வெள்ளி 02 2011

பெட்ரோல் விலை குறைப்பு!! அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

பெட்ரொல் விலை குறைப்பு
 அய்யயோ! எனக்கு பயமாக
இருக்கிறதே !!

எண்ணெய் நிறுவணங்களும் சரி
பாழாய் போன அரசாங்கமும் சரி
அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

இந்த அரசும் எண்ணெய் நிறுவணங்களும்
கந்து வட்டிக்காரர்களின் பங்காளியாச்சே!

குறைத்ததை வட்டி முதலுமாய் எப்போ?
ஏத்துவாங்கன்னு தெரியலையே ?
அய்யயோ! எனக்கு பயமாக இருக்கிறதே!

விலை ஏத்தினதை குறைக்க மாட்டோ
முனு சொன்னவங்களாச்சே!

பால் விலை ஏறிப்போச்சு!
பஸ் டிக்கெட்டும் ஏறிப்போச்சு!
அடுத்து கரண்ட்டும் ஏறப்போகுது
வீட்டுவரியும் ஏறப்போகுது.

எனக்கு வரு மானமும் குறையுது
பிரச்சினையும் பெருகுது. அய்யயோ!
எனக்கு உதறல் தானா எடுக்குதே!

குறைத்த பெட்ரோல் விலையை
ஏத்த மாட்டோம்முனு சொல்லலையே!
சில்லரை வணிகமும் அன்னியனுக்கு
போகுதே! இனி நான் எப்படித்தான் வாழ்வது?

முல்லை பெரியாறு உடையப்போகுதுன்னு
கேரளாக்காரனும் புளுகுறானே!!

சிலர் போராடுகிறார்கள்
பலர் என்கென்னனு இருக்கிறார்களே!

நான்வாழ என்னதான் செய்வது????



3 கருத்துகள்:

  1. ஏழ்மையை ஒழிக்க நவீன் யுக்தி, ஏழைகளை ஒழிப்பது...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. தலைமைப் பதவியில் ஒன்று அல்ல பல முதலைகள் இருப்பதை நினைக்கும் போது...
    எனக்கும் பயமாகதான் இருக்கிறது...

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...