புதன் 08 2013

பாவம் போக தானம் செய்யும் வள்ளல்கள்!


கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள்னு சிலரைச் சொல்வார்கள். இது மாதிரி எடுத்து எடுத்து சிவந்த கரங்கள்னு யாரையும் சொல்வதில்லை.

நாட்டிலுள்ள பெரும் பணக்காரங்களிலிருந்து புதிதாய் முளைத்த திடிர் பணக்காரர்கள் வரை தங்களுடைய வள்ளல் தனத்தை காட்டுவதற்க்காக சில தொண்டுகளையும், சேவைகளையும் செய்வார்கள். இது யாணையின் பசிக்கு சோளப்பயிர் போட்ட கதையாகத்தான் இருக்கும்.

இதே போல்தான் அரசும், அரசை ஆளும் அதிகாரிகளும், அரசியல் கட்சிகளும், தானம் செய்வார்கள்.  ஏழைகள் எப்படி உருவாகுகிறார்கள், யாரால் உருவாக்கப்படுகிறார்கள் என்ற கதையெல்லாம்  தானம்.தொண்டு செய்பவர்களுக்கு வேப்பங்காயாய் கசக்கும். இந்தக் கதையெல்லாம் இவர்களுக்கு வேண்டாதவைகள்.

தங்களுடைய பெரும் பகுதி சொத்தில் கடுகு அளவில் தானம் செய்து தங்களை வள்ளல்கள் என்றும்.இரக்கமுடையவர்கள் என்றும் காட்டிக் கொள்வார்கள்.

செய்த,செய்யப்படுகின்ற அநியாயத்தை மறைக்கின்ற செயலாக தொண்டுநிறுவனம்,அறக்கட்டளை,சேவைகள் மூலமாக பிச்சையிடுவதை தானம்,தருமம் என்று நாகரிகமாகபெயர்சூட்டிக்கொள்கின்றனர்.

ஆதாயமில்லாமல் செட்டியாரோ.அய்யரோ, ஆற்று தண்ணீரை இறைக்கமாட்டாரன்னு சொல்லும் பழமொழி இவர்களுத்தான் 
பொருந்தும்.

இப்படிபட்ட வள்ளல்கள், தங்கள் வள்ளல்தனங்களை பல்வேறு விதங்களில் செயல்படுத்துவார்கள். இதற்கு ஏகப்பட்ட சான்றுகளை உதாரணமாக கூறலாம்.

 குறிப்பாக சிலவற்றை குறிப்பிடலாம்.

1.காய்கறிகடை வைத்துள்ள அம்பானி. தன் நிறுவன ஊழியர்களுக்கு கொடை வள்ளலாக இருக்கிறராம். எப்படி என்றால். மற்றவர்களுக்கு அள்ளிதராமல் மனம் கோனாமல் அள்ளிதருவராம்,-இதை அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.

2.தமிழ் நாட்டின் முதல்வரோ,  இட்லிக்கும் தயிர்சாதத்துக்கும் அலையும் தமிழர்க்கு குறைந்த விலையில் தந்து அன்னலெட்சுமியாக.அவரது கட்சிகரர்களுக்கும் துதிபாடிகளுக்கும் வள்ளலாக காட்சி அளிக்கிறார்.

3.முன்னால் முதல்வரும் திராவிட பாரம்பரியம், நானும் பொதுவுடமைவாதிதான் என்று பொய் சொன்னவரும் தன்தாயாரின் அறக்கட்டளைமூலம் கல்விக்கும்.பதிப்பகத்துக்கும் தானம் வழங்கி தானும் வள்ளல்தான் என்று தெரியப்படுத்துகிறார்.

தானம் செய்தால் பாவம் மறைந்து மோட்சம் கிடைக்கும் என்று இண்டு.முஸ்லிம்,கிறிஸ்து மூன்று மதங்களுமே ஒப்பாரி வைக்கின்றன.

ஆனால்.பாவப்பட்ட ஏழைகளுக்கோ, வள்ளல்களின் தானம்கூட சமமாக அனைவருக்கும்கூட கிடைப்பதில்லை.

1 கருத்து:

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...