சனி 20 2013

கேரள அரசுக்கு விசுவாசம் காட்டும் தமிழ்நாட்டு போலீசு.....

எவ்வளவுதான் உயர்வகை அதிகாரமுள்ள பிரபுக்களாக இருந்தாலும். அதுகளுக்கு தேசப்பற்றோ,மொழிப்பற்றோ, சொந்த இனப்பற்றோ இருக்காது,ஒரு  துளி நேர்மையோ அதுகளுக்கு இருக்காது. அதுவும் தமிழ்நாட்டு போலீசுக்கும், அதிகாரிகளுக்கு கிஞ்சித்தும் இருக்காது.

அப்படியான  சாட்சிகளில் ஒன்றுதான் இதுவும்


 முல்லை பெரியாற்று பிரச்சனை உலகம் அறிந்தது. அந்தப் பிரச்சனையில் தமிழ்நாட்டுக்கு இன்று வரை கேரளஅரசு செய்துவரும் துரோகம் எல்லோர்க்கும் தெரிந்தது.

இன்று வரை துரோகம் செய்துவரும் கேரளத்துக்கு, தமிழ்நாட்டிலுள்ள போலீசு மற்றும்,மாவட்ட  அதிகாரிகள் அரசியல்வாதிகளின் பரிபூர்ன ஆசியுடன. தமிழ்நாட்டு கிரிமினல்கள்,

முல்லை பெரியாறு அணையை இடித்துவிட்டு புதிய அணையை கட்டுவதற்க்காக,தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு மணலை கடத்தி கொள்ளையுடன் சேவகம் புரிந்து வருகின்றனர்.

 இத்தகைய கிரிமினல்களின் மணல்கடத்தல் கொள்ளையுடன
சேவகம் புரிந்து வந்ததை கவணித்து வந்த கூடலூர் வட்டார விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள்,பொது மக்களை திரட்டி,மணல் கடத்திய 5 லாரிகளை மடக்கி பிடித்தனர்.

உடனே.விஷயமறிந்து ஏழுகடல்தாண்டி,ஏழுமலை தாண்டி பறந்து வந்த உள்ளுர் போலீசும்,நெடுஞ்சாலை ரோந்து போலீசும், மணல் கடத்தலை விட்டுவிட்டு ஒப்புக்கு ஓவர்லோடுக்காக அபதாரம் போட்டுவிட்டு” 

 அபதாரம் போட்டுவிட்டோம், மணல் கடத்தி கொண்டு போவதற்கு உயர்நீதிமன்ற உத்தரவு வைத்துள்ளார்கள் அதனால்.லாரிகளை மறிக்காதீர்கள் என்று நீதிமன்ற உத்தரவை மதிக்காதவர்கள், நீதிமன்ற உத்தரவைப் பற்றி சட்டம் பேசினார்கள்.

 ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்கு மணல் எடுத்துச்செல்லக்கூடாது என்று சட்டம் தெரிந்திருந்தும் நீதி மன்ற உத்தரவு பெற்றுள்ளார்கள் என்று சட்டம் பேசினார்கள்.
நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தால் ,த்தோ....த்தோ என்று கூப்பிட்டால் ஓடமால் இருக்குமா?

விவிமு செயலர் தோழர் மோகன் தலைமையில் கூடிய பொது மக்கள் ,மணல் கடத்துவதற்க்காக நீதிமன்ற உத்தரவை காட்டு என்றபோது  வாய்பொத்தி நின்றது.

 வருவாய் துறையிலிருந்து யாரும் வராத்தால் மணல் லாரிகளை திருப்பிவிட்டனர் போலீசு. தொடர்ந்து போராடி மணல் கடத்தலை தடுத்து நிறுத்திவிட்டார்கள்.
இந்தப்போராட்டமானது உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் விரோதிகளுக்கு விழுந்த செருப்படியாக இருந்தது.

இந்த செருப்படியானது கேரளாவுக்கு மணல் கடத்துவதை முற்றிலும் நிறுத்தும் வரை தொடரும் என்றனர்.

தகவலும் விபரமும்- வினவு.(விவிமு,உத்தமபாளையம்,வட்டம்)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதுவும் கருத்து கணிப்புதான்...

  டேய்.. ஓட்டு போட்டீயா.. போட்டேன்ணே.. சரி..  போ.. ஏய்..இங்க வா. என்னான்ணே.. ஓட்டு போட்டியா.. ஓ.. போட்டேண்ணே.. எதுக்கு போட்ட.. சூரியனுக்குன்...