பக்கங்கள்

Friday, June 07, 2013

கழுத்தை சுத்தி மூக்கை தொடும் தினமணி!!!


 நவீன மிட்டா மிராசுதாரர்கள் என்ற தலைப்பில் தினமணி திட்டியிறுக்கும் தலையங்கத்தை படித்தால்,அது கழுத்தை சுத்தி மூக்கை தொடுவது புரியும்.

தினமணியின் இந்த தலையங்கத்துக்கு முன்னரே.... தமிழகத்தில்உள்ள மகஇகவும் அதன் தோழமை அமைப்புகளான விவசாயிகள் விடுதலை முன்னணி,புரட்சிகர மாணவர் முன்னணி,புதியஜனநாயக தொழிலாளர் முன்னணி போன்றவைகள்.

தமிழகத்து திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை எதிர்த்து தமிழகம் தழுவிய இயக்கமே எடுத்தது.
படியுங்கள் புதிய ஜனநாயகம் - மார்க்சிய லெனினிய அரசியல் ஏடுபடியுங்கள் புதிய கலாச்சாரம் - மக்கள் கலை இலக்கியக் கழக மாத இதழ்
வினவு தளத்தையும்,புதிய கலாச்சாரம்,புதிய ஜனநாயகம்.இதழ்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்களுக்கு  நன்கு புரியும்.

திடீர் பணக்கார அரசியல் ரவடித்தலைவர்களை எதிர்த்து கழுத்தைச்சுத்தாமல் நேரிடையாகவே மூக்கை தொட்டது இவ்வமைப்புகள்.

திடீர் பணக்கார அரசியல்தலைவர்களை எதிர்த்து வெளியிட்ட ஒலிப்பேழையும் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தது. அந்த ஒலிப்பேழையின் ஒருபாடலான....
அண்ணன்...வர்ராரு.....
அண்ணன் ..வர்ராரு...
வள்ளல்.... வர்ராரு
எல்லாரும் ஒதுங்கி
நில்லுங்க............ என்ற பாடலே திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை பற்றி புட்டு புட்டு வைத்திருக்கும்.


நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வை,நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நெறிகள் கொண்ட தினமணிக்கு நவீன மிட்டா மிராசுதார்கள் இப்பொழுதான் கண்ணில் பட்டு இருக்கிறார்கள். திடிர்பணக்கார அரசியல் ரவடிகளை பற்றி நவீன மிட்டாமிராசுகள் என்று தலையைசுத்தி மூக்கை தொட்டு இருக்கிறார்கள்..ஃ
No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com