சனி 04 2012

யாரும்லே.........அது? அவுங்களையே கேள்வி கேட்க்கிறது?..



தமிழ்நாட்டு போலீசுக்கு தமிழ்நாட்டு மக்கள் உசுர காப்பத்துறதுக்கு எம்புட்டு அக்கர இருக்குன்னு தெரியும்மாம்லே.....ஒனக்கு....

அப்படி அக்ர உள்ள போலிச பத்தி,  சிறுபிள்ளத்தனமா?  கெல்மெட் அணியுமான்னு கேள்விகேட்டு, ஆத்தாவின் ஆபிஸீக்கு போனத படம் புடுச்சு போடலாம்மா...லே

அவுக யாரு, அவுக பலமென்னனு தெரியுமாம்லே, தெரிஞ்சிருந்தா,இப்படி படம் புடுச்சி போட்டு,கேள்வி கேட்டுருக்க மாடடேலே!

அவுக யாருன்னு தெரியுமாலே, சட்டத்தின் காவலர்கள்லே, அவுக இல்லேன்னா
ஆத்தாவும்சரி,அய்யாவும் சரி ஆடசியாட்டம் போட முடியுமாம்லே,எல்லாமே குளோஸ்லே,

என்னலே, கன்னத்திலே கைய வச்சுகிட்டு இருக்க, நாஞ்சொல்றது கேலியா இருக்காலே,ஒரு ஒதாரணத்துக்கு ஒன்னுரெண்டசொல்றேன்லே,கேளுல்லே,
ஓங்சோலிய அப்புறமா பாத்துக்கலாம்லே...

ஆளும்கட்சிக்கு எதிராகவோ,பெரிய பணக்கார மொதலாளிமார்களுக்கு எதிராகவோ போராட்டமோ?,கலவரமோ நடந்தா,நாலுபேர சுட்டு அடக்குறத
கதை தெரியுமாம்லே, சமிபத்தில் பரமக்குடியில நாலுபேர கொன்னு பலபேரு
மண்டய பொளந்து அடக்குன கதை தெரியுமாம்லே!

பெரியாறு உரிமய காக்க,அஞ்சு லட்சம் மக்கள் ஊர்வலம் போனப்ப, கொஞ்சப்
பேராக இருந்தும் மண்டயப் பொளந்து விரட்டியடிச்சு சட்டம்ஒழுங்கை காப்பத்தினது தெரியும்மாம்லே, இதுமட்டுமாலே, சென்னை உயர்நீதி மனறத்துல புகுந்து  வக்கீலென்ன.நீதிபதிமண்டயவே பொளந்து நீதிய நாட்டியது மறந்திட்டியாலே,

உச்ச நீதிமன்ற நீதிபதியான தாக்குண்டவையே ,போட்டு தாக்கி மண்டய
பொள்ந்து சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது தெரியுமாலே, இது மாதிரி
நீதியையும் சட்டம்ஒழுங்கையும் நிலைநாட்டியது எல்லாம் அப்பவும்சரி இப்பவும்சரி,எப்பவும்சரி, எல்லாம் வரலாற்று ஆவணம்லே,

அப்பவும் சரி இப்பவும்சரி,எப்பவும்சரி எந்தக்கட்சி ஆட்சியாவது சட்டத்தின் காவலர்கள் தலமீது கைய வச்சருக்குறத பாத்தியாலே, பார்த்திருக்க மாட்டேலே,

தமிழ்நாட்டு ஆத்தாவ சிறயில தள்ளினோங்க, தமிழின ஒலகத்தலவர  அய்யோ, கொல்லுறாங்கன்னு.கதற விட்டாங்கல்ல, திரும்பவும் அவுக
ஆட்சிக்கு வந்தும் எதாவது பன்ன முடிஞ்சதாலே,.......

அடுத்த,முதல்வர, வருவதற்கு தகுதியுள்ள கேப்டவுண்ணே, ஒரு படத்துல
ஒலறியிருப்பாலே, போலிசு கொன்னா, அது சட்டம் ஒழுங்கு, மத்தவங்க கொன்னா அது கொலைன்னு,... இதெல்லாம் வருங்கால முதல்வரோட
தத்தவம்லே.....

இது மாதிரி கெல்மெட் மாட்டிட்டுதான் டூவிலர் ஓட்டனும்னு சட்டம் மத்தவங்களுக்குதான்லே, போலிசுக்கு இல்லே..லே.

ஆத்தாவோ வீட்டுக்கும்.(சட்டசபை) ஆபிசுக்கும் வந்துகிட்டும் போயிகிட்டும்
இருக்குதுலே, அப்போ போயி தலயில மாட்டிகிட்டு பாதுகாப்பு கொடுக்க
முடியுமாம்லே,

சங்கிலி அத்தானை. கெல்மெட்டு மாட்டிக்கிட்டே விரட்டி ஓட முடியுமாம்லே,
அவுங்க ஏழு பொண்டாட்டி வச்சிருந்தா, நீங்களும் ஏழு பொண்ணாட்டி வேணுன்னு கேட்க முடியுமாம்லே.......

தனியார் வாகன உற்பத்திய கட்டுப்படுத்தி அரசு வாகன போக்குவரத்தை பெருக்கினால் வாகனவிபத்தை குறைக்கலாம், போக்குவரத்தையும் சரி
செய்யலாமுன்னு,நக்சல்பாரிகள் சொல்லுவதை கேட்டு செயல் படுத்தினா
அந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியாகவா இருக்கும்லே.............

ஜனநாயக ஆட்சியிலே, சட்த்தின் காவலர்களான போலீசை கேள்விகேட்கலாம்.மா........லே..... என்னங்கலே.......நாஞ் சொல்றது.....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...