பக்கங்கள்

Wednesday, February 01, 2012

கதை கேளு,கதைகேளு, ஏமாந்த கதை கேளு....(.நடந்தவை.)

அவர் சொந்தமாக பிரிண்டிங்-பைண்டிங் தொழில்
செய்தவருகிறார்.. அந்த தொழிலில்அவர் எப்படி
ஏமாற்றப்பட்டார். எப்படி ஏமாந்தார். என்பது பற்றியான
ஒரு சிறு கதைதான். கதைகேளு, கதைகேளு ஏமாந்த
கதை கேளு, என்பது.....

அன்மையில் ஏமாந்த கதையிது.ஏமாந்த கதையில் இது
கூடுதலான் தொகையிது.....ஜனவரி மாதம் பிறந்தது. வேலை
வந்தது. ஒவ்வொரு வேலையாக முடித்துக் கொண்டு
இருந்தார்.பொங்கலுக்கு முதல் நாள்.அவர் தெருவுக்கு
நாலுஅய்ந்து தெருவுக்கு தள்ளி மீனாட்சி நகர் ஒன்னாவது
தெருவில் குடியிருந்துவரும் பால முருகன் என்பவர்.

இவருடைய ஆபிஸூக்கு வந்து நான் கன்னியா குமரியில்
 கெல்த் ஆபிஸராக உள்ளேன். எங்க ஆபிஸூக்கு நிறைய
பிரிண்டிங் அடிக்க வேண்டியுள்ளது. விலையை அனுசரித்து
போட்டால் நிறைய பிரிண்டிங வேலைகள் தருவேன் என்றார்

பிரிண்டிங கூலியை குறைத்து சில வேலைகளுக்கு விலை
விபரத்தைக்கேட்டார்..ஏமாந்தவரும் பிரிண்டிங்-பைண்டிங்
பேப்பர் போன்றவற்றையெல்லாம் சேர்த்து தொன்னுறு
ஆயிரம் வருதாக கணக்கு குடுத்தார். ஏற்கனவே ஒண்ரண்டு
வேலை கொடுத்து வாங்கிச் சென்ற கூலியையே கண்க்கிட்டு
சொன்னார். பாலமுருகனும் சரி இருக்கட்டும் ஒரு லட்சமாக
பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்றுவிட்டு, பிரஸ் பேர்ல
செக்போடவா,உங்க பேர்ல போட்டு வாங்கிவரவா என்று கேட்டார்
பிரஸ் பேர்லயே செக் போட்டு வாங்கிட்டு வாங்க என்றார் இவரும்.

இரண்டு நாள் கழித்து வந்த கெல்த் ஆபிஸர் பாலமுருகன்.செக்கை
என்பேர்ல போட்டுட்டாங்க. பொங்கல் விடுமுறைஎன்பதால்
பொங்கல் கழித்து பணம் எடுக்கச்சொல்லி தேதிய குறிப்பிட்டு
உள்ளதாக சொல்லி செக்கை காண்பித்தார்.(படம்- பார்க்க)


ஒருலட்சத்து அறுபதாயிரத்துக்கான செக் அது. உங்களுக்கு ஒரு
லட்சம் தொகையை மொத்தமாக வாங்கிககிங்க.அதுக்கு முன்னாடி
செக்ல கையெழுத்து போட்ட ஆபிஸருக்கு கமிஷன் கொடுக்க
வேண்டும் என்னிடம் பணமில்லை. நீங்கள் இருபதாயிரம்
கொடுத்தால் கையைழுத்து போட்ட ஆபிஸர்க்கு கமிஷனை
கொடுத்து செட்டில் பண்ணிவிட்டால். பொங்கல் கழித்து செக்கை
பணமாக மாற்றி பிரிண்டிங்க்கான பணம் ஒரு லட்சத்தையும்
 கைமாற்றாக வாங்கிய இருபதாயிரத்தையும் மொத்தமாக
செட்டில் பண்ணிவிடுவேன் என்றார் பாலமுருகன்.

