சனி 24 2011

அஞ்ஞானத்தை பறைசாற்றும் ஊடகங்கள்



பகுத்தறிவு பெரியாரை சந்தித்த தொண்டர் ஒருவர். தன்னுடைய கலப்பு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி தரும்படி பெரியாரிடம் கேட்டார்

பெரியார் வியப்படைந்து , கலப்பு திருமணத்திற்கெல்லாம் நான் தலைமை தாங்கி நடத்திக்கொடுக்கமுடியாது என்று மறுத்தார்.அனுமதி கேட்ட தோழர்க்கு மன வருத்தம் உண்டாகியிருந்தது. அதைக் கவனித்த பெரியார்.

தோழரை அருகில் அழைத்து.கலப்புத்திருமணம் என்பது மனிதனுக்கும் வேறு
பிராணிகளுக்கும்அதாவது வேற்று உயிரினங்களுக்கு நடப்பதுதான் கலப்பு திருமணம்.

நீங்கள் நடத்தும் திருமணம் சாதிமறுப்பு திருமணம்.,சுயமரியாதைத்திருமணம்
இவற்றை கலப்பு த்திருமணம் என்று கூறியதால்தான் நான் தலைமை தாங்க முடியாது என்றேன், என்றார்.

தோழர்கள் சாதிமறுப்பு திருமணத்தை,சுயமரியாதை திருமணத்தை கலப்புத்திருமணம் என்று கூறக்கூடாது என்றார்.

வந்திருந்த தோழர் தன்தவற்றை திருத்திக்கொண்டு,மீண்டும் பெரியாரிடம் சாதி மறுப்பு திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்திக் கொடுக்கும்படி கேட்டது போது சந்தோசமாக ஒப்பதல் அளித்தார்.

இந்த சுயமரியாதை திருமணத்தையும்,சாதிமறுப்பு திருமணத்தையும் இன்றைய வேசித்தனம் நிறைந்த ஊடகங்களால் கலப்பு திருமணம் என்றே பறை சாற்றி வருகின்றன. இந்நாளில் பெரியாரை நிணைப்பதோடல்லாமல் அவருடைய சிந்தனை.செயல்முறைகளை நினைவுகூர்ந்து அவர் வழி நடப்பதே. பெரியாருக்கு ஒடுக்கபட்ட,தாழ்த்தப் பட்ட மக்கள் நிணைவு கூர்வதற்கான வழி.

2 கருத்துகள்:

  1. தம் பேத்தி வயதுள்ள பெண்ணை முடிச்ச திருமணத்துக்கு பெயர் "சாதி மறுப்பு திருமணமா" அல்லது "வயது மறைப்பு திருமணமா"

    பதிலளிநீக்கு
  2. அப்பவே.பிதாமகன் அண்ணா எதிர்த்தபோதே,அதற்கான காரணத்தை சொல்லி இருக்காருங்கார்.நண்பரே! அண்ணாவைப்போல்.”நான் முற்றும் துறந்த முனிவரும் இல்லை,அவளோ படி தாண்டா பத்தினியுமல்ல” என்று வசனம் கிசனம் பேசவில்லை பொரியார்.

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...