திங்கள் 06 2013

போதையில் தாக்கிய போலீசுக்கு பொது மக்கள் வழங்கிய தர்ம(ம்)அடி!!


காவல் கட்டுப்பாட்டு அறையின் சிறப்பு எஸ்ஐயாக பணி ஆற்றி வருபவரும்,ஊர்க்காவல்படையில் காவலராக பணிஆற்றி வருபவரும் சேர்ந்து தமிழகத்தின் ஆறு படை வீடுகளில் ஒன்றான முதல்படை வீட்டீன் நகர்ப் பகுதியில் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

பணியின் ஒரு வேலையாக, முதல்படை வீட்டின் பேருந்து நிலையம்.மற்றும் 16கால் மண்டப பகுதிகளில் வந்த பக்தர்களையும்.பொது மக்களையும், சுற்றுலா பயணிகளையும் விசாரனை என்ற பெயரில் விசாரித்து தாக்கியுள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும் தாக்கி தங்கள் பணியை செவ்வனே செய்து கொண்டு இருந்தனர்


இவர்களின் பணியில் ஆத்திரமடைந்த அப்பகுதி வியாபாரிகளும். பொது மக்களும் சேர்ந்து, பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்களை தடுத்து சிறப்பு எஸ்சைக்கும் ஊர்க்காவல் படை காவலர்க்கும் தர்ம அடி கொடுத்தனர்.


பொது மக்களின் தர்ம(ம்) அடியைப்பற்றி தகவல் அறிந்து  வந்த டிஎஸ்பி தலைமையிலான போலீஸ் படை  இருவரையும் பொதுமக்களின் தர்ம அடியிலிருந்து மீட்டு அழைத்து சென்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...