தன்னிடம் அவ்வளவு பணம் கிடையாது என்று மறுத்தார்.
பிரஸ்காரர்.  அப்படியெல்லாம் சொல்லக்கூடாது.உங்களுக்கு
ஒரு லட்சத்துக்கான வேலையிருக்கிறது. நீங்கள் இல்லை
யென்று சொன்னால் வேலை கிடைக்காது. தொழில் பன்றவங்க
முதல்போட்டுத்தான் வேலை செய்யனும். உங்க வாழ்நாள்ல
ஒரு லட்சத்துக்கான வேலைய செஞ்சிருப்பீங்களா?. நல்ல
நேரத்துல சுதாரிக்கனும் . எப்படியாச்சும் தயார் பண்ணுங்க
மெயின்ரோட்டுல ஆபிஸர் நிக்கிறாரு.அவரிட்ட வெயிட்
பன்னுங்கன்னு சொல்லிட்டு வந்துடுறேன். கடனாவது வாங்கிக்
கொடுங்க பொங்கல் முடிஞ்சதும் செக்க மாத்தி வட்டி முதலுமா
கொடுத்திடலாம்என்னைய நம்புங்க என்றார் ஆபிஸர் பாலமுருகன்

பிரஸ்காரரும் அவர் சொல்லியதை அசை போட்டார்.பிரஸ்காரரின்
அக்கா மகன் டூவீலர் விபத்தொன்றில் காலில் அடிபட்டதால் சேமிப்பு
பணம் மற்றம் கடன்வாங்கி இரண்டு லட்சத்துக்கு மேல் செலவு செய்து
கடனளியாகிவிட்டார்..இந்த ஒரு லட்சம் வேலை வந்தால் வாங்கிய
கடனில் வட்டியை கொடுத்து ரிப்பேர் பார்க்க பணமில்லாமல் கிடக்கும்
பிரிண்டிங்மிஷனையையும் சரி செய்துவிடலாம் என்று கணக்கு
போட்டார். தான் போடும் கணக்கு என்றைக்குமே சரியாக இருந்ததில்லை
என்பதை மறந்துவிட்டு,பாலமுருகனின் தேன் ஒழுகும் பேச்சில்
தான் போட்டகணக்கு சரியென்று முடிவு எடுத்தார். பின்னார்தான்
தான்போட்ட கணக்கு தப்பு என்று ஏமாந்து தன்னையே நொந்து
கொண்டார்.

நொந்து என்ன பயன். போன உசுருகூட வந்துரும்,களவாடிட்டு
போன பணம்கூட சில நேரங்களில் வந்துரும்.  நம்பவைத்து மோசடி
செய்த பணம் வருமா?????

தப்பாக கணக்கு போட்டுவிட்டு, அதை ஒருமுறைக்கு இரு முறை
சரி பார்க்காமல், ஆசை கண்ணை மறைக்க,  வாய் பொளந்து விட்டார்
வேறு ஒரு வேலைக்குவாங்கி வைத்துருந்த அட்வான்ஸ் பணத்தையும் பற்றாக்குறைக்குதெரிந்தவர்களிடம் வட்டிக்கு வாங்கி கெல்த் ஆபிஸர் பாலமுருகனிடம் கொடுத்தார்.

பணத்தைப்பெற்றுக்கொண்ட கெல்த் ஆபிஸர் பாலமுருகன்.செக்கை
கொடுத்து பத்திரமாக வைத்திருங்கள் பொங்கல் லீவு முடிந்த மறுதினம்
செக்கை மாற்றி பணத்தை கொடுத்துவிடுகிறேன் என்று உறுதி கூறினார்.
வாங்கியப்பணத்தை வங்கி இயந்திரத்தைப்போல் எண்ணி அய்நுாறு
கூடுதலாக இருப்பதாக கூறி பணத்தைக்கொடுத்தார்

அப்போது பணம் கொடுத்த பிரஸ்காரர் ஆபிஸரின் செய்கையால் மனம்
நெகிழ்ந்துதான் போனார். பொங்கலும் வந்தது. ஆபிஸர் பாலமுருகன்
போன் பண்ணி செக்கை பத்திரமாக வைத்திருங்கள் .நான் இப்போது
திருப்பதியில் இருக்கிறேன். நான் வநதவுடன் செக்கை மாற்றலாம்
என்றார். வரும்போது லட்டு வாங்கி வருவதாகவும் கூறினார்.

பின்னர்தான். பிரஸ்காரர்க்கு தெரிந்தது. ”அடடா,திருநெல்வேலி
அல்வாவுக்கு பதிலா,திருப்பதி லட்டு கொடுத்திருக்காண்டா? என்று.

