பக்கங்கள்

Monday, April 29, 2013

நடிப்பில் விஞ்சிய திருவோடு தந்த அன்னலெட்சுமி............

படியுங்கள் புதிய கலாச்சாரம் - மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்

இன்றைய சூழலில் ஈழத்தமிழ் மக்களுக்கு  ஆதரவாக குரல் கொடுப்பவர்களில் பலருக்கு, கடந்த பல ஆண்டுகளாக ஈழ தமிழ் அகதிகளுக்கு தமிழ்நாட்டில் இழைக்கப்படும் கொடுமைகளைப் பற்றி தெரியாது.தெரிந்திருக்கவும் அவர்களுக்கு வாய்பிருக்காது.


தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான ஈழத்தமிழர்கள் அகதிகளாக வாழ்கின்றனர். தமது உடமைகளை துறந்து பறிகொடுத்து ஏதிலிகளாக வந்துள்ள இம்மக்களில் சுமார் 70.000 பேர் தமிழமெங்கும் உள்ள நூற்றுக்கும் மேற்ப்பட்ட அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை அனுதாபத்துக்குரிய அகதிகளாக தமிழக  அதிகாரிகளும்,போலீசும் கருதுவதில்லை, ஈழவிடுதலைஇயக்கத்தை நசுக்குவது என்ற “ இந்திய அரசின் நோக்கத்துக்கு ஏற்ற வகையில் நக்சல்பாரி இயக்கத்தவரை உள்வு பார்ப்பதற்க்காக தி.மு.க அரசால் உருவாக்கப்பட்ட கியூபிரிவு உளவுத்துறையால்  அன்றைய தி.மு.கஅரசும், இன்றைய அதிமுக அரசும் ஈழ அபகதிகளை கண்காணித்து கட்டுப்படுத்தி ஒடுக்கியே வந்துள்ளன. வருகின்றன.

சிங்கள இனவெறிபாசிஸ்டு ராஜபக்சேவுக்கு எதிராக தமிழக மாணவர்களின் போராட்டம் தோற்றுவித்த பொதுக்கருத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள,வரவிருக்கும் நாடாளமன்ற தேர்தலில் ஓட்டு பொறுக்குவதற்க்காக அணைத்து ஓட்டு கட்சிகளும் மாணவர்களின் கோரிக்கையை ஆதரிப்பதாக நடிக்கின்றன.

இந்த நடிப்பில் விஞ்சியிருப்பது தமிழனுக்கு திருவோடு தந்த அன்னலெட்சுமிதான்

“ இலங்கையின் மீது பொருளாதாரத்தடை, போர்க்குற்ற விசாரனை,பொது வாக்கெடுப்புஎன்று அடுத்தடுத்து சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி மற்ற எல்லா ஓட்டு கட்சிகளைவிட நடிப்பில் முன்னணியில் இருப்பது திருவோடு தந்த அன்னலெட்சுமி என்ற அரசியல்வாதிதான்.
எவ்வித குற்றமும் இழைக்காத ஈழத்தமழ் அகதிகளை சிறப்பு முகாம் என்ற பெயரில் தமிழகத்தின் முள்வேலிச் சிறைகளில் ஆண்டுக்கணக்கில் அல்லல்பட்டு வருகிறார்கள். அவர்களை விடுவிப்பதற்கு, ஒரு கையெழுத்து போட்டு அரசானை வெளியிட மறுக்கும் இந்த திருவோடு தந்த அன்னலெட்சுமிதான் சிங்கள அரசிடமிருந்து  ஈழத்தமிழர்க்கு விடுதலை  வாங்கித் தருவதாக சட்டமன்றத்தில் தீர்மானம் போடுகிறார்.
சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழ்அகதிகளுக்கு,இந்த சித்திரவதை கூடாரத்தை உருவாக்கியது, தாய் தமிழகத்தை பேய் தமிழமாக்கி ஈழத்தாய் வேடமேற்றிருக்கும் தமிழர்க்கு திருவோடு தந்த அன்னலெட்சுமிதான்.


உதவி    .ம.க.இ.கவின் மேநாள் பேரணி, டிஜிபி அலுவலகம் முற்றுகை என்ற பிரசுரத்திலிருந்து

1 comment :

  1. படம் வடிவமைப்பு மிக அருமை. பாராட்டுக்கள் .அதை எனது பேஸ்புக்கில் உங்கள் வலைத்தள முகவரியுடன் பகிர்ந்துள்ளேன்

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com