பக்கங்கள்

Wednesday, June 12, 2013

உழைப்பார் உழைத்துக்கொண்டே இருப்பார்........

எனது 90 வது பிறந்த நாள் விழாவை எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சிறப்பாக திமுகவினர் கொண்டாடியுள்ளனர்.

எங்கோ ஒரு கிராமத்தில் மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்..என் குடும்பத்திற்கென்று தனிப்பட்ட எந்தப் பெருமைகளும் கிடையாது. எங்கள் குடும்பத்தில் முதல் பட்டதாரி முரசொலி மாறன்தான்.

5முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும்,12 முறை சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியே அடையாமல் வெற்றி பெற்றேன். அண்ணாவின் மறைவக்குப்பின்1969ல் திமுகவின் தலைவராக தேர்தெடுக்கப்பட்டேன்.
தமிழகத்திலுள்ள 7கோடி மக்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலருக்கு மட்டுமே எதிரியாக இருக்கிறேன்.

மாநிலக் கட்சியின் தலைவராக இருந்தபோதும் அகில இந்திய தலைவர்களிடம் மிகவும் பழக்கமாயிருந்தேன்.

இந்திரா முதல் இன்றுவரையுள்ள பிரதமர்களிடம் வெறுப்பு காட்டும் அளவுக்கு நடக்காமல் அன்பாக பழகி இருக்கிறேன்.

இத்தனைக்கும் அகம்பாவம்,அலட்சியம்,எடுத்தேன்-கவிழ்த்தேன் என்ற குணம் இல்லாமல் பேசாதவன்.

90வது பிறந்தநாள்  கொண்டாட்த்தில் மூன்று நாள் தூக்கம் கெட்டாலும்.தொடர்ந்து உழைப்பேன்,உழைத்துக்கொண்டே இருப்பேன்.
No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!