பொங்கல் விடுமுறையும் முடிந்தது. புதன்கிழமை 25தேதி பாலமுருகன்
லட்டுடன் வந்தார். வீட்டிலுள்ள பிரஸ்காரரின் அமமா,அக்கா.மருமகன்.
மருமகள், மருமகளின் குழந்தைகக்கும் கொடுத்தார்.

அப்போதும் எல்லோரும் சொக்கித்தான் போனார்கள்.பிரஸ்காரர்
மட்டும் லட்டுவைத் தின்னவில்லை, திருப்பதி லட்டு எப்படியிருக்கும்
என்று தெரியாது இருந்தும். கடையில் வாங்கிய லட்டா, திருப்பதியில்
இருந்து வாங்கியாந்த லட்டா என்று சந்தேகம் வந்ததால் லட்டை
வாங்க மறுத்துவிட்டார்

லட்டில் வந்த சந்தேகம் .பாலமுருகனுக்கு இருபதாயிரம் கொடுக்கும்
போது அவருக்கு வரவில்லை.

லட்டை கொடுத்தவிட்டு. பாலமுருகன் ,செக்கில் பெரிய தொகையாக
இருப்பதால்.ஏஜென்டிடம் ரொக்கமாக பணத்ததை வாங்க முடியாது.
அக்கவுண்ட் கணக்குல போட்டுத்தான் பணமாக பெறமுடியுமாம்.
அதனால. நீங்க கோவிச்சுகிடாதிங்க,யுனியன் பேங்க்ல என்க்கு
அக்கவுண்ட இருக்கு.செக்கு லோக்கல் செக்காக இருப்பதால ரெண்டு
நாள்ல கிளியரிங் ஆகிடும். நாளைக்கு ஒரு மணிக்கெல்லாம்
பணத்தை வாங்கிக்லாம் என்றார்.

பிரஸ்காரரும்,தாமதமாகிவிட்ட வேலையை செய்து கொண்டு
இருந்ததினால். முன் யோசனையின்றி செக்கையும் கொடுத்தவிட்டார்

பிறகுதான்.தனக்கு முன்புத்தியில்லை,பின் புத்திதான் அதிகமாக
இருக்கிறது என்பதை உணர்ந்தார் .உணர்ந்து என்ன செய்ய?

பாலமுருகன் கொடுத்த செக் உண்மையானதா? என்று கண்டு
பிடிப்பதற்கு வழியில்லாமல் விடுமுறை நாளாக இருந்ததும்
விடுமுறை நாள் முடிந்த மறுநாளில் செக்கை வாங்கிச் சென்றதும்
பிளாஷ்பேக்கில் வந்து சென்றது. ஏனென்றால் மறுநாள் குடியரசு
தின விடுமுறை நாள்.

மதியம் வந்த பாலமுருகன், செக்கை என் கணக்கில் போட்டுவிட்டேன்
நாளை மதியம் பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று அக்கவுண்ட்
நம்பரை கொடுத்தார்.

மறுநாள் பிரஸ்காரரின் அக்காமக பேத்தி, குடியரசு தின பள்ளிக்கூட
கொண்டாட்டம் முடிந்து வீட்டுக்கு வந்தபோதுதான் ” ஆகா, இன்றைக்கு
வங்கி விடுமுறையில” என்று அவர் மண்டைக்கு தெரிந்தது.

பாலமுருகனின் செல்லில் அடித்து கேட்டபோது. அடடா,ஆமா,
பரவாயில்லை. நாளைக்கு எடுத்துக்கிரலாம். என்று ரெம்பவும்
கூலிங்கா பேசினார்..

பாலமுருகன் கூலிங்கா பேசியதை கேட்டும் உணரத்தெரியவில்லை
கூலிங்கா பேசியது டாஸ்மாக போதையில பேசியது.ஏற்கனவே
.வலது காது அவுட்டு. இடது காதைக்கொண்டு நாட்களை நகர்த்தி
வருவதால் பாலமுருகன் கூலிங்கா பேசியது புரியவில்லை,
மீண்டும் அவருக்கு பிளாஷ்பேக்தான் வந்து போனது.

