வியாழன் 05 2012

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்???


Doctors, nurses, house surgeons go on strike - Tamilnadu News Headlines in Tamil








துாத்துகுடியில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பாதுகாப்பாக இருந்தவர்களைல்லாம் பாதுகாப்பு கேட்டு திடீர் வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

இவர்களின் வேலை நிறுத்தத்தால் எந்த முதலாளிக்கும் உற்பத்தி பாதிப்பு ஏற்படப்போவதில்லை. அரசு மருத்துவமனையே கதியென்று கிடக்கும் சாமானியன்தான் பாதிக்கப்படுவான். அதனால் அரசு டாக்டர்களும் சரி தனியார் முதலாளி டாக்டர்களும் சரி இந்த போராட்டத்தால் பாதிப்படைய போவதில்லை. இவர்களுக்கு சாமானியனைப்பற்றி கவலையில்லை.ஒருநாள் இந்த சாமானியனும் அருவாளை துாக்கிடக்குடாதுன்னு ஒரு முன்னெச்சரிக்கையாகத்தான் தங்களுக்கு பாதுகாப்பு கோரி போராடுகிறார்கள்.

இவர்களுக்கு விலைவாசியைப்பற்றியோ,முல்லைப்பெரியாறு பற்றியோ, சிகிச்சைக்கு வரும் சாமானியனின் வாழ்வுதாரத்தைப்பற்றியோ, கூடங்குளம் அனுஉலையைப்பற்றியோ எந்தக் கவலையும் இல்லை. அவர்களின் பாதுகாப்பு பற்றித்தான் கவலை..

நீதியான. நேர்மையான மருத்தவர்கள் இருந்தார்கள் .ஒரு காலத்தில் அவர்கள் எல்லாம் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு விட்டார்கள்.

இந்த டாக்டர்களின் போராட்டத்தைப்பற்றி எல்லா ஊடகங்களும் தங்களுக்கு தோதான பாதிப்பு இல்லாத வகையில் தலையங்கம் தீட்டி வெளியீட்டுள்ளன.

அரசு மருத்துவர்களும் சரி,தனியார் மருத்துவர்களும் சரி, இந்த சமூகத்தை வாழ்விக்க வந்தவர்களா? என்றால், இல்லை என்பதே என்னுடைய அனுபவமும் நிகழ்கின்ற நிகழ்வகளுமே சாட்சியாக விரிகின்றன.

 ரவுடி ஒருத்தன் டாக்டரை வெட்டி கொலை செய்துவிட்டான் என்றுதான் பேசுவார்கள்.ரவுடி ஏன்? கொலை செய்தான் அதன் சமூகக் காரணமென்ன என்று ஒருசிலர்தான் சிந்திப்பார்கள். டாக்டர்களிடம் சென்று அனுபவம் பெற்றவர்கள் இப்படி பேசமாட்டார்கள்.

மருத்துவ தொழிலை சேவைத் தொழிலாக.உன்னத தொழிலாக பேச்சிலும்,
எழுத்திலும் உள்ளதே தவிர. நடைமுறையில் வேறு மாதிரியாக உள்ளது.
பணம் காய்க்கும் தொழிலாகவும் போலீஸ் துறையைப்போல் பாதுகாப்பான துறையாகவும் உள்ளது.

பல மாடி கட்டிடங்களால் எழுப்பப்பட்ட,.சமீபத்தில் பிரதமர் காரைக்குடியில் திறந்து வைத்த மருத்துமனைகள் உள்பட,ஏழை,எளிய நோயாளி மக்களுக்காக
சேவை செய்வதற்காகவே திறக்கபட்டன என்று சொன்னால்இதை கிருக்கன் கூட நம்புவானா?

அரசு மருத்துவர்களுக்கும்,தனியார் மருத்துவர்களுக்கும் இல்லாத பாதுகாப்பா
அவர்கள் அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் நோயாளிடமோ? உறவினர்களிடமோ? அறுவை சிகிச்சையில் தவறு நேர்ந்தால் அந்த தவறுக்கு
அறுவை சிகிச்சை செய்த மருத்துவரோ,மருத்துவ நிர்வாகமோ பெருப்பல்ல,
நோயாளியே பொருப்பு. என ஓப்பதல் கையெப்பம் பெற்று பாதுகாப்புடன்தான்
இருக்கிறார்கள். இன்னும் இவர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமாம்.

