பக்கங்கள்

Thursday, May 24, 2012

இந்தியக்கனவுக்கன்னியை ஒருதலையாக காதலித்த டாப் ஸ்டார் நடிகர்.....

பன்னைபுரத்து இளையராஜா கலை(இசை) சேவைக்கு வருவதற்கு
முன்னால்,தமிழகத்தில், மலையாளப்படங்கள் அணிவகுத்து வந்தது
போல்,இந்தியாவின் இந்திமொழிப்படங்களும் தமிழகத்து திரையரங்
களில் ஓடி கல்லாவை நிரப்பிக் கொண்டுருந்த காலம்.

இன்றைக்கு வரும் உளநாட்டு.வெளிநாட்டு பன்னாட்டு படங்களில்
ஜேம்ஸ்பாண்டும்,ஜாக்கிஜானும் தமிழ்பேசுவது மாதிரி அன்றைக்கு
வந்த இந்திப்பட நடிகர்கள் தமிழ்பேசவில்லை. நேரிடையாக தயாரித்த
மொழியிலே படங்கள் வந்தன.

அப்படிபட்ட.அந்தக்காலத்தில் வெயிவந்த படங்களில் வெற்றி வாகை
சூடி வெள்ளிவிழா கொண்டாடிய படம் “ஷோலே” என்ற இந்திப்படம்
அந்தப்படத்தில் தர்மேந்திராவும்,இந்திய சூப்பரும் ஒலக அழகியின்
மாமானாரும் கதாநாயகர்களாக நடித்திருப்பார்கள். அந்தப்படத்தில்
தர்மேந்திராவுக்கு ஜோடியாக காதலியாக நடித்திருப்பவர்தான்.
இந்தியக்கனவுக்கன்னி.

இந்த நடிகைக்கு அழகில்லை,உடல் வனப்பு இல்லை என்று தமிழகத்
திலிருந்து ஓரங்ககட்டப்பட்டவர்.உயர்குடி பிறப்பின் தகுதியுடன்
இந்தி திரையுலகத்தில் புகுந்து அகில இந்திய சினிமா ரசிகர்களின்
கனவுக்கன்னியானார்.

அன்றைய இந்தக் கனவுக்கன்னியை அன்றைய டாப் ஸ்டார்களான
சஞ்சீவ்குமார்,ஜிசேந்திரா,தர்மேந்திரா போன்றவர்கள் விரும்பினார்கள்
இந்தக்கனவுக்கன்னியோ.மூவரில் இருவருக்கு கடுக்காய் கொடுத்து
விட்டுமுன்னணியில் இருந்த. ஏற்கனவே திருமனமாகி புள்ள குட்டி
இருந்ததர்மேந்திராவை கைப்பிடித்தார். சினிமாக்காரர்களின் காதலும்
சுயநலக்காதலாகத்தான் அன்றைக்கும் இருந்தது.
Posted Image

ஜிஜேந்திராவோ, மனதைமாற்றிக்கொண்டார்.ஆனால் சஞ்சீவ் குமாரோ
பல படங்களில் பழுத்த அனுபவசாலியான பாத்திரங்களில் நடித்தும்
பகுத்தறியும் ஆற்றலை இழந்து இந்தக் கனவுக்கன்னியை ஒருதலையாக
காதலித்து,இறுதிவரை மனதை மாற்றமுடியாமல் கனவக்கன்னியின்
நிணைவாக இருந்து திருமணம் செய்து கொள்ளாமல்.அன்றைய
ப்்பாரீன் டாஸ்மாக்கு அடிமையாகி மறைந்தார்.

இந்த சஞ்சீவ்குமார் “ஷோலே” படத்தில் வில்லன் அம்ஜத்கானால்
இரண்டு கைகளும் வெட்டப்பட்டவராக நடித்திருப்பார் தமிழகத்தின்
லிட்டில் ஸ்டாரின் அப்பாகூட,ஒருதலைராகம் பெயரில் ஒருபிலீம்
எடுத்து கதாநாயகன் செத்து போவதாக காட்டியிருப்பார்.

என்ன இருந்தாலும் நம்ம சினிமா ரசிகர்கள்.சாதிவெறிகொண்ட.பணத்
தாசை கொண்ட சுயநலமிக்க கல்நெஞ்சர்களாக இருந்தாலும், சினிமாவில்
காட்டும் பிலிம் காதலுக்கு தங்களை அறியாமல் கண்கலங்கித்தான்
விடுகிறார்கள்..


4 comments :

 1. இந்த மாதிரி சினிமா செய்தி போட ஆயிரம் பத்திரிகைகள் இணைய பக்கம் இருக்கிறது...பகத்சிங் படம் போட்டு சமூகத்தை உள்ள வலிகளை தீர்க்கிற லட்சணமா இது...

  ReplyDelete
  Replies
  1. ஒழுங்கா லட்சணமா சமூகத்தபத்தி தீர்க்கிற பதிவா உழுதுகிட்ட இருந்தேனா, ஒரு ஈ......காக்கா எட்டிப்பாக்கல. சினிமாகாரங்கள பத்தி
   பரம்படிச்சனோ,கொசு.....ஈ....பறக்கிற காத்துகூட தெரியுதுன்னா ,வக்காலி சமூகம் எந்த ரேஞ்சல போகுன்னு உங்க துப்புகெட்ட பதிலவச்செ சொல்லிடம்லே.

   Delete
 2. தோழர்,கம்யுனிஸ்ட்னு பேர வச்சுகிட்டு,பகத்சிங்படத்த காட்டி ஓட்டு பிச்சை கேட்குற பயல்களின் லடசணத்தவிட,உங்க லட்சணம் பராவாயில்லை.அவன்.இவன் சொன்னான்னு எழுதுரத நிறுத்திடாதிங்க.என்னென்ன தோனுதோ எழுதிக் குவிங்க....படிக்க ஆளால்ல.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com