பக்கங்கள்

Tuesday, January 24, 2012

அடி விழுந்ததால் கம்யுனிசத்தை கை கழுவிய முன்னால் திரைப்பட டைரக்டர்.

முதன்முதலாக நடிகை தேவிகாவை அறிமுகப்படித்தியவர்.திரைப்படத்திற்கு கதைவசனம் எழுத பாலசந்தரை இறக்குமதி செய்தவர்.கருரில் வசித்துவந்த நாகேஷ்சை திரைப்படத்துக்கு இழுத்துவந்தவர். சீறிரங்கத்தில் ரங்கநாதனின் மனைவியை வர்ணித்துக் கொண்டு இருந்த வாலியை சினிமாவில் பாட்டெழுதஅழைத்துவந்தவர்.நாற்பதுபடங்களுக்குமேல்இயக்கி,அய்ம்பதுக்கு மேற்ப்பட் புத்தகங்களை கிறுக்கி தள்ளி,82 வயதாகும முன்னால் டைரக்டர்தான் முக்தா என்ற அடைமொழியுடன் கூடிய முக்தா சீனிவாசன் என்பவர்

படிப்பதற்கு பணம் இல்லாமல்,வாழ வழியில்லாமல்,வேலை கிடைக்காமல் ரெம்பவும் கஷ்டப்பட்டராம்.இந்த கஷ்டத்தால் பணக்காரர்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டு கம்யுனிசத்தை நோக்கி வந்தாராம்.

அன்றைய நாளில் கம்யுனிசக்கட்சி தடை செய்யப்பட்டதால் இவரும் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டாராம். சேலம் சிறைக் கலவரத்தில் 13 கம்யுனிஸ்டுகள் கொல்லப்பட்டபோது உயிர் பிழைத்தவர்களில் இவரும் ஒருத்தராம்.

நாற்பது படங்களை இயக்கியும் பல படங்களை தயாரித்தும் அன்னதானம்  செய்ய வசதியில்லாததால், அம்பது க்கு மேற்ப்பட்ட புத்தகங்களிலும் இனிஎழுதுகின்ற புத்தகங்களிலும் அறிவுத்தானம் செய்கிறாராம்.

இவரின் சகோதரர் மூலமாக டி.ஆர். சுந்தரத்தின் அடிதாழாமல் இனிமேல் கம்யுனிஸ்டு கடசி நடவடிக்கையில் ஈடுபடமாட்டேன் என்று  போலீஸ் ஸ்டேசனில் எழுதி கொடுத்துவிட்டு விடுதலை அடைந்தாராம். கன்னத்தில்  விழுந்த டி்.ஆர். சுந்தரத்தின் அடியோடு கம்யுனிசத்தை கை கழுவினராம்

இவர் முதன்முதலாக இயக்கிய முதலாளி திரைப்படத்தை பார்த்தவர்களுக்கு முதலாவதாக கிறுக்கி தள்ளிய புத்தகத்தையும் படித்தவர்களுக்கு முன்னால் டைரக்டரை தெரிந்து இருக்கும.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com