இதோடு, அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையில் போதிய கவனமின்றி பயிற்சி மருத்துவர்களை செய்யச் செய்கிறார்கள். இவர்களாலும்
சிரத்தையில்லாத மருத்துவர்களால் நுத்துக்கு பத்துப்பேரைத்தவிர மற்ற தொண்ணுாறு நோயாளிகள் பாதிப்படைகிறார்கள். அந்தப் பத்துபேரில் ஒருவர் பிழைத்ததை வைத்து படம் காட்டி பீத்திக்கொள்கிறார்கள்.

அப்படிதவறான சிகிச்கையில் தவறு ஏற்ப்பட்டாலும் அதை சரி செய்வதற்கு முன் முயற்சி செய்வது இல்லை.அம்போன்னு விட்டுவிடுகிறார்கள்.காசு பணத்தை ரெடிபண்ணி தனியார் மருத்துவமனையில் சென்று அவர்கள் கேட்கும் பணத்தை கொடுத்துதான் காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

அப்படிக்கேட்கும் பணத்தைக் கொடுத்தும் சாகடிப்பதில்தான் .ஆத்திரம் தாங்கமாட்டாமல் ஒரு சிலரால் கொலை.வெட்டு நடக்கிறது.போலி மருத்துவர்களைப் பற்றி கூப்பாடு போட்ட இவர்கள். அவர்களைவிட பாதுகாப்பகத்தான் இருக்கிறார்கள். அலோபதி மருத்துவத்திற்கு எதிராய் குறைந்த செலவில் மாற்றுமுறை மருத்துவம் இருந்தாலும். இந்த அரசும் சரி. இவர்களும் சரிஅதை புறக்கணித்தே வந்தள்ளனர்.

ரவுடியின் குணமென்ன,வழிப்பறி செய்வது, மிரட்டுவது, தன்னைக்கண்டு மற்றவர்கள் பயந்து அடங்கவதுதானே? அத்தகைய ரவுடிக்கே“ பணம் கட்டினால்தான் அடுத்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும்” என்று
உத்திரவு போட்டு, அந்த ரவுடியிடம் பண்மும் கறந்துவிட்டு பொருப்பில்லாமல்
பேசினால்.....................................................சாமானியன் என்றால் மண்ணைவாரி துாத்திவிடடு  நாசமா போக என்றுதிட்டிவிட்டுபோவான்.

போலிசார் கூற்றுப்படி.ஏற்கனவே ரெண்டு கொலை வழக்குல இருக்கிறவன்.ரவுடி என்று பட்டம் வாங்கியவன் மண்ணைவாரி துாத்திவிட்டா போவான். அவனுடைய கணக்குப்படி ஆளையே துாக்கிவிட்டான் உண்மையில் நடந்தது என்ன என்று நாள்பட்டுதான் தெரியும். தவறு மருத்துவரின் பக்கம் இருந்தால் ஒத்துக்கொள்வார்களா?.

அரசாங்க மருத்துவர் உத்தியோகம் பார்த்துக்கொண்டே,தனியாக  மருத்துவமனை தொழில் தொடங்க அவர்களுக்கு வசதியிருக்கிறது். சிகிச்சை
யில் தெரிந்தோ, தெரியாமலோ ஏற்ப்படும் தவறுகளிலிருந்து பாதுகாத்து கொள்ளவும்வழியுமிருக்கிறது, வசதியுமிருக்கிறது..

பாவப்பட்ட சனங்கள் நோய்நொடிகளிலிருந்தும்.கொலைகார போலீஸிடமிருந்தும், கேடுகெட்ட ஆட்சியாளர்களின் கொலைக்கலங்களிலிருந்தும் வசூல் ராஜா மற்றும் ராணிகளிடமிருந்து தப்பிக்கத்தான் வழியில்லை.

முடிவாக, அங்கீகாரம் பெற்ற போலீசைப்போலவே, அங்கீகாரம் பெற்ற  மருத்துவர்களும்,இதில் அங்கீகாரம் பெறாதவர்களைக் காட்டிலும் அங்கீகாரம்
பெற்றவர்கள் ஈவு இரக்கமற்ற வர்கள், அறிவியலையும் உடல்கூற்றையும் கற்று அறிந்த படுபாதகர்கள்.

போலீஸ் துறையைப்போன்றே,இந்த மருத்துவ துறையும் உன்னதமானவை இல்லை.

5 கருத்துகள்:

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...