள் சித்தாந்தப் படி தங்களை நாத்திகத்தில் ஆட்படுத்திக் கொள்ளவில்லை, விளைவு பெரியார்தாசன் போன்ற ஆட்கள் பெரியார் இஸ்லாமை ஆதரித்தார் என்று வாந்தி எடுத்துக் கொண்டு திரிகின்றனர்... அதை விடுங்க, அது என்னங்க நாத்திகம்னா பெரியார் தானா? பகத் சிங்கை ஏன் யாருமே சொல்ல மாட்டேங்கிறீங்க?

    பதிலளிநீக்கு
  2. பெரியாரு மன்னு பெரியாரு மக்கள்னு பல பேரு சொல்லிகிட்டு இருக்காங்கல்ல அதனாலதாங்க. நாத்திகம்
    னா.பெரியாரு மட்டுமிலலங்க ,பெரியாரு மூடநம்பிக்கை
    யை ஒழிப்பதற்குதான் முக்கியத்துவம் கொடுத்தாரு.
    பகத்சிங் அப்படியா! பகத்சிங் இயக்கவியல் லோகயாகவாதிங்க.முற்போக்குன்னு சொல்லிகிட்டு என்னென்ன அநியாயம் பன்னிகிட்டு இருக்காங்க ஒப்பிடமுடியாத பகத்சிங்க வைத்தே சிலதுகள் ஓட்டு பிச்சை கேட்குதுக.

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...