பக்கங்கள்

Monday, January 16, 2012

இறப்பு வரை புத்தகம் வாசித்த பிதாமகன்!
பிதாமகன் என்றதும் விக்ரம்,சூர்யா நடித்து
சைக்கோ“சேது பாலா”இயக்கிய பிதாமகன்
சினிமா படம் அல்ல இது.

பகுத்தறிவு பேசி,ஆரியர்,திராவிடர் கொள்கை
முழக்கமிட்டு கடமை,கண்னியம்,கட்டுப்பாடு
பஞ்ச் டயலாக் அப்பவே பேசி,அந்த பிதாமகனின்
வாரிசுகளால் எதையும் தாங்கும் இதயம் என்று
புகழாரம்சூட்டபட்ட,டாஸ்மாக் அருந்தாத போதை
கூட்டத்தையும்,வாய் சொல் வீரர்களையும்
 பொழைப்புவாதத்தையும் சுயநலத்தையுமே
கொண்ட ஒருகூட்டத்தை வளர்த்து பெரிய
மரமாக்கி படரவிட்ட பிதாமகனைப் பற்றியது.


இத்தகைய சிறப்புகளை  கொண்டவெத்திலை
பெட்டிக்கு பிதாமகன் என்ற பட்டத்தை கொடுத்து
சிறப்பித்தவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

இந்த பிதாமகன் ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும்
பெரும் புலமை பெற்றவரென்று ஒரு புத்தகத்தில்
படித்த ஞாபகம். இவர் தமிழ் நாட்டின் முதலமைச்
சராக இருந்தபோது நோய்வாய் பட்டதினால்

அறுவை சிகிச்சைக்காக மருத்துமனையில்
அனுமதிக்கப்பட்டு இருந்த நேரத்தில். அறுவை
சிகிச்சை செய்கின்ற வெளிநாட்டு மருத்துவர்

ஒருவர் அவரிடம் வந்து,“இன்றைக்கு உங்களுக்கு
அறுவைசிகிச்சை தயாராக இருங்கள்” என்றாராம்.

அதற்கு அந்த பிதாமகன்.சொன்னாராம்,
இன்றைக்குஅறுவை சிகிச்சை வேண்டாம்.
நாளைக்கு செய்யுங்கள் என்றாராம்.

பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவர்
பிதாமகன்என்று தெரியாத அந்த டாக்டரோ,
“ ஏன்? இன்றைக்கு நல்லநாள் இல்லீயா”?
 என்று வியப்புடன் கேட்டாராம்

அதற்கு. இந்த பிதாமகன். சிரித்துக்
கொண்டே ஆங்கிலத்தில் சொன்னராம்.
“இல்லை,டாக்டர்.ஒரு புத்தகத்தை படித்துக்
 கொண்டு இருக்கிறேன். இன்று இரவுக்குள்
 படித்து விடுவேன். அறுவை சிகிச்சையில்
நான் பிழைக்காமல் போனால்,
இந்தப் புத்தகத்தை படிக்க முடியாமல்
போய்விடும். அதற்கு என்மனம்
இடம் தரவில்லை என்றராம்.

பகுத்தறிவு பாசறையிலிருந்து வந்தவர்
இந்தபிதாமகன்என்பதுகூடதெரியாதவீடு,
மருத்துவமனை,துட்டுஇப்படியாகஇருக்கும்
அந்தவெளிநாட்டுமருத்துவர்.இப்படிபட்ட
அபுார்வமானமனிதரைஅவர்கண்டது
மில்லை.கேட்டதுமில்லை என்றாராம்.

பிறந்து,வளர்ந்து உணவுக்கு பரிதவித்து
எண்ணும் எழுத்தும் அறியாமல் உழைத்து
ஓடாகிப் போகி மறைந்து போன மக்களின்
படிப்பறிவுஇல்லாத அறைகுரை படிப்பு
உள்ள வாரிசுகள் இருக்குவரை இப்படிப்
பட்ட பிதாமகனின் புகழ் பிழைப்பு வாத
வாரிசுகளால் துாசித்தட்டி பறக்க
விட்டுக்கொண்டே இருப்பார்கள்


6 comments :

 1. பகுத்தறிவு இருக்கிறவரை சமூகம் ந்ன்றாய் இருக்கும். அதை காயடித்து காயப்படுத்தத்தானே இத்தனை வேலைகளும்/

  ReplyDelete
 2. சரியாய் சொன்னீர்கள்.கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 3. ராசா வலிபோக்கன்
  முடிவாக என்ன சொல்ல வர்றீங்கே
  அண்ணாதுரை பிழைப்புவாதிகளின் பிதாமகன் இல்லையேன்று சொல்லுகிறீர்களா?

  ReplyDelete
 4. தலைப்பையும் கடைசிவரியையும் படித்து பாருங்கள் தலைவரே! பிதாமகனின் புகழ் பிழைப்பு வாத
  வாரிசுகளால் துாசித்தட்டி பறக்க
  விட்டுக்கொண்டே இருப்பார்கள்

  ReplyDelete
 5. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது எனக்கும் விளங்கவில்லை.

  ReplyDelete
 6. பிழைப்பு வாதத்தின் பிதாமகன் சாகுற வறைக்கும்கூட புத்தகம் படித்துக்கொண்டே இருந்தாரம் என்று புகழ்மாழை சூட்டுகிறார்கள் என்பதை சொல்கிறேன்

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com