சனி 28 2012

இந்தியாவின் மோசடி தந்தை.......................

ஒரு கதை சொல்வார்கள். “எதிரே வந்தவனை.அய்யா கும்பிடுறேனங்க”
என்று ஒருவன் சொன்னானாம். அதுக்கு எதிரே வந்தவன்.“ ஒங்கப்பன்
பட்ட கடன அடையுடா என்றானாம். வணக்கம் சொன்னவனும் அப்பன்
பட்ட கடன அடச்சனாம். மரியாதைக்காக  ஊர் பேர் தெரியாத வணக்கம் சொன்னவன். தெரிந்தோ தெரியமாலோ தன் அப்பன் பட்ட கடனை அடை
த்து நேர்மையாக இருந்தான். ஆனால் உலகம் போற்றுவதாக சொல்லப்
படும் ஒரு தந்தை தன் மகன் பெற்ற கடனை அடைக்காமல் முயலாமல்
செய்த மோசடி தனத்தை பாருங்கள்........


அரிலால் என்று பெயர். அரிலாலுக்கு படிப்பு சரியாக வரவில்லை. அதனால் டாஸ்மாக கடை வருவதற்கு முன்னமே அவருக்கு குடிப்பழக்கம் இருந்தது
இதனால் அவர் தன் தாயிடமும் ககோதரனிடமும் பண உதவி கேட்பார்.


இந்த அரிலால் சோலாப்பூரில் ஒரு மில்லில் வேலை செய்தார். அந்த வேலை
பிடிக்காமல், “சுயராஜ்ய ஸ்டோர்” எனற் பெயரில் ஒரு கடையை நடத்தினார்.
அதில் எதிர் பார்த்தபடி வருமானம் இல்லாததால் கடையை இழுத்து மூடினார்.


அரிலாலுக்கு கடன் உதவி செய்த ஒருவர். அரிலாலுவின் தந்தைக்கு ஒரு
கடிதம் எழுதினார். அய்யா, உங்களுடைய நேர்மையையும் கட்டுப்பாட்டை
யும் கண்டுதான். தங்களைப் போலவே தங்கள் மகன் இருப்பாரென்று 
எண்ணிஅவர் கடைக்கு  தாமதமானாலும் எப்படியும்  வாங்கிய கடனை 
திருப்பி கொடுத்து விடுவார் என்று நம்பி கடன் கொடுத்தேன்..இப்பொழுது கடையை மூடிவிட்டார். ஆகையால் தாங்கள் தங்கள் மகன் பெற்ற கடனுக்கு ஒரு வழி சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.


ஆனால், துரோகத்துக்கு பேர்போன அந்தத் தந்தையோ,அந்த கடிததுக்கு
பதில் எதுவும்  தெரிவிக்காமல்,தன்னுடைய பத்திரிகையான“யங்
இந்தியா”வில்...........இப்படி...


எனக்கும் அரிலாலுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவனை நம்பி
யாரும் கடன் கொடுக்க வேண்டாம். அப்படிக் கொடுத்தால். அதற்கு நான்
பொருப்பல்ல... இப்படிக்கு.என்று ஒரு செய்தி வெளியிட்டார் அந்தத் தந்தை
அறிக்கைக்கு முன் கொடுத்த கடனுக்கு வழி என்ன என்று அந்த வக்கீல்
தந்தை  பதில் ஒன்றும் சொல்லாமல் மழுப்பிவிட்டார்.


அரிலாலின் தந்தையின் அகிம்சை வழியும் மாலைப்பொழுதினில் நடத்தும்
பஜனையும் பகவத்கீதையின் உபதேசங்களுமே  ஆங்கிலேயேடமிருந்து
இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக் தந்தாக பீற்றிக் கொள்ளும் நேரத்தில்
தன் மகன் பெற்றக் கடனுக்கு ஒரு வழி சொல்லாமல் அறிக்கை வெளியி
யிட்டு  மோசடி செய்த ஒரு“ மோசடி தந்தை” இந்தியாவுக்கு சுதந்திரம்
வாங்கித் தந்த  தேசந்தந்தை  என்று சொல்லுவதும் மோசடிதான். இந்திய  சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த மோசடி தந்தையாகத்தான்
 இருந்திருக்கிறார்.

   

10 கருத்துகள்:

  1. அவரவர் கடன் அவரவருடையதே.. தந்தையை போலவே மகன் இருப்பான் என்று எண்ணி கடன் தந்தவர் தான் முட்டாள். குடுக்கும் பொது தந்தையை கேட்டா அவர் கடன் குடுத்தார். அப்படி அவர் உத்திரவாதம் ஏதும் ஏற்று இருந்தால் மட்டுமே அவர் பொறுப்பாவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகனே. ஒருவருக்கு பணம் கொடுத்து இருக்காருன்னு வச்சுகிருவோம்.கடன்பட்டவர்.உங்க மகனிடம் கடன் வாங்கினேன் என்று திருப்பி கொடுத்தா... எனக்கும் அவனுக்கும்
      சம்பந்தமில்லை என்று சொல்வாரா?

