வெள்ளி 31 2013

ஒரு தீர்ப்பும் அதனுடான கருத்து வதையும்.......

 
உச்சி(குடுமி) நீதிமன்ற நீதிபதிகளான அல்டாப்ஆலம்,ரஞ்சன்பிரகாஷ் தேசாய் இவர்களிடம் விசாரனைக்கு வந்த வந்த விவகாரத்து வழக்கில் ஆந்திரா உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து,அந்த வழக்கில் விவகாரத்து வழங்கி தீர்ப்பளித்தனர்.


அந்த வழக்கின் தீர்ப்பின்போது நீதிபதிகள் கூறியது.

கனவன்-மனைவி ஒருவருக்கொருவர் அவதூறான புகார்களை கூறுவதும் சித்ரவதைதான். கனவனும்-மனைவியும் ஒன்றாக வசிக்காவிட்டாலும் இதேபோல் சித்ரவதை செய்ய முடியும் என்று கூறினார்கள்.

இந் தீர்ப்பை  முன்மாதிரியாகக் கொண்டு, சரியான ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல்,தீர விசாரிக்காமல், சட்ட வழிமுறைகளை பின்பற்றாமல் தூக்கில் போடுவதும் சித்ரவதைதான்.

தாக்கல் செய்த வழக்குகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்காமல் ரப்பரே அறுந்து போகமளவுக்கு இழுத்தடிப்பதும்  சித்ரவதைதான்.
பயத்தின் காரணமாக அநியாயத்துக்கு எதிராக தீர்பளிக்காமல் ஒதுங்கி கொள்வதும் சித்ரவதைதான்.

போலீசு,ஈராணுவம் கொடுமைகள்,அத்துமீறல்களுக்கு எதிராக தீர்ப்பு சொல்லாமல் நழுவிக்கொள்வதும் சித்ரவதைதான்.

ஆக.சஞ்சய்தத் மாதிரி ஆட்கள் கிடைத்து தண்டித்துவிட்டால். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்ன்னு புழுகுவதும் சித்ரவதைதான்.

இவற்றையெல்லாம் பதவியில் இருக்கும்போது சொல்ல பயந்து மறந்து ஓய்வு பெற்ற பிறகு சொல்லாமல் இருப்பதும் சித்ரவதைதான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...