குடியரசு விடுமுறை முடிந்து வெள்ளிக்கிழமை.பேங்க் திறப்பதற்கு
முன் சென்று காததிருந்து பாலமுருகன் கொடுத்திருந்த அக்கவுண்ட
எண்ணைக் குறித்துக்கேட்டபோது. கணக்குஎண் தவறு என்று கேட்டதும்
கைகால்கள் லேசாக உதறல் எடுத்தன.

பாலமுருகன் செல் நம்பர்க்கு பலமுறை அடித்தும் பிஸி பிஸி
என்று வந்ததால். மருமகன் செல்லில் அடித்து கேட்டபோது
செக் தொகை அதிகமாக இருப்பதால் சென்னை சென்று ஒப்புதல்
பெற்றுதான் கிளியரிங் ஆகும் என்றார்.அதற்கு பின் பால முருகன்
தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாக அவரின் செல் சொல்லியது

ஞாயிற்றுக்கிழமை,கெல்த் ஆபிஸர் பாலமுருகன் வீட்டுக்குச்
சென்றபோது.அவரில்லை, பாலமுருகனின் இரண்டாவது மனைவி
பாண்டிஸவரி என்பவர் இருந்தார். இவருக்கும் பாலமுருகனுக்கும்
திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள்தான் ஆகிறது. என்பதும
நீங்களாக பார்த்து பேசிக்கொள்ளுங்கள் எனக்கு தெரியாது என்றார்.
பாலமுருகனின் நண்பர்கள் வட்டத்திடம் விசாரித்தபோது.சுகாதாரத்
துறை இன்ஸ்பெக்டர் நான் என்று சொல்லித்திரிவதும். இவரே
சுகாதாரமாக இருப்பது இல்லை. தண்ணி அடித்து ரோட்டில் மயங்கி கிடப்பதும் ,தெரிந்தது.

ஆகா,ஏமாத்திட்டானே,ஏமாத்திட்டானே, ஏமாந்திட்டனே,ஏமாந்திட்டனே என்று புலம்பித்தவித்துவிட்டார். தலை காட்டாமல் இருந்த வயிற்று வலி
தலைகாட்டியது. சாப்படமுடியவில்லை, துாங்கமுடியவில்லை.
கடன் வாங்கி கொடுத்த பணத்தையெல்லாம் டாஸ்மாக் தண்ணியா
செலவழிச்சுருப்பானே என்று நிணைத்தார்.

பாலமுருகனின் மனைவியிடம், கெல்த இன்ஸ்பெக்டராகவா வேலை
செய்யுறாருன்னு கேட்டபோது, தெரியலையே! என்றார்.பால முருகனை
நேரிலும் பார்க்கமுடியவில்லை, செல்போனிலும் பிடிக்கமுடியவில்லை.

இரண்டு நாளாக தேடி , ஆளை பிடித்து, கொடுத்த பணத்தை கேட்டபோது
 இன்னும் பேங்க்ல கிளியரிங் ஆகல. ஆனவுடன் கொடுப்பதாக சொன்னார்
தற்சமயத்துக்கு பாதிப் பணத்தைக் கொடுங்கள் என்று கேட்டபோது.

வீட்டுக்கு போங்கள். கால்மணி நேரத்தில் கொண்டு வந்து தருகிறேன்
என்று சொன்னவர் இனறுவரை வரவில்லை, பலமுறை முயன்று
செல்பேசியில் பேசியபோது, என் வீட்டுக்கு ஏன் சொன்னீங்க என்றார்.
 பணம் கொண்டு வந்து கொடுக்கவில்லையென்றால் போலீசிடம்
புகார் தரப்போகிறேன் என்ற போது.

போலீசா, போ,போ, எங்க வேனாலும் போயிக்க, என்றார். இது குடிகாரன்
பேச்சாக தெரியவில்லை.

வேறு வழியில்லை ஏமாந்தவிட்டோம் .ஏமாந்தது பற்றி கவலைப்படாமல்
வெட்கப்படாமல் போலிசாரிட்ம் சொல்ல சென்று கொண்டு இருக்கிறார்.
2 comments :

  1. தலைவர ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கதான் செய்வார்கள்!


    உண்மைவிரும்பி.
    மும்பை.

    ReplyDelete
  2. ஏமாற்றுபவர்கள் இருக்கும்வரை ஏமாறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்று இப்படியும் சொல்லாமா?

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com