பக்கங்கள்

Saturday, April 27, 2013

வலிகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்....


15வது ஆண்டைக்கடந்து 16 வது ஆண்டில் மெதுவாக அடி எடுத்து வைக்கும் என் வீட்டு  வழக்குக்காக மாவட்ட கோர்ட்டுக்கு சென்றால் என்வழக்கை விசாரிக்கும் கோர்ட்டு அறைக்கதவு பெரிய பூட்டால் பூட்டியிருந்த்து வாய்தா தேதிக்கு  அரிய வழியில்லாமல்....

பஸ்பிடித்து இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்கி நடந்து வரும்போது,
டீக்கடையில் நின்ற ஒருவர் என்பெயரைச்சொல்லி அழைப்பது எனக்கு கேட்காததால்,கைளை தட்டி அழைத்தவாறு என் அருகில் வந்து என்னுடனே நடந்து வந்தார்.

அவர் வாய்க்குள் ஒன்றை மென்றவாறே,நான் போய்வரும் விபரத்தை கேடக, வீட்டுப்பிரச்சனை,கோர்ட்டு பிரச்சனை,என்வீட்டை சுற்றியுள்ள இம்சை அரசன் அரசிகளின் பிரச்சினையை சொல்ல,.......

அதுக்கு அவரும்.அவரு வீட்டுப்பிரச்சனை,கூடவே நாட்டுப்பிரச்சனையை சொல்ல,இருவரும் பேசிக்கொண்டே நடந்து செல்ல......

அவர் தின்று கொண்டுயிருந்த மசால்கடலைபொட்டலத்தை நீட்ட. நான் வேண்டாம் மறுக்க, இப்படியாக மூன்று தடவை அவர்நீட்ட,நான் மறுக்க,

கடைசியாக, அவர் கொஞசுன்னு தின்னுப்பா........ என்று நாலஞ்சு கடலையை கையில் திணிக்க, பேச்சு பேச்சா இருந்ததினால், மறுத்ததை மறந்து கைகைளில் வைத்ததை. பார்க்காமல் வாயில் போட்டு மெல்ல...........

கடுக்கென்று சத்தம் அவருக்கு கேட்க, மசால்கடலைக்குள் கல்லா, பாத்து தின்னக்கூடாதுன்னு பதற...............

மசால் கடலை உருவில் கல்லாக, எனக்கு தொடர்ந்த இம்சை, என்வலது பக்க மேல கடவாய்பற்களில் ரெண்டு பிளாப்பாகிவிட்டது. மசால்கடலை கொடுத்தவர் என்னை சமாதனம் படுத்த, ஒன்னுமில்லேன்னு அவர சமாதனப்படுத்தி அனுப்பி வச்சு வீட்டுக்கு வந்தால் என்னால் பற்களில் வலியை தாங்க முடியவில்லை, எப்பாடா? சாயந்தரமாகுமுன்னு காத்திருந்து பக்கதில் உள்ள பல் கிளினிக்கு சென்றால் ,டாக்டரு வர 
நேரமாகும் என்று சொன்னார்கள்.

 சற்று தூரத்திலுள்ள அமெரிக்கவில் படிச்ச டாகடரின் கிளினிக்  சென்றால்

அவரு என்பற்களில் நிலமையை ஒலி-ஒளியாக காட்டி பற்களை புடுங்க வேண்டாம் வேர் சிகிச்சை செய்தால் பற்களை காப்பாத்தி விடலாம் என்றார்.

பல்வலியில் என்னால் எதுவும் பேசாமல் வலியை நிறுத்துவதற்க்காக டாக்டர் பேசிய 6000-ல் ஆயிரத்தைக் குறைத்து, வேறு வேலைக்காக என்மறுமகன் வைத்திருந்த 2000த்தை கொடுத்து  மீதியை அடுத்த சிகிச்சையின் போது கொடுப்பதாக பேசி வேர்சிகிச்சை செய்யப்பட்டது.


வேர் சிகிச்சையின்போது பல்வலியோடு,பல்கூச்சமும் சேர்ந்து என்னை படாய் படுத்திவிட்டது.

ஆங்கில மருந்தே சாப்பிடாத எனக்கு டாக்டர் எழுதிக் கொடுத்த மாத்திரகளை சாப்பிட்டதால் வாய்புராவும் கொப்பளித்து புண்ணாக வெடித்து விட்டது. அடுத்த வேர் கிசிச்சையும் செய்யமுடியாமல் போய்விட்டது.

தலவலி,காதுவலி,கண்வலி,தாடைவலி,வயித்துவலி,பல்வலி, முதுகுவலி, கைகால்வலி, எலும்புவலி இப்படி எத்தனையோ வலிகள் இந்த உடம்புக்குள்ளே.........

இப்படிபட்ட வலிகளை அனுபவிச்சாத்தான்........ வலிகள் 
பலவிதம்.அவைகள் ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று புரியவரும்.


No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com