பக்கங்கள்

Thursday, July 25, 2013

எட்டடி பாய்ந்த நீதிபதியும்...பதினாறு அடி பாய்நத வழக்குரைஞர்களும்........


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தமிழில் வாதாட அனுமதிக்க வேண்டும்  என்று  முன்பு ஒரு சமயம் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவர் வழக்குரைஞர் பகத்சிங் என்பவர்.

மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் இரு மனுக்களை தாக்கல் செய்தார். அந்த வழக்கானது .நீதிபதி மணிக்குமார் முன்பு விசாரனைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் வழக்கரைஞர் பகத்சிங்  தமிழில் வாதாடினார்.

இந்து மகாக் கடவுளுக்கே தமிழ் மொழி தீட்டு மொழியாக இருக்கும்போது. மதுரைக்கிளையில் மட்டும் தேவ பாஷையாகவ இருக்கும்.

இதை அறிந்த நீதியரசர். பதறி துடித்துபோய், “தமிழில் வாதாட அனுமதியில்லை என்றார். இந்தியாவை அடிமைபடுத்திய மொழியான ஆங்கிலத்தில் மட்டுமே வாதாட வேண்டும் என்றார்.

நீதியரசரின்  வார்த்தயை மீறி வாதாடியாதால் வழக்குரைஞரின் இரு மனுக்களையும் தள்ளுபடி செய்தார் நீதிபதி.

மதுரைக்கிளையின முகப்பில், நிற்க முடியாமல். ஊன்று கோலுடன்  வாசலை வெறித்து படி வெயிலிலும், பனியிலும் ஆடி காற்றிலும் ஆடாமல் அசையாமல் நிற்கும்  காந்தியாரின் உருவம் பொறித்த இந்திய ரூபா நோட்டீல் அச்சிடப்பட்டிருக்கும் 15 மொழிகளிலே தமிழ் மொழியும் ஒன்று என்பது  ரூபாய்க்கு மட்டும்தான் போலிருக்கிறது.

தமிழில் வாதாடியதால்  தள்ளுபடி செய்யபட்ட மனு விபரத்தை தெரிந்த வழக்குரைஞர்கள்  தமிழில் வாதாட அனுமதி கேட்டு போராட்டம் நடத்தினார்கள்.

 வழக்கரைஞர்களின் போராட்டம் எதிரோலியோ, வேற்று நாடான வட நாட்டில் உள்ள  தில்லி உயர்நீதிமன்றத்தில் உள்ளுர் மொழியான இந்தியில் வாதாடுவது தெரிந்தோ, நீதிபதிகளின் குழு வின் கூட்ட முடிவோ, ஏதோ ஒரு காரணத்தால்...........

தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்களை அந்த நீதிபதியே. மீண்டும் விசாரனைக்கு எடுத்துக் கொண்டார்.

அப்போது, பகத்சிங் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தின் வழக்குரைஞர் களின் சங்க செயலாளர் ஏ.கே. ராமசாமி தலைமையில் 25 வழக்குரைஞர்கள் ஆஜராகினர்.

நீதிபதி, “தான் பிறப்பித்த உத்தரவை திரும்ப பெறப்படவதாகவும், இந்த வழக்கில் தமிழில் வாதாடலாம் என்று அறிவித்தார்.

 அது கேட்ட வழக்குரைஞர்கள் தமிழில் வாதாட அனுமதி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தவிட்டு  இந்த வழக்கில் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை திரும்பபெற அனுமதிக்க மாட்டோம் என்றும். மேல்மறையீடு  தாக்கல் செய்து பரிகாரம் தேடிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு.........

காந்தி சிலை முன்பு , மதுரைக்கிளை உயர்நீதிமன்றத்தில் தமிழை  வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று  ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

உலகையே சுருக்கிவிட்ட கூகுள், பேஸ்புக் போன்ற இணையதளங்களிலே அந்தந்த மொழிக்களுக்கேற்ப எழுத.படிக்க, கருத்துக்கூற, மொழியாக்கம் செய்ய போன்ற வசதிகள் தரும்போது,

தமிழ்நாட்டில்....அதுவும் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் தமிழில் வாதாட  அனுமதி மறுப்பது, நாடு இன்னும் சுதந்திரம் அடையவில்லை என்பதையே  காட்டுகிறது..

No comments :

Post a Comment

”வினவு” கற்றுக் கொடுத்த அனுபவத்தின் மூலம் ... திட்டுபவர்கள் குறித்து குறைபடத்தேவையில்லை என்பதால்... கருத்துரை மதிப்பாய்வு நீக்கப்படுகிறது.. இனி.. புழுதிவாரி தூற்றுவோர்கள் தூற்றிக் கொள்க.........!!