பக்கங்கள்

Friday, May 24, 2013

அது அங்கே!! இது இங்கே!!!தென் அமெரிக்க நாடுகளில் தண்ணீர் தனியார் மயத்தை எதிர்த்து அங்குள்ள மக்கள் ஒரு போரையே நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்

ஆனால் இங்கே, கல்தோன்றா,மண்தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்தக்குடி என்று பீ....ற்றிக்கொள்ளும் தமிழ்நாட்டின் தலை நகரிலோ?

தனியாருக்கு தாரைவார்க்கப்பட்ட தண்ணீரை தனியாரிடம் ஒழுங்காக வழங்கக்கேட்டு ரோட்டில் உடகாரந்து மறியல் செய்கிறார்கள். இது தனியார் தண்ணீர் கம்பெனியை ஊக்குவித்து, ஏழைகளின் தண்ணீர் தாகத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே வழிவகுக்கும்

திண்ணுவதிலிருந்து களிப்பது வரைக்கும், இறுதியில் செத்து சுடுகாடு போவது வரை .தனியார்தான்

இதனால காசுக்கார கூட்டத்துக்கு பிரச்சினையில்லை, , பெருமாளுக்கு மொட்ட போட்டு மசிர கொடுத்தால் எல்லாம் சரியாய் போய்விடும் என்று வேறு ரூட்டை தேடி ஓடிகிறது காசில்லா கூட்டம்

ஒரு காலத்தில் புலி பதுங்குவது பாய்வதற்குன்னு சொல்லப்பட்டது. இந்தக்காலத்தில் புலி  (பூனையாகி) பதுங்குவது தப்பித்து ஓடி விடுவதற்க்குத்தான் என்பது நடைமுறையாகிவிட்டது

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com