ஞாயிறு 25 2011

தேனி மாவட்ட வானிலை அறிக்கை!

முல்லை பெரியாறு அணைக்காக ஒரு லட்சம் பேர் பேரணி

தமிழகத்தின் மேற்கு எல்லைகளான லோயர்கேமப்,கூடலுார், கம்பம் போன்ற பகுதிகளில்,சட்டம் ஒழுங்கு கூடுதல் தலைமை இயக்குநர் ஜார்ஜ் என்ற கேரள சனி பகவானும், தென்மண்டல காவல்துறை தலைவராக இருக்கும் ராஜேஸ்தாஸ் என்ற வடமாநில சனி பகவானும் பெரும் எண்ணிக்கையில் தடி, கண்ணீர்புகைக்குண்டுகள்,துாப்பாக்கி போன்றவற்றுடன் மையம் கொண்டுள்ளதால்  பெரியாறு அணைக்காக போராடும் மக்கள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏற்கனவே, பரமக்குடியிலிருந்து நகர்ந்து கேரள எல்லையை ஒட்டி நிலை கொண்டுள்ளதால் பொது மக்கள் இவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்

3 கருத்துகள்:

  1. உங்கள் வக்ரசனி அச்சுதான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்பதையும் மக்களுக்கு தெரிவியுங்கள்!

    பதிலளிநீக்கு
  2. ரமேஷ் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை..

    பதிலளிநீக்கு
  3. வக்ரசனி அச்சு என்பதன் அர்த்தத்தை விளக்கினால் நன்றாக இருக்கும் தலைவரே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...