பக்கங்கள்

Thursday, May 09, 2013

வட்டிக்கடையில் ஆய்வு செய்த மத்தியகுழுவின் அசத்தல் நடிப்பு!!


தெரிந்ததை தெரியாதவன் போல் காட்டிக் கொள்பவனை செத்தான்டா நடிகன் என்று சொல்வது சொல்வடை

அந்த சொல்வடையை உண்மையாக்கி இருக்கிறார்கள் தென்மாவட்டத்துக்கு வந்து ஆய்வில் ஈடுபட்டு கொண்டிருக்கும் மத்தியக்குழு.

தென்மாவட்ட வறட்சியை பார்வையிட்டு விசாரனை செய்துவரும் மத்திய ஆய்வுக்குழு,கூட்டுறவு சங்கத்தில் ஆய்வு செய்தபோது.விவசாய கடன்கள் அனைத்தும் நகைகள் அடமானத்தின் பேரிலேயே வழங்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து.

அங்கிருந்த அதிகாரியிடம் விசாரித்தபோது.தேசிய,கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் நகைகளை அடமானம் வாங்கித்தான் விவசாயக்கடன் வழங்கப்படுவதாக தெரிந்தவடன்
விவசாயத்திற்க்காக கடன்களுக்கு எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் ஒரு லட்சம்வரை கடன் வழங்கப்படவேண்டுமாம். ஆனால் தமிழகத்தில் மட்டும் இப்படி வழங்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்தார்களாம்.

கொடுத்த பணத்தை மோசடி செய்து,ஜாலியாக வேறு கிரகத்துக்கு ஒடிப்போகும் தொழில் பண முதலைகளுக்கு கூப்பிடாமல் வலியச் சென்று கடன் கொடுக்கும் வங்கிகள்.

பஞ்சத்திலும்,வறட்சியிலும்,விலைவாசி ஏற்றத்திலும் பரிதவிக்கும் பஞ்சை பராரிகள். வாங்கிய கடனை அடைக்காமல்.மோசடி செய்து ஈழ அகதிகள்போல் கப்பலில் வெளிநாட்டுக்கு ஒடிவிட்டால் வாங்கிய கடனை வசூலிக்க முடியாதல்லவா? அப்பேர்ப்பட்ட பரந்த மனசு தெரியாமல் நடித்த மத்திய குழுவினர் சிறந்த அசத்தல் நடிகர்கள்தான்.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்..அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com