செவ்வாய் 15 2011

டாஸ்மாக்கின் அருமைகளும்,பெருமைகளும்!!!

உறவுக்கார மணமகனுக்கு
பெண் பார்க்க சென்றதில்
மணப்பெணணுக்கு மாப்
பிள்ளையை பிடிக்கலையாம்

எந்த கெட்ட பழக்கமுமில்லாத
நலழொழுக்கம் நிறைந்த மாப்
பிள்ளையை பிடிக்காத காரணத்தை
கேட்டபொழுது நல்ழொழுக்கம்
இருந்தென்ன பயன் டாஸ்மாக்
குடிமகனாக இல்லாதது பெருங்
குறையாம்.

இது கேட்டு விரக்தியடைந்த மாப்
பிளளையோ, வெகுண்டெழுந்து
சென்றார் டாஸ்மாக்கை நோக்கி
குடிமகனாகவதற்க்காக..................

                         ---------------------

அயல்நாடு சென்ற பயணியிடம்
எந்நாட்டு குடிமகன் என்று
வினவினார் அந்நாட்டு அதிகாரி
பயணியோ நெஞ்சை நிமிர்த்தி
சொன்னார் பெருமையாக யாம்
டாஸ்மாக் குடிமகனென்று!!!!
                           ----------------

திருடன் ஒருவன் சக திருடனிடம்
கேட்டான்.அவனை ஏன்?
காவலர்கள் அடித்து இழுத்து
செல்கிறார்கள்.திருடியதில்
பங்கு கொடுக்காததினாலா ?

சக திருடன் சொன்னான்.
இல்ல மச்சி. டாஸ்மாக்
இருக்கும் தெருவில் குடிக்காமல்
நெஞ்சை நிமிர்த்தி சென்றனாம்
அதற்க்காகத்தான் நம் பங்காளிகள்
அடித்து இழுத்து செல்கிறார்கள்

5 கருத்துகள்:

  1. கோயில் இல்லாத ஊருல குடி இருக்ககூடாதுங்கிற நிலமை போய் டாஸ்மார்க் இல்லாத குடியிருக்க கூடாதுங்கிற நிலமை வந்துருச்சி.......

    பதிலளிநீக்கு
  2. குடிமகன் என்பதின் அர்த்தம் மாறும் அவலத்தை வ(லி)ளியுரித்துள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  3. மாறிவரும் உலக நடப்புகளை அப்படியே கவிதையாய் கொண்டு வந்துள்ளீர்கள்..

    பதிலளிநீக்கு
  4. கலக்கலான பதிவு தோழர்... செம காக்டெயில்

    பதிலளிநீக்கு
  5. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
    வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...