பக்கங்கள்

Thursday, November 17, 2011

நீதி அரசர்களின் உத்திரவை.கப்பல்படை தளபதிகள் நிறைவேற்றுவார்களா?

உச்சநீதி மனற உத்திரவாக இருந்தாலும்சரி உயர்நீதிமனற உத்திரவாக இருந்தாலும் சரி, அந்த உத்திரவு சாமானிய மக்களுக்கானதாக இருந்தால் அந்த உத்திரவு மலம் துடைக்கும் காகிதமாக அரசு அதிகாரிகளால் பாவிக்கப்படும்.அந்த உத்திரவே மேல் சனங்களுக்கோ அல்லது அரசு எந்திரத்துக்கோ சாதகமாக இருந்தால் அந்த காகிதத்துக்கு பெரிய சக்தி இருப்பதாக காட்டப்படும்.அந்த காகிதத்தைக் கண்டு நீதிமனற உத்திரவுக்கு கீழ்படிந்து பயந்து நடுங்குவது போல் ஒரு பம்மாத்து வேலையே நடக்கும் வேசியின் ஊடகங்களும் வானத்துக்கும் எம்பி எம்பி குதிக்கும்.

இவர்கள் சொல்லிக்கொல்லுகிற சனநாயக ஆட்சியில் யார் அதிகாரம் படைத்தவர்கள், ஓட்டு பெருக்கி அதில் வெற்றியடைந்து அதன்மூலம் அமைச்சர்களாக எம்பி,எம்எல்ஏவாக வருகிறவர்களா? தலையாரிலிருந்து மாவட்ட ஆட்சியர்வரை இருக்கும் மாவட்ட நிர்வாகமா? சட்த்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதாக சொல்லும் போலீஸ் துறைய்யா? அல்லது எல்லா பிரச்சைகளுக்கும் ஒரே தீர்வாக தீர்ப்பு சொல்லும் நீதிமன்றமா? இவர்களில் யார் அதிகாரம் படைத்தவர்கள் என்பது பற்றிய சர்ச்சைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை தீர்வும் ஏற்ப்படுவதாகவும் இல்லை.

இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது அன்றாட நிலைமையாகிவிட்டது.
தமிழகத்தில் ஆத்தாவால் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
பிரதமருக்கு பல கடிதங்கள் போட்டும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

தற்போது. மதுரை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக உத்திரவு
பிறப்பிக்கப்பட்டள்ளது. அது இந்திய கப்பல் படையும்,கடலோர காவல்
படையும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென்று.

இந்த உத்திரவு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டு,மத்திய தேசிய ஆலோசகர் சிவசங்கர்மேனன் மற்றும் 5அதிகாரிகளால் மலம் துடைக்கும் காகிதமாக
பாவிக்கப்பட்டதால். அவர்கள் அடாது இருப்பினும் இவர்கள் விடாது மனு
செய்து நீதி மன்ற அவ மதிப்பு தொடங்கப்பட்டு வழக்கு விசாரனைக்கு
வந்தது.

இந்நிலையில்தான் இந்த உத்திரவை ரத்து செய்யக்கோரி கடலோர காவல்
படை ஜெனரல் மனுதாக்கல் செய்துள்ளார். “ஏனைய்யா,இந்த உத்திரவ அமுல்
படுத்தல என்று கேட்டால்.படகில் கடலில் சுற்றி வருவது மாதிரி தலையை
சுத்தி மூக்கை தொடுகிறார்.

எல்லை தாண்டி செல்லும் மீனவர்களின் படகுகளை பயன்படுத்தி தீவீரவாதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதாகவும், எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகும்போது.மீனவர்களிடம் அதிநவீன தொடர்பு சாதனங்கள் இந்தபோதும் தங்களை. அழைப்பதில்லை.. எல்லை தாண்டி செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையால் தக்குதலுக்கு உள்ளாகும்போது இந்திய கடற்படை சென்றால் அது பிற நாட்டின் இறையான்மையில் தலையிடுவதாகும் என்கிறது..இதோடு விட்டார்களா?
என்றால் அதுதான்இல்லை. கடைசியாக முத்தாய்ப்பாக.மீனவர்களின் வாழ்வுதாரங்களிலே கைவைக்கிறார்கள்.. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் தாக்கப்படுவதை தடுக்க வேண்டுமானால் “மீன்பிடி இல்லாத மண்டலம் உருவாக்கி, மீனவர்கள் நுழைவதை தடுக்கலாம். இது எப்படி இருக்கு.பட்டு.கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டபாக்குக்கு விலை சொன்ன கதை மாதிரி..

அதாவது விவசாயிகளை விவசாயத்தை விட்டு துரத்தியடித்தது மாதிரி மீனவர்களை மீன்பிடி தொழில்ல இருந்து விரட்டியடித்து மீனவர்களை இலங்கை கடற்படையிடமிருந்து காப்பாற்றிவிடலாம். இதைத்தான் நரித்தனமுன்னு சொல்லுவாங்க.

ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் ஒரு எல்லைக்கோடு வைத்திருப்பார்கள். அந்த ஊரிலிருந்து இந்த ஊரு வரைக்கும்  இந்த போலீஸ்
நிலையத்துக்குன்னு பிரித்து இருப்பார்கள். ஏதாவது பிரச்சினை என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு சென்றால் இது எங்க எல்லை இல்லை அந்த போலீஸ் நிலையத்துக்கு செல்லுங்கள் என்று இரு போலீஸ் நிலையங்களும் அலைய வைத்திருப்பார்கள்.கடைசியாக ஒரு நிலையத்தில் புகாரை பெற்றுக்கொள்வார்கள். மக்களை அடக்குவதில் மட்டும் இந்த எல்லை
பிரச்சனையை தொடமாட்டார்கள்.இதே மாதிரி குடியிருக்கும் வீட்டிற்க்கும் நான்குமால்கள் என்று சொல்லப்படுகின்ற எல்லைக்கல் இருக்கும்.
அடையாளத்துக்காக குத்துக்கல் ஊன்றப்பட்டு இருக்கும் அதற்கான ஆவனம் மற்றும் புலப்படம் இருக்கும். இந்த மண்தரையில் இவ்வளவு அடையாளம் இருந்தும் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தீர்க்கப்படாமல் குவிந்து கிடக்கும் நிலையில்

பரந்துவிரிந்த கடலில் எந்த அளவு குத்துக்கல்லை நட்டு வைத்து மீனவர்கள் எல்லை தாண்டி செல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்..ஆளும் கும்பலுக்கும் சாதகமாக இருந்தால் சர்வதேசகடல் பிரச்சினையாவது எல்லை பிரச்னையாவது. எந்த விதியும் கிடையாது. அதுவே சாமானிய மக்களாக இருந்தால் விதி,எல்லை அளவு என்று எல்லா மயிறும் களத்தில் வந்து நிற்க்கும்.

ஏற்கனவே, தமிழக மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள மீனவர்களுக்கு துப்பாக்கி வழங்கவேண்டும் என்று மனித உரிமை பாதுகாப்ப மையம் மதுரை கிளை இதே மன்றத்தில் வழக்கு போட்டது. ஓரிரு விசாரனைக்குப்பின் அவ்வழக்கு கிடப்பில் போடப்பட்டது சமாதி கட்டுவதுதான் பாக்கி இருக்கிறது. இதே மாதிரி ஒவ்வொரு வழக்கிலும் உத்திரவு போடுவது.அதை அமுல் படுத்தாத அதிகாரிகளுக்கு மறு உத்திரவு போடுவதும். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமுல்படுத்த மறுத்து திசை திருப்புவது ஒத்தி போடுவது இப்படியே ஒத்தி போட்டு வழக்குகள் தேங்குவதும்.  பிறகு மலத்தைவிட மலம் துடைக்கும் பேப்பர்கள் பெருகுவதும்தான் தீராத நிலையாக உள்ளது.பிறகு இந்த மலம்துடைக்கும் பேப்பர்களின் எண்ணிக்கையை வைத்து இந்தியா வல்லரசாகிறது என்று கூப்பாடு போடுவதுமதான் நடக்கிறது..

4 comments :

 1. தமிழக மீனவர்கள் பிரச்சினையும், இலங்கை மீனவர்கள் பிரச்சினையும், பாகிஸ்தான் மீனவர்கள் பிரச்சினையும், குஜராத் மீனவர்கள் பிரச்சினையும் என்று இது பல பரிமாணம் எடுக்கிறது... இன்னும் சொல்லப் போனால் தமிழக மீனவர்களை விட அதிகம் அவதிப் படுபவர்கள் குஜராத் மீனவர்களும் பாகிஸ்தான் மீனவர்களும் என்பது என் எண்ணம்... இதை மத்திய அரசு தான் முயற்சி எடுக்க வேண்டும்... மத்திய அரசுக்கு இப்போதைக்கு தலைவலியை இந்த பிரச்சினைகள் வந்தால் தான் இதற்க்கு விடிவு கிடைக்கும்

  ReplyDelete
 2. தங்களின் ஆதங்கம் சரியானதே...

  இதில் பல விஷயங்கள் புதைக்கப்படுகிறது... விடியல் பிறக்கும்...

  ReplyDelete
 3. இந்த உத்திரவை ரத்து செய்யக்கோரி கடலோர காவல்
  படை ஜெனரல் மனுதாக்கல் செய்துள்ளார். “ஏனைய்யா,இந்த உத்திரவ அமுல்
  படுத்தல என்று கேட்டால்.//
  சரியான சவுக்கடி..

  ReplyDelete
 4. வருகை தந்தவர்களுக்கும்,கருத்துரை
  வழங்கியவர்களுக்கும் மனம் திறந்த நன்றிகள்.

  ReplyDelete

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!