சனி 21 2012

பாம்பும் நோகாமல் தடியும் சாகாமல் ஒரு போராட்டம்

டிசம்பர் 26 தேதி திங்கள் கிழமை மாலை மூன்று மணிவாக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள தாலுகா ஆபிஸிற்கு என் இடத்து சம்பந்தமாக சென்று இருந்தேன்.

அங்கிருந்த அதிகாரிலிருந்து உதவியாளார் வரை ஆண்பெண் பேதமின்றி எல்லோரும் கருப்பு பேட்ஜ் அண்ந்திருந்தனர். அனறையதினம் முல்லை பெரியாறு பிரச்சினைக்காக தமிழகமே போரடிக்கொண்டிருந்த நேரமிது அன்றைய தினத்தில் பிரதமரு மண்ணுமோகன் வேறு தமிழகத்திற்கு வருகைதந்து காரக்குடியில் ரெண்டு தனியார் மருத்துவமணையை திறந்து வைப்பதற்காக வந்திருந்தார்.

மண்ணுமோகனு வருகையை எதிர்த்து கருப்பு கொடி காட்டப்போவதாக சில கட்சிகள் அறிவிப்பு வேறு செய்திருந்ததால். பரபரப்பான நேரங்கள். இந்த நேரத்தில்   முல்லை பெரியாறு பிரச்சினைக்குதான் எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்திருக்கிறார்கள் என்று அக மகிழ்ந்து .

ஆகா,பராவாயில்லையே, தமிழகத்துஉரிமையை தெரிந்து  எதிர்ப்பும் தெரிவிக் கிறார்களே! என வியப்படைந்தேன். அந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதறக்காக, அலுவலர் ஒருவரை அணுகி கருப்பு பேட்ஜ் அணிந்
திருப்பதற்க்கான விவரத்தைக் கேட்டதும்.

எனக்கு சப்பென்றாகிவிட்டது.வியப்பும் மகிழ்ச்சியும் வந்த சுவடு தெரியாமல் ஓடி விட்டது.அவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பதற்க்கான காரணம் இதுதான் திருநெல்வேலி மாவட்டம் அம்பையில் தாசில்தார் ஒருவர் மேல்அதிகாரியின் டார்ச்சலாலும்,வேலைப்பளுவாலும் மனஉளைச்சல் ஏற்ப்பட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.

அவருக்கு துக்கம் தெரிவிப்பதற்க்காகதானாம் கருப்பு பேட்ஜ் அணிந்து இருக்காங்கலாம்.மாலையில் ஆறு மணிக்கு மேல்  மாவட்ட வருவாய் அலுவலர் சங்கம் சார்பாக அலுவலத்திற்கு முன்பாக இரங்கள் கூட்டம் நடக்கப்போவதாக தெரிவித்தார்.

அப்போதுதான் இரங்கலுக்கும் கருப்பு பேட்ஜ் எதிர்ப்புக்கும் கருப்பு பேட்ஜ் என்ற விபரம் புரிந்தது. என்னைப் போன்றே மனு கொடுத்து அலைந்து கொண்டு இருந்த ஒருவர், “நீங்க என்னான்னு நினெச்சு கேட்டீங்க என்றார்.

தயக்கத்துடனே, முல்லை பெரியாறு பிரச்சினையில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்காங்கன்னு கேட்டேன் என்றேன்.

சுத்த அப்பாவித்தனமா, இருக்கிறாயே என்று பார்த்தவரே,“இங்கு கூடங்குளம் அணு உலையே வெடித்து கதிர்வீச்சு வந்தாலும்  இவன்களுக்கு எந்த பாதிப்பும் வராது . அப்படியே, வந்தாலும் அப்போதும் கருப்பு பேட்ஜ் அணிந்திருப்பார்கள் என்றார்.

அவர் சொல்வதும் எனக்கு உண்மையாகவே பட்டது. என் இடத்து விசயமாக வெள்ளிவிழாவையும் தாண்டி அய்ந்து வருடத்துக்கு மேலாக அலைந்து கொண்டு இருக்கிறேன். துாணுக்குக்கூட ஈரம் வந்துவிட்டாலும். இவர்களுக்கு வந்துவிடாது என்பதும் புரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...