திங்கள் 07 2011

நவம்பர்-7 இரசிய சோசலிசப் புரட்சி நாள் ஓங்குக!!!

நவ-7 நாள் இரசிய சோசலிசப் புரட்சி நாள்!
1917ம் ஆண்டு இரசிய உழைக்கும் மக்கள்
தங்களை அழுத்தி சிதைத்து கொண்டிருந்த
ஜார் ஆட்சியை துாக்கி எறிந்த நாள்
அனைத்துஅதிகாரங்களும் உழைக்கும்
மக்களின்சோவியத்துக்களுக்கே என்று
முழங்கி பாட்டாளிவர்க்கத்தின் சர்வதி
காரத்தை நிறுவிய நாள்!

இன்று இந்தியா எப்படி தெற்காசியாவின்
பிற்போக்கு தனத்தின் கோட்டையாக
இருக்கிறதோ! அதே போல் அன்று
ரசியாவும் பிற்போக்குதனத்தின்
கோட்டையாகவும் விளங்கியது.ஜார்
ஆட்சியில் விவசாயிகளும் தொழிலாளி
களும் கொடுரமாக சுரண்டப்பட்டனர்.
வரிக்கு மேல் வரி விதித்தனர்,ரொட்டிக்
கும் பாலுக்கும் சர்க்கரைக்கும் திண்டாடினர்.
கடுமையான விலைவாசியால் கசக்கி
பிழியப்பட்டனர்.இதோடு அண்டை
நாடுகளுடன் மூலதனப்போட்டியால்
இடைவிடாத யுத்தம் வேறு, இதனால்
நாடே திவலாகிப்போனது.இந்த அநீதிக்கு
எதிராக மக்கள் போராடி ஜார் ஆட்சியை
துாக்கி எறிந்தார்கள். இதை பயன்படுத்தி
ஆட்சிக்கு வந்த கெரன்ஸ்கி ஆட்சியிலும்
ஜார் ஆடசியின் கொடுமைகள் தொடர்ந்தது.

இந்நிலையில்தான் ரசியாவின் பாட்டாளி
களும் விவசாயிகளும் தோழர் லெனின்
தலைமையில் போல்ஷிவிக் கட்சியில்
அணிதிரண்டு ஆயுத எழுச்சிமூலம்
சோசலிசப்புரட்சியை நடத்தினார்கள்.
மக்களின் பிரதிநிதிகளானசோவியத்
துகளின் கையில்தான் அனைத்து
அதிகாரங்களும் அளிக்கப்பட்டன

அதிகாரமுள்ள இந்த சோவியத்துகளை
நிறுவிய பின் நாட்டை தொழில்
மயமாக்கினார்கள்.விவசாயிகளுக்கான
கூட்டுப்பன்னைகளை அமைத்தார்கள்
இரயில்வேக்களை அமைத்தார்கள்.
நாட்டை மினமயமாக்கினார்கள்.இதனால்
மக்களுக்குஅடிப்படை தேவையான
வீடு,கல்வி,மருத்துவம் போன்றவற்றை
இலவசமாக நிறைவேற்றப்பட்டது.
சோவியத்துகளின் அதிகாரத்தின் 70
ஆண்டுகளில்ஒரு முறைகூடவிலைவாசி
உயரவே இல்லை..மலிவான விலையில்
மக்களுக்கு உணவு,உடைகள் வழங்கப்
பட்டன..இவையெல்லாம்பரலோகத்திலோ
அல்லது விட்டலாச்சார்யாவின் ஜிபும்பா
படம் மாதிரிபோல் நடைபெறவில்லை.

ரசிய சோவியத்துகளின் சோசலிச
ஆட்சியில் மக்களுக்கு ஜனநாயகம்
இருந்தது.சுரண்டல்,பேர்வழிகள்
எதிர்புரட்சிகும்பல்கள். மதவெறியர்கள்
கடுமையாக ஒடுக்கப்பட்டனர்.தேசிய
இனங்களுக்கு சுயநிர்ணயம் வழங்கப்
பட்டது.ஆட்சியதிகாரத்திலும் கல்வி,
வேலை,சொத்திலும் பெண்களுக்கு சம
உரிமை வழங்கப்பட்டது. எல்லா
வற்றுக்கும் மேலாக கோடிக்கணக்கான
மக்களை பலி கொடுத்து இட்லரின்
பாசிச கொடுமைகளிலிருந்து உலகத்தை
பாதுகாத்தார்கள்.

இந்திய நாட்டிலோ,மக்களைப்பற்றி
கவலைப்படாத ,வல்லரசுகளுக்கு
தனியார்மயம்- தாராளமயம் என்ற
பெயரால் காட்டிக்கொடுக்கும் கூட்டி
கொடுக்கும் ஆட்சியாளர்களால்
மக்களை உணவுக்கும் மருத்துவத்
திற்கும் வக்கற்றவரகளாக
மாற்றியள்ளனர்.பன்னாட்டு
முதலாளிகளுக்கு கோடி கோடி
யாக வரிசலுகைகளும் மானியங்
களையும் வாரி வழங்கிவிட்டு.
சாராயம் காய்ச்சி மக்களை
குடிகாரகளாக்கிவிட்டு பிச்சை
யிடுவது போல்இலவசங்களை
போடுகிறது.கல்வி உரிமைக்கு
போராடினால் தடியடி நடத்தவும்
சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக
போராடினால் போலீசை ஏவி
சுடவும் செய்கிறது. அத்துமீறும்
போலீசு நாய்களை தண்டிக்க
நீதியும் கிடைப்பதில்லை
அணுஉலை பாதுகாப்பானது
என்று சொல்லிக் கொண்டே
மக்களின் உயிரைபறிக்கிறது அரசு.

இத்தகைய கொடுமைகளிருந்து
நமதுநாடும் விடுதலை அடைய
வேண்டும்என்றால்,அடிமைச்
சங்கிலியை உடைத்தெறிந்து
சோசலிசப் பொன்னுலகை
படைக்க வேண்டுமென்றால்..
முதலில் டாஸ்மாக்கை புறந்
தள்ளி சினிமாவைஒதுக்கி வைத்து .
போலித்தேர்தல்களை புறக்கணிக்க
வேண்டும் மனமுவந்து அமைப்பு
நிறுவன ஒழுங்கமைப்பில் பயிற்சி
பெற வேண்டும.சோசலிச தத்தவத்
திலும் நடைமுறையிலும் கல்வி
ஞானம் உடையவர்களாக மாற
வேண்டும்.

அதற்கு நக்சல்பாரிகளின் தலைமையில்
புதியஜனநாயகபுரடசிக்குஅணிதிரள
வேண்டும். நக்சல்பாரிகளின்றி
வேறுமார்க்கம் எதுவுமில்லை. இந்தப்
போரே இறுதியானதும் முடிவானதுமாகும்

5 கருத்துகள்:

  1. அருமையான பதிவு... இவ்வளவு அருமையாக இருந்த பிறகு, ஏன் ரஷ்யா வீழ்ந்தது என்று பலர் கேள்வி கேட்பார்கள்... கொஞ்சம் அதையும் சேர்க்க பாருங்கள்.. இல்லை என்றால் பெரிய விவாத களமாகும் இந்த பதிவு...

    பதிலளிநீக்கு
  2. நல்ல பதிவு.. நண்பா..

    பகிர்ந்தமைக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
    வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...