பக்கங்கள்

Monday, November 28, 2011

உண்மையில்லை! வதந்தியை நம்பாதீர்கள்!!!

ஓட்டு போட்டு ஓய்ந்து போனவர்களுக்கும்
ஓட்டு போட ஓயாமல் இருப்பவர்களுக்கும்
ஒட்டு போட காத்து இருப்பவர்களுக்கும்
ஓர் அறிவிப்பு!!!.............................................

இந்திய நாட்டிற்கு பொதுவுடமை
அப்பத்தை குறைந்த விலையில்
பாதிப்பு இல்லாமல் வாங்கித்
தருவதாக வேஷம் போட்டு
இதுநாள் வாங்கித் தராமல்
காலம் கடத்தி வந்த சாயம்
வெளுத்த இடது.வலது
பட்டாதாரர்களில் ஒருவரான
பீமன் போஸ்-என்பார்

மக்கு அவையில் இடது பட்டா
தாரர்கள் எண்ணிக்கை குறைவாக
இருந்ததால் “சில்லரை வணிகத்தில்
அன்னிய முதலீட்டை அனுமதிக்கும்”
துணிச்சலான முடிவை மத்திய அரசு
மேற்க் கொண்டதாகவும்.......

குறைவான பட்டாதாரர்களைக் கொண்டு
மத்திய அரசின் துணிச்சலை கட்டுப்
படுத்த முடியவில்லையெனவும்
இருந்தாலும் “உள்ளேயும்-வெளியேயும்”
எதிர்ப்போம் என்றும்....................................

இடது,வலது பட்டாதாரர்களின்
ஆதரவு இல்லாமல் மத்திய அரசு
ஆளுவதால்.......... இந்நிலையாம்

இந்த அண்டப்புளுகு மற்றும் ஆகாயப்
புளுகை நம்பி ஏமாற வேண்டாம்
இது உண்மையில்லை!!! வதந்தியை
நம்பாதீர்கள்!!! நம்பி ஏமாறதீர்கள்!!1

9 comments :

  1. ரொம்பவும் சூப்பர் நல்ல ஆக்கம் தொடருங்கள்

    ReplyDelete
  2. என்னய்யா நடக்குது நாட்ல...

    ReplyDelete
  3. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****


    .

    ReplyDelete
  4. வருகைக்கும்,கருத்துரைக்கும்,அறிவித்தலுக்கும் நன்றிகள் பல.

    ReplyDelete

” கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்பட்டுவிட்டது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க”.........!!