வெள்ளி 21 2012

ஒரு ஏழையின் தம்பட்டமும் ஒரு குயிலின் கூவலும்....




எட்டு முழ ஆடையுடன்
ஆட்டுப்பால் குடித்து
வந்த ஒரு ஏழையை

ஏழையாக காட்டுவதற்கு
நிறையவே செலவு
செய்ய வேண்டியுள்ள
தென்று ஒரு கவிக்
குயில் கூவியது.

இந்த ஏழை ஒருநாள்
மார்க்சின் மூலதனத்தை
அரைகுறையாக படித்து
விட்டு-நான எழுதியிருந்தால்
மார்கசைவிட நன்றாக
எழுதியிருப்பபேனென்று
உளறி கொட்டியது.

கம்யூனிஸ்டுகளின்
சமூகத்தைவிட-என்
சமூகமான
ராமராஜ்ஜியம்
உயர்வானதென்று
தம்பட்டமடித்தது.





2 கருத்துகள்:

  1. இல்லாத போது வேண்டும் என்று ஆசை..
    இருக்கும் போது இன்னும் அதிகம் வேண்டும் என்று ஆசை :(

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

“மார்ச் 8 உலக மகளிர் தினம்-”

                                                              கிளாரா ஜெட்கின். உண்மையான ஜனநாயகம், சமத்துவம் நோக்கி மனிதகுலத்தை முன்னெடுத்துச...