வெள்ளி 30 2011

கெட்டிக்காரன் புளுகு எத்தனை நாளைக்கு?

அடேங்கப்பா,.........கூடங்குளம் அனு உலையை திறக்கச் சொல்லி கூப்பாடு போடும் ஆதரவாளர்களே!

இதுக்கு என்னையா பதில் வச்சுருக்கிங்க, சப்பான் நாட்டில் புகுஷிமா நகரில் ஆழிப் பேரலையால் சிரழிந்து போன அனுஉலையில் சிக்கியுள்ள எரி பொருளை பக்கவமாக வெளியெ எடுப்பதற்கு 40 ஆண்டுகளும். 78,400 கோடிகளும் தேவைப் படம் என்று அனுஉலை நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

சுற்றுபுறத்துக்கு ஆபத்தில்லாமல் அப்புறப்படுத்துவதற்கு இனிமேல்தான் வழி வகைகள் கண்டுபிடிக்க வேண்டுமாம். கண்டபிடிப்பதற்க்கான ஏற்ப்பாடுகளை   செய்வதற்கே. பத்து ஆண்டுகள் ஆகுமாம். அந்த வேலையைச் செய்வதற்கு இனிமேல்தான் ரோபட்டுகளை தயாரிக்க வேண்டுமாம்.

கதிரியக்க ஆபத்து 40 ஆண்டுகளக்கு மேலும் நீடிக்குமாம். அதிலும் 78,400 கோடியானது அனுஉலை எரிபொருளை எடுப்பதற்கு மட்டும்தானாம். மற்ற செலவுகளெல்லாம் தனியாம். என்னங்கப்பா....இதெல்லாம் .......
.சொல்றதெல்லாம் சுரைக்காய்க்குஉப்பு இல்லைங்கிறகணக்கா........
அனுஉலைக்கு ஆபத்து இல்லை.அனுஉலை மின்சாரம் மலிவானது.கதிரியக்கம் ஏற்பட்டாலும் சிகிச்சை செய்து தடுத்துவிடலாம் என்றும்...அண்டப்புளுகு,ஆகாசபுளுகுன்னு புளுகித் தள்ளிவிட்டு “ முளச்சா முளைக்கட்டும் முளக்காட்டி போகட்டும்” என்ற கணக்கா இன்னமும் விதைக்கிறேங்களப்பா?.

சாதாரன காய்ச்சலுக்கே தர்ம ஆஸ்பத்திரியில மருந்து இல்ல,ஊசி
இல்லேன்னு சுகப்படுத்த முடியல, இதுல கதிர்வீச்ச சிகிச்சை செய்து தடுத்துவிடலாமுன்னு காதுல ஒரு முலம் புவ வேற சொருகிறிங்களேய்யா?

இதுல. எங்க சூத்து காயுது, குண்டி குறையுதுன்னு அனு உலையை திறக்கச் சொல்லி உண்ணாவிரதம் வேறு,  நேர்மை திறன் எதுவுமில்லாம.போராட்ட
உறுப்பினரை கைது செய்ய சொல்லி வழக்கு வேறு.இந்த வழக்கு பேரு பொது
நலவழக்குன்னு பெத்த பேரு வேறு.................

இந்த எழவுல,டீ.வியில “ கூ்டங்குளம் அனுமின் திட்டம் நாட்டுக்கு நல்லதோர் திட்டமுன்னு” விளம்பரம் மற்றும்“ பிரபஞசத்தின் பெருமை கூடங்குளம்” பத்திரிக்கையில புளுகினித்தனம் வேறு இதுக்கெல்லாம் பஞ்சமேயில்லப்பா?

 சுனாமி வந்த பாதிப்பையே சரி செய்ய முடியாம வக்கத்து இருக்கிற நீங்க....
அனுஉலையைப்பத்தி எப்படியெல்லாம்  என்னனென்ன வழிகளெல்லாம்புளுகித் தள்ளுங்க..இந்த கெட்டிக்கார புளுகு எத்தனை நாளைக்கு??தான்னு நிலைக்குன்னு பார்க்கத்தானே போறோம். நீங்க இல்லேன்னாலும் உங்க வாரிசுக பாக்கத்தானே போகும்..

2 கருத்துகள்:

  1. ஒரே ஒரு தானே புயல் தாக்கியதர்க்கே மின்சாரம் இல்லையாம் கடலூரிலும் அதன் சுற்றுப் புறத்திலும்.. தானே புயலையே சமாளிக்க முடியல, இவனுங்களுக்கு சுனாமி பூகம்பம் எரிமலை என்று கிளம்பினா... ஜப்பான் காரன் மாதிரியே சொல்வானுங்க... ஜப்பான் காரன் என்ன சொல்றான் தெரியுமா... இருபது அடி அலை வரும்னு தான் நாங்க கற்பனை பண்ணி சுவர் எழுப்பினோம்... ஆனா கற்பனைக்கு அதிகமா சுனாமி வந்ததால் தான் இந்த பாதிப்பு அப்படின்னு கூலா அறிக்கை விடறான்...

    பதிலளிநீக்கு
  2. இங்க இருக்கிறவன் அதைவிட ஒருபடிமேல நின்னு அறிக்கை விடுவான். வல்லரசு கணவு சொல்லுவான்

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...