பக்கங்கள்

Sunday, November 13, 2011

முன்னால் உலக வங்கி அதிகாரியின் அறிவுரை

மாணவர்களே!
                              என்னைப் போல் நீங்கள் உலக வங்கியில் பணியாற்றி பின் இந்தியாவில் நிதியமைச்சராக இருந்து பின் பிரதமராக பணி செய்து வருகிறேன்
நான் நிதியமைச்சராக இருந்த காலந்தொட்டே நான் பணியாற்றிய உலக வங்கிக்கும் அதன் தலைமை பீடமான அமெரிக்காவுக்கும் மிகவும் விசுவாவமாக நடந்துள்ளேன்.அப்படி நடந்ததினால் இன்றைக்கு பிரதமராக இருந்து உங்களுக்கு அறிவுரை கூறும் பிரதமராக என் வாழ்க்கையை வளமாக்கியுள்ளேன் .என் விசுவாசத்துக்கு அறிகுறியாக ஒருநல்ல அடிமைக்கு
அறிகுறியாக அமெரிக்காஅங்கு மூச்சுவிட்டால் நான் இங்கு தும்முவேன்.என் பிறந்த நாளை வானிலே கொண்டாடி மகிழ்ந்தேன். மாவீரன் பகத்சிங் பிறந்த
மண்ணில்தான் நானும் பிறந்தேன. அவர் வேறுவழியில் மாவீரானார்.நான்
உலக வங்கிக்கும் அமெரிக்காவுக்கும் நம்பகமான விசுவாசமான அடிமையானேன். ஆகவே,மாணவர்களே! நன்கு படித்து வளமான வாழ்க்கையை உறுதி செய்து கொள்ளுங்கள். நான் இந்தியாவின் அனைத்து
வளங்களையும் தனியார்க்கு தாரைவார்த்து உலகமயமாக்கல் எனும் அத்தியாயம் படைத்துவிட்டேன்.

6 comments :

 1. அதை விட கொடுமை, உலகத்தில் எவருக்கும் தெரியாத விஷயத்தை எல்லாம் சொல்வேன்..
  உதாரணம்..
  பணம் மரத்தில் காய்க்காது...
  விலை வாசியை கட்டுபடுத்த மந்திர கோல் கிடையாது...

  ReplyDelete
 2. நான் பதவியில் தொடர்வதற்காக என் சகாக்கள் செய்யும் உலகமகா ஊழல்களை அனுமதிப்பேன்! அத்தியாவசியத் தொழில்களை அழிப்பேன்! ஆடம்பரப் பொருட்களை வாங்க கடனை அள்ளித் தெளிப்பேன்! மோட்டார் வாங்க பணம் கொடுப்பேன்! பெட்ரோல் விலையயும் ஏத்துவேன்! பஞ்சை கப்பலேத்தி விடுவேன்! பஞ்சாலையை மூடிவிட்டு சங்கு ஊதுவேன்!

  ReplyDelete
 3. ஒரு காலத்தில் அந்நியர்களை எதிர்த்து போராடிய நமக்கு நம்மவர்களை எதிர்த்து போராட ஏன் தெரியவில்லை?

  நமக்கு ஏன் என்கிற (அலட்சிய)மனநிலை தான்...

  ReplyDelete
 4. நல்ல கட்டுரை,நல்ல சொல்வளம்.நிறைய எழுதுங்கள்..கட்டுரை நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. //அவர் வேறுவழியில் மாவீரானார்.//

  இவர் வழி தனி வழி

  ReplyDelete
 6. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
  வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com