பக்கங்கள்

Tuesday, June 25, 2013

தாழ்த்தபட்டசிறுவனின் செருப்பை தலையில் சுமக்க வைத்த காட்டுமிராண்டிதனம்


(வடிகப்பட்டி என்று கேள்விப்பட்டவுடன்  அட்டா, ஆறு முறை தேசிய விருது பெற்ற கவிப்பேரரசுவான கோல்டன் முத்துவின் ஊரிலா இந்தக் கொடுமை என்று வினவியபோது, அது பெரிய குளத்திலுள்ள வடிகபட்டி, கொடுமை நடந்திருப்பது உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி என்ற பாடலில் வருகிற உசிலம்பட்டி வடிகபட்டி என்று பதில் வந்தது


காடு.மலைகளில் சுற்றி திரிய வேண்டிய ஐந்தறிவு ஜந்துகள், நகரம்.கிராமம், ஊருன்னு சாதி வெறியை பரப்புபதோடு அதை அமுல்படுத்தவும் செய்கிறது. அப்படியான பல சம்பவங்களில் இதுவும் முதன்மையானது.)


உசிலை வடிகபட்டியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் அருண்குமார் தான் படித்த பள்ளியில் தேர்ச்சி விபரத்தை பார்க்கச் சென்ற போது


அவ்வூரின்  தேவர் சாதியின் ஒரு பிரிவைச் சேர்ந்த ஒரு சாதிவெறி ஜந்துவான நீலமாலை என்பவன்.


டேய், பறப்பயலே, ஊருக்குள்ள செருப்பு போட்டு நடக்க்க்கூடாது என்பது தெரியாதாடா? செருப்பை கழட்டுடா, என்று மிரட்டி சிறுவனின் செருப்பை தலையில் சுமக்க வைத்து ரசித்துள்ளான்.

சிறுவன் அருண்குமாருக்கு ஏற்பட்ட அவமானத்தை அறிந்த சிறுவனின் தாய் விதவை நாகம்மாள். ஊருக்குள் சென்று நிலமாலையின் தம்பி அக்னியிடம் உனத அண்ணன்,என்பிள்ளையை இப்படி கொடுமை செய்யலாமா? நாங்கதான் ஊருக்கு பயந்து நடக்கிறோம். என்று கேட்டுவிட்டு வந்த்தற்கு


மறுநாள், ஊரில் நடந்த காதணிவிழா வீட்டில்,பலபேர் முன்னிலையில் நீலமாலை போதை ஏற்றிக்கொண்டு  நாகம்மாளையும் நாகம்மாளின் தம்பியையும் வாய்க்கு வந்தபடி திட்டியதோடு.விடாமல் நாகம்மாளின் வீட்டிற்கும் சென்று,“பறச்சி என்னய எதிர்த்து பேசுவதா? என்று சண்டை போட்டியிருக்கிறான.


இந்த நிலமாலையின் தரக்குறைவான பேச்சுக்கும்,சாதிவெறிப் பேச்சுகளுக்கும்  ஊரில்உள்ள பெரிய தலைகளோ,ஊரின் நாட்டாமைகளோ, நாங்க தாயா பிள்ளையா ஒற்றுமையா வாழ்கிறோம் என்று பஞ்ச் வசனம் பேசும் கதாநாயகர்களோ, நிலமாலையின் சாதிக்கார உறவினர்களோ, யாருமே நாகம்மாளிடம் வந்து வரத்தமோ, ஆறுதலோ தெரிவிக்கவில்லை,


ஆதிக்கசாதிவெறியர்களின் ஆக்கத்தினாலும்.ஊக்கத்தினாலும் தான் நீலமாலையின் மூளையெல்லாம்.சாதிவெறியும்,உடம்பெல்லாம்,சாதிக் கொழுப்பும் ஏறி  ஆட்டம் போட்டுள்ளான்.


இவனிடம் பேசி பயனில்லை என்ற பின்புதான் நாகம்மாள். காவல் நிலையத்தில் புகார் செய்தார்.


நிலமாலையைத் தேடிவந்த உசிலம்பட்டி காவல்துறை உதவி ஆய்வாளர் மாரிமுத்து தேவர், வீட்டில் படுத்திருந்த நிலமாலையை கைது செய்து இழுத்துச் செல்லாமல், வீரா கோவிலின் பூசாரியும் ஊர் பெரியமனிதர் என்ற செல்வாக்கும் பெற்ற நிலமாலையின் அப்பாவான பதிவுராஜாவின்,என்மகன் போதையில் படுத்திருக்கான். மாலையில் கூட்டி வருகிறேன் என்று பேசிய பேச்சை நம்பி கைது செய்யாமல் வந்துவிட்டார்.


