பக்கங்கள்

Wednesday, May 22, 2013

பண்ணைபுரத்து பண்ணையாருக்கு நண்பனாகி போன இளையராஜா.!!!!


 
 தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைய ராஜாவினுடைய ஊரான பண்ணைப் புரத்தில்.உள்ள தேனீர்க்கடையில் தாழ்த்தப் பட்டவர்களுக்குத் தனிக் குவளையில் தான் தேனீர் வழங்கப்படும். இளையராஜா பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர். அங்கு பள்ளர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகமாக உள்ளதால் அவர்களுக்குத் தனிக்குவளை கிடையாது.

இந்தத் தனிக்குவளை அகற்றுவதற்கான போராட்டத்தில் முக்கியமாகப் பங்கேற்றுக்கொண்ட தோழர்கள் பக்கதிலுள்ள கூடலூர் என்ற கிராமத்தைச் சார்ந்தவர்கள். அவர்களில் அதிகமாக அனைவருமே தேவர் சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த வட்டாரத்தில் சாதி ஆதிக்கத்தை நிலை நாட்டும் சாதி அதுதான். தேவர் சாதி வெறிக்குப் பெயர் போன ஊரே கூடலூர்தான்.

அந்த தேனீர்க்கடையில் நடந்த தள்ளுமுள்ளு மோதல்களில் நமது தோழர்களை போலீசார் அடித்து இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் இளைய ராஜாவின் மனைவி மற்றும் யுவன் சங்கர்ராஜா ஆகியோர் கூப்பிடு தூரத்தில் காரில் ஏறுவதற்காகக் காத்திருந்தனர்.

இங்கு குறிப்பிடத் தக்க விடயம் என்னவென்றால் பறையர் சமூகத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் இந்தப்போராட்டத்தில் அன்றைக்கு பெரியளவில் பங்கேற்றுக் கொள்ளவில்லை.

இளைய ராஜா அந்த ஊர்ப் பண்ணையாரின் நண்பராக மாறிவிட்டார்

ஆனால் இந்தப் போராட்டம் முடிவடைந்து இந்தப் பிரச்சனை ஒரு பேசப்படுகிற சம்பவமாகிவிட்டது. இந்த நிலையில் இளைய ராஜாவின் நண்பரான பண்ணையார் இந்த ஊரில் தீண்டாமைக் கொடுமையெல்லாம் இல்லை தனிக்குவளை இல்லை என்று பறையர் சாதியினர் மத்தியில் கையெழுத்து வேட்டை நடத்த முனைந்தார்.

இந்த நிலையில் இளையராஜா,பண்ணையாருக்கு நண்பராக மாறிப்போனாலும்.............

தாழ்த்தப்பட்ட சாதியினர் அனைவருமே பண்ணையாரை எதிர்த்து நின்றனர். கையெழுத்துப் போடுவதற்கு யாருமே சம்மதிக்கவில்லை.

இனியொரு டாட்காம்-ல் மகஇக மாநில செயலர் தோழர் மருதையன் நேர்கானலிருந்து

1 comment :

  1. இந்த தீடாமை என்ற கொடிய நோய் எப்பொழுதுதான் அழிக்கப்படுமோ.

    ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com