பக்கங்கள்

Friday, July 26, 2013

குண்டலகேசி என்ற சுருண்ட மயிரையுடைவள்..........


இராசகிரகம் என்னும் நாட்டை ஆண்ட அரசனின் மந்திரிக்கு ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் பத்திரை

ஒரு நாள் இவள் மாளிகையின் மேல் உலாவிக் கொண்டு இருந்தபொழுது... கட்டழகு மிக்க காளையன் ஒருவனை கொலை களத்துக்கு சேவர்கள் இழுத்துச் செல்வதைக்கண்டாள்.

குலம்.கோத்தரம் எதுவும் பார்க்காமல் அந்தக் கட்டழகு காளையின் மேல் காதல் கொண்டாள்,மணந்தால் அவனையே மணம் புரிவேன் அவன் இல்லையெல் உயிர் விடுவேன் என்று பிடிவாதம் செய்தாள்...... இன்றைய அப்பன்கள் மாதரி இல்லாத பத்திரையின் தந்தையான மந்திரி, கொலையாளர்களான சேவர்களுக்கு கைக்கூலி கொடுத்து கட்டழகு காளையனை மீட்டு தன் மகள் பத்திரைக்கு அவனை மண முடித்து வைத்தார்.

ஒரு நாள் மணமக்களின் ஊடலின்போது, பத்திரை, தன் கணவனை.“ நீ கள்வன்தானே என்றாள்.. இது அந்தக் காளையனுக்கு தன்னை அவள் இகழ்ந்தாக நிணைத்து தன் மனதிலே வஞ்சக எண்ணம் கொண்டான்.

அந்த வஞ்சகம் கொண்ட எண்ணத்தின்படியே, ஒருநாள். பத்திரையை குல தெய்வத்தை வழிபட செல்வோம் என்று கூறி மலையுச்சியிலுள்ள  கோயிலுக்குஅழைத்து சென்றான். அங்கு சென்றபின்.

பத்திரையைப் பார்த்து என்னைக் களவானி என்று இடித்துரைத்தாயே!.அதற்கு பலனாக உன்னை கொல்லப் போகிறேன். உன் இஷ்ட தெய்வத்தை வணங்கிக் கொள் என்றான்

திடுக்கிட்ட பத்திரை பதறாமல்,தற்கொல்லியை முற்க் கொல்ல வேண்டும்என்ற முது மொழியை சிந்தித்து அதன்படி. அவனுக்கு கீழ்படிவது போல் நடித்து.

என் கனவனாகிய உன்னையன்றி எனக்க வேறு தெய்வம் ஏதுஎன்று கூறி அவனையே வலம் வருவதாக கூறி. அவனை சுற்றி வலம் வரும்போது அவனின் பின்புறமாகவந்து அவனை கீழே தள்ளிவிட்டாள்.

 மலையுச்சிலிருந்து விழுந்த காளையன் மாண்டுபோன பிறகு, பத்திரை உலகத்தை வெறுத்தவளாக சைனமத்த்தில் சேர்ந்து துறவு கொண்டாள். சைனமத கொள்ளைப்படி
துறவியான பத்திரையின் தலைமுடி கயைப்பட்டு மொட்டையாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் தலைமுடி வளர்ந்து சுருண்டு காணப்பட்டது.

இதனால்தான் பத்திரையானவல் சுருண்ட மயிரையுடையவள் என்று பொருள் படும்படி குண்டலகேசி என்று அழைக்கப்பட்டாள்.

பின்னாளில் சைனமதத்தைவிட்டு புத்த மத்த்துக்கு மாறியபோதும் குண்டலகேசி என்றே அழைக்கப்பட்டாள்.

மயிலை சீனி. வேங்கடசாமி எழுதிய பௌத்தமும் தமிழும் என்ற நூலிருந்து.....2 comments :

 1. அந்தப் பெண்,அப்பன் முட்டாள்தனத்தினால் என்ன நடந்தது என்று கதையே கூறுகிறது

  அப்புறம் எதுக்கு

  //இன்றைய அப்பன்கள் மாதரி இல்லாத பத்திரையின் தந்தையான மந்திரி, //

  ??
  ...வேறு விளக்கம் தேவையா?

  ReplyDelete
 2. காதலுக்கு கண் இல்லை, ஆனால் தாம்பத்தியத்துக்கு உண்டு. காதல், கலியாணம் எதுவும் நிலையற்றது என்பதை உணர்த்தும் நல்ல கதை, இது பாதி தான் கிடைத்துள்ளது. மீதி கதைக் கிடைக்கவில்லை என்பது வருத்தமே.

  ReplyDelete

கருத்துரையில் திட்டுவதாய் இருந்தால், நல்லதாய் நாலு வார்த்தையில் திட்டலாம்.. நல்லதாய் இருந்தால் அது வெளியிடப்படும்...........!!!! முகவரி. valipokken@gmail.com