ஞாயிறு 16 2013

வலைக்குள் சிக்கிய கொசுவும் மனிதனும்....

தமிழகத்தில் பவர்கட் அதிகமாக இருந்த நேரம். ஃபேன் ஓட மின் சாரம் இல்லாததால் புழுக்கமும் கொசுவும் சேர்ந்து ருத்ரதாண்டம் ஆடிய காலம் அது.

கொசுவுக்கு பயந்து கொசுவலைக்குள் பதுங்கிக் கொண்ட காலம் அது. அப்படிபட்ட காலத்தில் ஒரு சராசரி மனிதன். பகலில் தன் வேலைமுடிந்து கொசுவலைக்குள் பதுங்கி கொண்டியிருந்த நேரத்தில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டு இருந்தான்.

சார்ஜ்சில் எரிந்து கொண்டு இருந்த  15வாட்ச் சிஎல் பல்ப்பை அணைக்க்கூட முடியாதவனாக படுத்திருந்தான்.  பக்கவாட்டில் பார்வையை செலுத்தியபடி தலைக்கு மேலே கொசுவலையை பார்த்தான்.

ஆ............... கொசு............எப்படியோ....... உள்ளே வந்துவிட்டது...

கொசுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

கொசுவால் டெங்கு,சிக்குன்குனியா,போன்ற மர்மக்காய்ச்சல்கள் இந்தியா வெங்கும் பரவி ஏராளமானவர்களை பலிகாடாக்கியது அவனின் நிணைவுக்கு வந்து போனது.

கொசுவும் இவனுக்கு போட்டியாக  எங்கும் பறக்காமல் ஒரே இடத்தில் குத்துக்கல் சாமியாராட்டம் அமர்ந்திருந்த்து. கொசுவும் மனிதனும் வைத்த கண் மாறாமல் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தனர்.

ஒரு கட்டத்தில் கொசு மனிதனைப் பார்த்து சிரித்தது.

என்னாது! கொசு,மனுசனை பார்த்து சிரிச்சதா? என்று சந்தேகம் கொள்ளக்கூடாது. தமிழ்நாட்டில நான் ஈ..........ன்னு ஒரு பட்த்திலே ஈ.......தன் காதலியிடம் தன்னை வெளிப்படுத்தி வில்லனை பழி தீர்க்கும்போது சந்தேகமா கொண்டீர்கள்.

ஆனால், இந்த சம்பவத்தில்.கொசுவுக்கு மனிதன் வில்லனா அல்லது மனிதனுக்கு கொசு வில்லனா என்பது பற்றி நீங்களே தீர்மாணித்துக்கொள்ளுங்கள்.  

படுத்திருந்த மனிதன் மெதுவாக கையை அசைத்தான். கொசு சிரிப்பதை நிறுத்திவிட்டு. கிங்காங் படத்தில் வரும் குரங்ங்கைப்போல,முகத்தை உம்மென்று வைத்து முறைத்தது. அடிக்கொருதரம் தன் ஊசி முனையை சரிபார்த்து கொண்டது.

தூக்கம் கெட்ட மனிதன் மீண்டும் ஆடாமல் அசையாமல். கொசுவை பார்த்தபடியே நிதனாமாக மூச்சை இழுத்து வெளியே விட்டுக்கொண்டு இருந்தான்.

சிறிய இடைவேளைக்குப்பின், உம்மென்ற முகத்தை மாற்றிக்கொண்டு.கொசு ஏதோ சொல்லியது.

மனிதர்கள் பேசுவதே,அந்த மனிதனுக்கு கேட்காது. இதுல,கொசு 
பேசினது கேட்டுச்சாக்கும் என்று நக்கல் பன்னக்கூடாது.

கொசு பேசியது அந்த மனிதனுக்கு கேட்டது......

எங்களால் பரப்படும் நோய்களும் சரி, நாங்களும் சரி, ஏழை-பணக்காரன் என்ற பாகுபாடே பார்ப்பதில்லை, ஆனால் மனிதர்களால் செய்யப்படும் மருத்துவ சிகிச்சையில்தான் இருப்பவன் இல்லாதவன் என்ற பாகுபாடு பார்க்கப்படுகிறது. இது ஏன்? என்பது தெரியுமா?

அந்த மனிதன் பேசாமல் இருந்தான். வலைக்குள் சிக்கிய கொசுவே மீண்டும் பேசியது.

நாங்கள் பாகுபாடு பார்க்காததற்கு ஏகப்பட்ட சான்று இருக்கு. அதில் ஒன்று எம்புட்டு பெரிய இந்திப்பட தயாரிப்பாளர் யாஷ்சோப்ரா நாங்கள் பரப்பிய டெங்குவால்தான் போய் சேர்ந்தார்..

அந்த மனிதன் மெதுவாக கிசு கிசுத்தான்...

 கொசு தலையை ஒரு சிலிப்பிக் கொண்டு ஓ...........அதுவா.......... ,  ஆசிய டைகர் என்னும் புதியரக கொசுவான நாங்கள் ஏடி எஜிப்டி கொசுவுடன் கூட்டணி அமைத்துதான் கொள்ளை நோய்களை பரப்புகிறோம். என்றது.

ஒன்னும் புரியவில்லையே என்கிற மாதிரி கண்களை கேள்விக் குறியாக்கினான் மனிதன்.

உன் மரமண்டைக்கு,இன்னும் விளக்கமா சொல்லுவதென்றால்.....

காங்கிரசும் பாரதிய ஜனதாவும். ஊழலிலும்,களவானித்தனத்திலும்.நாட்டை கூறுபோட்டு விற்பதிலும் ஒற்றுமையாய் இருந்து.வெளியில் வேற்றுமையாய்  காட்டிக்கொண்டு இருப்பது போல.

மனிதன் வியந்தான்,அட்டா, இந்த கொலகார கொசுவுக்குகூட நாட்டுப் பற்று இருக்குதுபோல”...........ஆனால் மக்கள் பற்று இருந்திருந்தால், 
எம்மை இப்படி பயமுறுத்துமா?”.

நிணைத்த மறுநிமிடத்தில்...........

திடிரென்று. சிஎல் பல்ப் அணைந்தது, சுதாரித்த மனிதன் கண் இமை நேரத்தில் தன் இரு கைகளை குவித்த வண்ணம் கொசு உடகார்ந்த இடத்தை ஒரே அடியாக அடித்தான்.

பிறகு, வலைக்கு வெளியே வந்து,திரும்பவும் கொசுவலையை உதறி சரி பண்ணி,திரும்பவும்  கொசுவலைக்குள் படுத்தான்.

கொசுவு என்னாவாகியது என்று .அந்த மனிதன் நிணைக்கவில்லை. அவன் தூங்கவில்லையேன்றால் நாளை வேலை செய்யமுடியாது என்ற நிணைப்பே மேலோங்கி இருந்தது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...