பக்கங்கள்

Saturday, May 11, 2013

முப்பரிமாணப்புரட்சி(3D பிரிண்டிங்)- பாமரனுக்கு எப்படி இருக்கும்......-


  
அமெரிக்க கல்லூரி மாணவன் ஒருவன் 3டி பிரிண்டரில் உருவாக்கிய கைத்தூப்பாக்கியை  வெற்றிகரமாக இயக்கி பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கானாம்.

இதனால் ஏற்ப்படபோகும் தாக்கம் எந்த நாட்டையும்.எந்தத் தொழிலையும் விட்டு வைக்காதாம்.டிஜிட்டல் அமைப்பை முப்பரிமாணத்துக்கு நீட்டிப்பதால் எந்தப் பொருளையும் இருந்த இடத்திலே அதிவேகமாக உற்பத்தி செய்து கொள்ளும் வாய்ப்பாக முப்பரிமாணப்புரட்சியானது செல்வத்தில் கொழிக்கும் மிதக்கும் பண முதலைகளுக்கு கிடைத்திருக்கிறது.

இந்த முயந்சியின் பயனாக ஆஸ்திரேலிய இஞ்சினியர் ஒருவர் உடல் உறுப்பகளை 3டி பிரிண்டரில் உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.

எந்தக் கண்டுபிடிப்பாக இருந்தாலும் பெரும்பாலான கடைக்கோடி  பாமரமக்களுக்கு  அது பயன்படப்போவதில்லை.

இந்த முப்பரிணாம புரட்சியின் பலன் கடைக்கோடி மக்களுக்கு அதன் பலன் எப்படியிருக்கும்.......

நடை வழி பயணம் சென்ற கணவன் மனைவியும் இரவானதால் சத்திரத்தில் தங்கியிருந்த போது உல்லாசமாக இருந்தார்களாம். உல்லாசத்தில் கணவன்  மனைவியிடம் சொன்னானாம், “ உலகமே இதில்தாண்டி இருக்குதுண்டு....

அதைக்கேட்ட, அருகில் படுத்திருந்த ஒருவன் அந்தக் கணவனிடம்,  “காணாமல் போன என்ஆடு இருக்குதான்னு, கொஞ்சம் பாத்து சொல்லுங்க என்று கேட்டானாம்.

 கடைக்கோடி பாமரனுக்கு முப்பரிமாண புரட்சி பயன்பாடு இப்படித்தான் இருக்கும்,,

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com