திங்கள் 19 2011

ரிலையன்ஸ் அம்பானி கைது செய்யப்படுவாரா?????........

ஜோசப்,கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்திடம் 24 ஆயிரம் ரூபாய் விலையுள்ள செல்போன் ஒன்றை வாங்கினார்

அந்தச் செல்போன் இணைப்புக்கு குறிப்பிட்ட காலம் வரை ஏராளமான வெளி  அழைப்புகளும் எஸ்எம்எஸ்களும் இலவசமாக பெறலாம் என்று ரிலையன்ஸ் கூறியிருந்தது.

அவர் பலமுறை முயற்சி செய்தும் எதுவும் கிடைக்கவில்லை.கடைசியாக திருச்சூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில்(2005-ல் ) வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில்,செல்போன் விலையான 24 ஆயிரத்தையும் அய்ந்து ஆண்டுக்கான 12 சதம் வட்டி தொகையையும் சேர்த்து ஜோசப்புக்கு ரிலையன்ஸ் நிறுவனம் வழங்குமாறு உத்திரவிட்டது.

ரிலையன்ஸ் நிறுவனமோ, இந்த உத்திரவை மதிக்கவில்லை. ஜோசப் விக்கிரமாதித்தானாக திரும்பவும் கோர்ட்டையே நாடினார். நுகர்வோர் கோர்ட் நீதிபதியான பத்மினி, பதில் அளிக்காத ரிலையன்ஸ் அதிபரை கைது செய்ய உத்திரவு பிறப்பித்தார்.

ரிலையன்ஸ் அதிபர் இந்தியாவின் பெரும் பணக்காரர் தொழில் அதிபர் என்பது நீதிபதிக்கு தெரியாமலா இருக்கும். அதனால்தான் என்னவோ,2012 வருடம் பிப்ரவரிக்குள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்ய உத்திரவிட்டார்

ஏற்கனவே,முல்லை பெரியாறு வழக்கில் உச்ச.....நீதி.........மன்றமே உத்திரவிட்டும கேரள அரசு அமுல்படுத்தாமல் சண்டித்தனம் செய்யும்போது ஜோசப்க்காக மாவட்ட நுக்வோர் கோர்டடுஉத்திரவுதானாஅமுல்படுத்தப்படும்

ரிலையன்ஸ் அதிபரோ.பொதுத்துறையான பிஎஸ்என்எல்க்கு பட்டை நாமாம் போட்டு கொட்டைபோட்டு கொழுத்தவர் அவரைப்போயி கைது செய்ய முடியமா??ஃ

இந்திய ஸனநாயக நாட்டில் சட்டத்தின்முன் அனைவரும் சமமுன்னு எப்படியெல்லாம் பாமரனை ஏமாத்துறாங்க. பாருங்க!!!!!!!! 

2 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...