செவ்வாய் 23 2013

தமிழக மக்களின் மரியாதைக்கு நன்றி கடன் செலுத்திய மனித நேயமுள்ள ஒருநடிகர்


தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு2012ல் செப்டம்பர்5தேதி அன்று தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் நிகழ்ந்த வெடி விபத்தில் 38 பேர் பலியாகி 100க்கு அதிகமானோர் கடுமையான தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

தீக்காயம் அடைந்தவர்கள்க்கு சிகிச்சைக்கான மருந்துகளை கேரள மாநிலம் அருகே உள்ள ஒற்றைப்பாலத்தில் அமைந்தள்ள “பதஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை” யில் வாங்கப்பட்டது.
வாங்கப்பட்ட மருந்துகளின் மொத்த மதிப்பு 38 லட்சத்துக்கு மேல் அதிகமாக இருந்தது. இந்த தகவல் “பதஙஞ்சலி ஆயுர்வேத மருத்துவமனை” யின் உரிமையாளர்க்கு தெரிவிக்கப்பட்டது.

கேள்விப்பட்ட அதன் உரிமையாளரோ, தமிழக மக்கள் தனக்கு அளித்து வந்த மரியாதைக்கு நன்றிக்கடனாக ஒரு பைசாகூட வாங்காமல் தீக்காயங்களுக்கான மருந்துகளை அனுப்பி வைக்க உத்தரவிட்டார். அதோடு மேலும் மருந்துகளுக்கான ஆர்டர் வந்தால்.இலவசமாக அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டார்.

பணத்தை பொருட்படுத்தாமல் மனித நேயத்துடன் செயல்பட்ட அந்த உரிமையாளர் யார் என்று தெரியுமா?

முன்ணனி பின்ணனி உள்ள எந்த நடிகரும் நடிக்க மறுத்த,தயங்கிய நிலையில் துணிச்சலாக “டாக்டர் அம்பேத்கார்ஆக நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி அவர்கள்தான் அந்த நடிகர்.



3 கருத்துகள்:

  1. நடிகர் அல்ல.... நல்ல மனிதர்...

    வாழ்த்துவோம் பலமுறை...

    பதிலளிநீக்கு
  2. மனித நேயமும், நன்றி மறவா குணமும் கொண்ட நடிகர் திரு மம்மூட்டி அவர்கட்கு ஒரு Royal Salute! அவர் வாழ்க பல்லாண்டு!

    பதிலளிநீக்கு
  3. மலையாளத்துகார நடிகர்களை நம் மக்கள் திட்டுவார்கள் அவர்களிடம் இருக்கும் இந்த இரக்கம் நமது தமிழகத்து நடிகர்களுக்கு இல்லையே என்று நினைக்கும் போது வெட்கபடத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...