புதன் 03 2013

பரந்த மனம் கொண்ட பௌத்த ஜைனர்களும,. குறுகிய எண்ணம் கொண்ட பிராமணர்களும்.

வட நாட்டிலிருந்து தென்னாட்டுக்கு வந்த மதங்களை பெரியோர்கள். இரண்டு வகையாக பிரித்திருந்தனர்.
ஒன்று பிராமணமதம்,இன்னொன்று சிரமணமதம். என்பதாகும்
சிரமணமதம் என்பது பௌத்த ஜைனமதமாகும், பிராமணம்மதம் என்பது வைதீக மதமாகும்.
பௌத்தர்கள் ஜைனர்கள் தங்கள் மதக் கொள்கைகளை உலகத்திலுள்ள அணைத்து மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பரந்த நோக்கமும் விரிந்த மனப்பான்மையும் உடையவர்கள் அதனால்தான் அந்தந்த நாடுகளில் பேசப்படும் தாய் மொழிகளில் தங்கள் சமய உண்மைகளை எழுதியும் பேசியும் வந்தனர்.
பிராமணர்களோ,அத்தகைய பரந்த மனப்பான்மை உடையவர்கள் அல்ல. அதனால்தான் தங்கள் மத கொள்கைகளை தாங்கள் மட்டும் அறிய வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தில்,பொது மக்கள் அறியாத சமஸ்கிருத மொழியில் தங்கள் மதக் கொள்கைகளை எழுதிக் வைத்துக்கொண்டு,
அதை பிராமணர்கள் அல்லாதவர்கள் படிக்கக்கூடாது.பிராமணர்கள் படிப்பதை காதால் கேட்க்க்கூடாது. அப்படி மீறி கேட்வபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று( காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும்) சட்டமே எழுதி வைத்துக்கொண்டார்கள்.
பௌத்த,ஜைனமத்ததார்களோ, அந்தந்த நாட்டின் தாய்மொழியிலேயே பெரிதும் ஊக்கங்காட்டி பொது மக்களின் நண்மைக்காக  நூல்களும் எழுதி வைத்தனர்.
அந்த வகையில் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை,,வளையாபதி, குண்டலகேசி,,சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்களை இயற்றி தமிழ்மொழியை அழகுறச் செய்துள்ளனர்.
இதில் மணிமேகலை,குண்டலகேசி,இரண்டும் பௌத்தர்களும், சிலப்பதிகாரம்,வளையாபதி, சிந்தாமணி மூன்றையும் ஜைனர்களும் இயற்றினர்.
வைதீக மதத்தவர்களான பிராமணர்களோ, தங்கள் மதக் கொள்கைகளை தாங்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்றும்,பிறர் அவற்றை படிக்க்க்கூடாது என்ற குறுகிய மனப்பான்மையிலே இருந்து வந்துள்ளனர்
மயிலை சீனி.வேங்கடசாமி அவர்கள் எழுதிய பௌத்தமும் தமிழும் என்ற நூலிருந்து.
அன்றிலிருந்து இன்றுவரை பிராமணர்களின் குறுகிய மனப்பாண்மை  பௌத்தர்களையும் ஜைனர்களையும் அழித்தும், புத்தரும் மகாவீரரும் பிராமண மத்த்தின் ஒரு அவதாரம் என்று ஏய்த்து,அணைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை தடுத்து  தடையுத்தரவு   வாங்கி ஆட்டம் போடுமளவுக்கு இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.


2 கருத்துகள்:

  1. தமிழை வாழ வைத்ததால் தான் ஜைனர்கள் இன்றைக்கு தமிழர்களை பொருளாதார ரீதியா சுரண்டி கொழுப்பதை பார்த்துட்டு கண்டுக்காம்ம இருக்கிறிர்களோ. பேஷ் பேஷ். உங்க பரந்த மனசு யாருக்கு வரும்.

    பதிலளிநீக்கு
  2. மாறுபட்ட ஆனால் மறுக்கமுடியா பார்வை! ..நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

ஒரு நீண்ட மௌனம்...........

  ஒரு வீட்டிற்கு  வாசல் படி  என்று இருந்தே  ஆக வேண்டும் அதே போல் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு வலி இருந்தே  ஆக வேண்டும் வலிப்போக்கனாகிய எனக்கும் ...