திங்கள் 06 2012

செத்து போவதற்குகூட அதிர்ஷ்டமில்லாதவர்கள்...



முள்ளிவாய்க்கால் படுகொலையில் பலியானவர்கள் ஒரு வகையில்
அதிர்ஷ்டகாரர்கள். எந்த அவதியும் படாமல் ஒரேடியாய் போய் சேர்ந்து
விட்டார்கள் அதிலிருந்து தப்பித்தவர்கள் முள்வேலிக்குள் அடைபட்டு
நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறாரகள்

இந்தியாவுக்கு அதிலும் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தவர்கள் 113 முகாம
களில் 19,916 குடும்பங்களைச்சேர்ந்த73.251 பேர் தஞ்சம் அடைந்திருப்பதாக
அரசு புள்ளி விபரம் ஒன்று கூறுகிறது.

முகாம் என்ற போர்வையில் மாட்டுக் கொட்டகையில் அடைப்பட்டு கிடக்
கிறார்கள் அகதிகள். கியூபிரிவு போலீசால் கண்காணிக்கப்படுகிறார்கள்
வெளியில் சென்றால் மாலை 6 மணிக்குள் பட்டிக்கு திரும்பி விட வேண்டும்
 வேறு மாட்டுக் கொட்டகையில் தங்கியுள்ள உறவினர்களை பார்க்கசென்றால்
வட்டாட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். வேலை தேடி செல்வதற்கு
ஆயிரத்து தொண்ணூறு கட்டுப்பாடுகள. எதிர்த்தாலோ,கேள்வி கேட்டாலோ
புலிகள் முத்திரை. மாட்டுக் கொட்டகையில் பிறந்து வளர்நது பள்ளிப் படிப்பை
முடித்தவர்களுக்கு. படித்தது போதும் என்ற கணக்கில் கல்லூரியில் படிக்க
அனுமதி மறுப்பு..........

இப்படி எந்த உரிமையும் அங்கிகாரமும் இல்லாமல் கிடந்தவர்கள் கள்ளத்
தோனியில் முப்பது நாற்பது பேர் செல்லக்கூடிய ஒரு சின்ன படகில் 130 பேர்
நெருக்கியடித்து நின்றவாறு பதினைந்து நாள் பயணத்தில் உயிர் பிழைத்தால்
ஆஸதிரேலியா  இல்லையென்றால் ஜல சமாதி என்று முடிவோடு புறப்பட்ட
வர்களை தடுத்து 107 ஆண்கள்,19 பெண்கள் 25 குழந்தைகள் உள்பட 151
 பேர்களைகேரள(போலீஸ்) மக்களின் நண்பர்கள் பிடித்து தமிழகத்து மக்கள் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஈழத்திற்கும் போகமுடியாமல்,தமிழ்நாட்டிலும் வாழமுடியமல், வேறு
நாட்டிற்கும் தப்பிச்செல்ல முடியாமல் செத்துப் போவதற்குகூட அதிர்ஷ்
டம் கெட்டவர்களாக தமிழகத்து முள்ளிவாய்க்காலில் அடைக்கபட்டவர்
களாக இருக்கிறார்கள்.


ஈழத்-தமிழ்-அகதிகள்

நன்றி!!!!!
http://www.vinavu.com/2012/07/05/puthiya-jananayakam-july-2012/

4 கருத்துகள்:

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...