பக்கங்கள்

Friday, June 14, 2013

”லண்டன்” ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய நகரம்--நூல் அறிமுகம்....பலருக்கு கணவில் வருவது,நிஜத்தில் வராது.சிலருக்கு கணவில் வராதது நிஜத்தில் வந்துவிடும்.அந்த சிலரில் ஒருவராக தோழர்.மு.சங்கையா அவர்கள் தன் பயணத்தின் அனுபவங்களை தன் மனதிற்குள் வைத்து பூட்டி வைக்காமலும் ,பெருமிதத்துக்காக ஏட்டில் எழுதி வைக்காமல் தன் அனுபவத்தை பலருக்கும் பகிர வேண்டி நூலாக அச்சிட்டு  படிக்க கொடுத்துள்ளார்

லண்டன்ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய நகரம்.—நூலாசிரியர் மு.தங்கையா அவர்களின் லண்டன் பயணத்தின் போது நிஜத்தில் பார்த்ததை பதிவுகளாக்கி வாசிப்போர்களம்- மதுரை.வெளியீட்டுள்ள முதல் நூல்

சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் தான் ஆக்கிரமித்த காலனி 
நாடுகளில் நிகழ்த்திய கொடூரங்கள் மறக்கமுடியாதவை,மன்னிக்க முடியாதவை,

ஊரையே கொள்ளையடித்தவன் ஓலைக்குடிசையிலா குந்தியிருப்பான். மாடமாளிகை கட்டி அதிலேதான் நித்திரை கொள்வான்.அவனே அப்படி என்றால் உலகத்தையே கொள்ளையடித்தவன் தன் தலைநகரை, மும்பை தராவி குடிசைப்பகுதி மாதிரியா வைத்திருப்பான்.


அந்த அழகிய நகரில் பெருகிவரும் குற்றங்களையும். அந்த கொடூர சாம்ராஜ்யத்தின் அரண்மனையின் கொடூர மரண ஓலத்தின் விபரங்களையும்

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்போல,3டமளர் அரிசிக்கு குக்கரின் 4 விசில் சத்தம் பதம்போல,

,ஈழத்திலிருந்து விரட்டப்பட்டு தமிழகத்து சித்ரவதை கூடமான முள்வேலியில்அடைபடாமல்  தப்பித்த ஈழத்தமிழரின்,
இனக்கலவரத்துக்கு முன்வந்தவர்களின்பொருளாதரநிலை
வசதியாகவும், இனக்கலவரத்துக்குப்பின் வந்தவர்களின் 
பொருளாதார நிலை பின் தங்கி இருப்பதும்,அதோடு 
தமிழகத்தில் ஒப்பாரி முழக்கமான  தொப்புள் கொடி உறவு 
அங்கு வேறாக உள்ளதையும். பதிவு செய்துள்ளார்.

ஒவ்வொரு தலைப்புக்கும் பொருத்தமாகவும்முத்தாய்ப்பாகவும் அதன் விபரங்களை கூறுவதோடு முன் பின் நடந்த வரலாற்று குறிப்புகளையும் தெரியப்டுத்தியுள்ளார். 

இது படிப்பவர்களுக்கு பழைய சம்பவங்களை தெரிந்து கொள்வதற்கும்,நிணைவு படுத்திக் கொள்வதற்கும் உதவிகரமாக உள்ளது.

புகழ் பெற்ற எழுத்து(ஆசாமிகளின்) ஆளர்களின் பயணக்கட்டுரைகளை படித்தறியாத எனக்கு லண்டன்ஒரு சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்  புதியதாக  இருந்தது.

விமானத்தையே பார்த்தறியாதவன்,தூரத்தே சிறிய உருவாமாக பறந்து செல்லும் விமானத்தை பார்த்தது போல...............எனக்கு இருந்தது. 

உங்களுக்கு வேறுவிதமான அனுபவத்தைக் கொடுக்கலாம்.

படித்துப்பாருங்கள்.

 நூல் கிடைக்குமிடம்.
வாசிப்போர் களம்- மதுரை
எம்.எம்.எஸ்.காலனி,
8வதுதெரு,மதுரை-14,

செல்.9486102431.

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com