பக்கங்கள்

Saturday, June 08, 2013

ஏன்?திவ்யா..............பின்வாங்கி விட்டாய்.!!!!!!!


பாஞ்சாலி,
.தன்னை வைத்து சூதாடிய 
கணவனிடத்தில் விளக்கம்
கேட்டாளே தவிர, 
விட்டு விலகவில்லை.

சீதை சிதையிலே 
இறங்கினாலே தவிர .
ராமனை விட்டுப 
பிரியவில்லை,


சந்திரமதி,
அரிச்சந்திரனின் செயலுக்கு
தன்னை அர்ப்பனித்தாளே 
தவிர.அவனைவிட்டு
போகவில்லை ,

காதலை விட்டுவிடு
என்ற தந்தையின்
மந்திரத்தையும்
மந்திரம் சொன்ன தந்தை
மரித்த பினபும்  தீர
முடிவெடித்து
பிரியாத திவ்யா...........
இளவரசன், திவ்யா

நாயக்கன் கொட்டாய் இளவரசன்
உன் சொல்லுக்கு தானே ஆடினான்
உன்னை மணமுடித்தான்..............

சாதிவெறியர்களால் பாதிக்கபட்ட
மக்கள் சொன்னபோதும், இயற்கை
உன் கருவை அழித்தபோதும்.......
இளவரசவன் உன்னைவிட்டு
பிரிந்தானில்லை..........பின்..............
வாங்கினானில்லை...........

ஏன்? திவ்யா..................அக்னிக்கு
பிறந்தவர்களின் சாதிவெறி
கொல்லும் என்றா......................
பின் வாங்கி விட்டாய்!!!!!!!!!!!.No comments :

Post a Comment

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com