      நீக்கு
  2. அப்படின்னா ஒரு அயல்நாட்டானை தேசத் தந்தையாக்கிக் கொள்ளலாம்! அதுவே செஞ்சி(நி)ந்தனை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதுக்கு உள்நாட்டு தந்தையே மோசடி தந்தையா இருக்கும்போது
      அயல் நாட்டு தந்தை நேர்மையாகவா இருப்பாரு??

      நீக்கு
  3. //Rajan7/28/2012 08:23:00 PM
    அவரவர் கடன் அவரவருடையதே.. தந்தையை போலவே மகன் இருப்பான் என்று எண்ணி கடன் தந்தவர் தான் முட்டாள். குடுக்கும் பொது தந்தையை கேட்டா அவர் கடன் குடுத்தார். அப்படி அவர் உத்திரவாதம் ஏதும் ஏற்று இருந்தால் மட்டுமே அவர் பொறுப்பாவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்தோழர் வலிப்போக்கன்7/28/2012 08:32:00 PM
    மகனே. ஒருவருக்கு பணம் கொடுத்து இருக்காருன்னு வச்சுகிருவோம்.கடன்பட்டவர்.உங்க மகனிடம் கடன் வாங்கினேன் என்று திருப்பி கொடுத்தா... எனக்கும் அவனுக்கும்
    சம்பந்தமில்லை என்று சொல்வாரா?

    //

    நண்பரே, முதலிலேயே சொல்லி விடுகிறேன் நான் காந்தி ஆதரவாளானோ இல்லை எதிர்ப்பாளனோ கிடையாது. தவிரவும் அந்நிலைப் பற்றி எந்த முடிவும் என்னிடம்` இல்லை.
    என்னுடைய கேள்வி ராஜனுக்கு நீங்கள் அளித்த பதிலுக்கு மட்டும் தான்.
    எப்படி நீங்களே அப்படி கற்பனை பண்ணிக்கிறீங்க
    // ஒருவருக்கு பணம் கொடுத்து இருக்காருன்னு வச்சுகிருவோம்.கடன்பட்டவர்.உங்க மகனிடம் கடன் வாங்கினேன் என்று திருப்பி கொடுத்தா... எனக்கும் அவனுக்கும்
    சம்பந்தமில்லை என்று சொல்வாரா?//
    அதன்படியே நடந்திருக்குமானால் அவர் அப்படித்தான் சொல்லியிருப்பார் என்று நான் சொல்கிறேன் என்றால்
    இதை எதை வைத்துக் கொண்டு மறுத்தளிப்பீர்கள் நண்பரே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேறு ஒன்றும் வேண்டாம், நான் உங்களிடம் கடன் வாங்கியிருக்கிறேன். அடைக்கமுடியவில்லை, என்ன செய்வீர்கள்.

      நீக்கு
  4. இது நல்ல காமெடி ... ஒருத்தர் வாங்கிய கடனை இன்னும் ஒருத்தர் என்ன அடைக்க வேண்டும்....

    ஒரு தந்தை.. ஒரு மகன் 18 வயசு வரைக்கும்... பொறுப்பு ஆகலாம்.. அதுக்கு பிறகு எதுக்கு பொறுப்பு ஏத்துக்கணும்..

    ரொம்ப கஷ்ட பட்டு... காந்தி பத்தி தப்ப எழுத முயற்சி செய்ததுக்கு நன்றி.. ஹஹஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொழிலுக்கோ,சொந்த தேவைக்கோ கடன் வாங்கியதை, மொங்கா போட்டுலாமா??? வங்கியில் கடன் வாங்கிய முதலாளி
      மார்கள் மாதிரி ஏமாத்திடலாமா?ஃ??????. ஹஹஹா

      நீக்கு
  5. காந்தியின் போராட்டம் மட்டுமே தான் சுதந்திரம் வாங்கியது என்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை தான் .. ஆனால் என்ன உங்க லாஜிக் எனப் புரியவில்லை ... !!! மகன் பெற்றக் கடனை தந்தை ஏன் அடைக்க வேண்டும் என எனக்குப் புரியவில்லை ? அதே போல தந்தைப் பெற்றக் கடனை மகனும் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை ... !!! கணவன் பெற்ற கடனுக்கு மனைவியும், மனைவி பெற்றக் கடனுக்கு கணவனும் கூட பொறுப்பல்ல !!!

    உதாரணத்துக்கு .. இந்தியா அமெரிக்காவிடம் பெற்றக் கடனை அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் செலுத்த வேண்டும் என்று சொன்னால் ஏற்க முடியுமா ? இந்தியர்களுக்கு இந்தியா தானே தாய்நாடு !!! அதே போல் தான் இதுவும் ... !!!

    காந்தி செய்ததில் எந்த தவறும் இருந்தத்தாக எனக்குத் தெரியவில்லை சகோ. வேறு யாரும் காந்தியின் பெயரைப் பயன்படுத்தி கடன் வாங்கக் கூடாது என்பதற்காக பத்திரிக்கையில் வெளியிடவும் செய்தார்...
    இன்று உள்ள அரசியல்வாதிகள் போல கடன் கேட்க போனவனை கட்டிவைத்தா உதைத்தார் ... !!!

    பதிலளிநீக்கு
  6. நீங்க சொல்ற லாஜிக் சரியில்லயே !!!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...