ஏழடி உயரமுள்ள அந்தப் பெரியமனிதர் ஏற்றுக் கொண்டபடி மாலையில் தன் மகனை காவல் நிலயத்திற்கு கூட்டிவராமல் பத்திரமாக வெயியூர்க்கு அனுப்பி விட்டதால் பூசாரி பதிவுராஜா மீத வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை. அதற்குப்பின் இரண்டு நாள் கழித்து நிலமாலையை கைது செய்தது போலீசு.


வடிகபட்டி தாழ்த்தப்பட்ட மக்கள்,அவ்வூர் தேவர் சாதியினர் தெருவில் செருப்பு போட்டு நடக்கக்கூடாது,. சைக்கிள்,டூவிலர் ஓட்டிச் செல்லக்கூடாது.உருட்டிக்கொண்டுதான் செல்ல வேண்டும் வேட்டியை மடித்து கட்டிச் செல்லக்கூடாது.கீழே இறக்கிவிட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாதவிதியாகும். தப்பித்தவறி இந்த விதியை மீறுபவர்கள் எச்சரிக்கை செய்யப்படுவார்கள். இப்படிபட்ட வன்கொடுமை செயலில்  மாட்டிக்கொண்ட வில்லன் நிலமாலை, மற்றவர்கள் மாட்டாத வில்லன்கள். இதுதான்  வன்கொடுமை வில்லன்களுக்குரிய வேறுபாடு.


இத்தகைய வன்கொடுமை வழிமுறைகளைதான் பல்வேறு வடிவங்களில் தொன்றுதொட்டு ஒவ்வொரு சமூகமும் (தாழ்த்தப்பட்ட சமூகம் உள்பட)  விடாப்பிடியாக பின்பற்றி தனக்கு கீழே உள்ளவர்களை ஆதிக்கம் செய்து வருகின்றனர்.


காவல்துறை ஏற்பாடு செய்த சமாதான கமிட்டியில் 200க்கும் மேற்ப்பட்ட தேவர் சாதிக்காரர்கள் கலந்து கொண்டாலும், இப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை, யாரும் கண்ணால் பார்க்கவேயில்லை”, என்று சாதிப் பாசத்தால் நிலமாலையின் சாதிவெறிக்கே துணை போயிருக்கிறார்கள். நடந்த தவற்றை ஒத்துக்கொண்டு,திருத்திக் கொள்வதற்கு பதிலாக.சிலர் நாகம்மாளிடம் பணம் கொடத்து சமாதானம் செய்ய முயற்சித்து உள்ளார்கள்.


நாங்கள் சாதி வேறுபாடு பார்ப்பதில்லை.தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை என்று ஊடகங்களில் பொய் வசனம் பேசுகிறார்கள்.


எல்லோர்க்கும் பொதுவான சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாவில் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கோவில் மேல் ஏறி சாமிக்கு அருகில் சென்று வணங்குவார்கள். தாழ்த்தப்பட்டவர்களை படிக்கு மெல் ஏற விடுவதில்லை. இதோடு பூஜைக்கான பொங்கலை கள்ளர்களின் பொங்கல் பானையில் எடுப்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களின் பொங்கல் பானையில் பொங்கலை எடுப்பதில்லை.


இதுதான் இவர்கள் தாயா பிள்ளையாகவும்,சாதிவேறுபாடு பார்க்கமல்,தீண்டாமையை கடைபிடிக்காமல் இருக்கும் லட்சணம்.


முடிந்து போன விசயத்தை என்? மீண்டும் மீண்டும் பேசுகிறீர்கள். என்று சிலர் அங்கலாயிக்கிறார்கள். எது முடிந்து விட்டது. இனிமேல் அவ்வூரில் தீண்டாமை நடக்காதா.? தனிச்சுடுகாடு ஒழிந்துவிட்டதா? இல்லது இனியாவது ஒழிந்து விடுமா?


அந்த ஊரில் முறையான சாக்கடை வசதியில்லை, மணவிழா நடத்த ஒரு திருமண மண்டபம் இல்லை,ரேசன் பொருள் வினியோகம் செய்ய அரசு கட்டிடம் இல்லை, சுடுகாட்டில் மயாணக்கூரை இல்லை,


ஊரில் 80 சதவீதம் விவசாயம் அழிந்துவிட்டது,வேலை தேடி ஊர்ஊராக ஓட வேண்டிய நிலை, இப்படிபட்ட நிலை ஏன்? என்று சிந்திப்பதில்லை.


இப்படி நியாயமாக சிந்திப்பதற்கும் சிந்திக்காமல், கவலைப்படுவதற்கு கவலைப்படாமல்,நிலமாலையின் அப்பா.வீரா கோவில் பூசாரி பதிவுராஜா,பூஜை செய்யும் காலத்தில் பூஜை செய்யாமல்  சிறை சென்றுவிட்டாரே என்று கவலைப்படுவதில்தான் அதிக அக்கறை காட்டுகிறார்க்கள் ஆறறிவு மனிதர்கள்.விவசாயிகள் விடுதலை முன்னணி  உசிலை வட்டம் வெளியீட்டுள்ள பிரசுரத்திலிருந்து

No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com