ஞாயிறு 21 2013

ஒரு துரோகியின் துரோகத்தின் பட்டியல்...............



காந்தி என்றால் துரோகம்,துரோகம் என்றால் காந்தி. அந்த துரோகத்தின் பட்டியல்கள்.

1.காங்கிரஸ் மாநாட்டிற்கு முன்பாக பகத்சிங்கை தூக்கிலிடும்படி காலனியவாதிகளிடம் கோரினார்.

2.பகத்சிங் விடுதலையைக் கோரும் இயக்கத்தை பிசுபிசுத்து போகும்படி செய்வதற்கு தன் செல்வாக்கை பயன்படுத்தினார்.

3.பகத்சிங்கின் வண்முறைப் பாதையைக் கடுமையாக சாடினார்.

4.ரௌலட் சட்ட எதிர்ப்பு இயக்கத்தை திசை திருப்ப சத்தியா கிரகத்தை முன் வைத்தார்.

5.மக்கள் போராட்டம் வலுத்த போதெல்லாம் காலனியவாதிகள் இராணுவத்தை ஏவி படுகொலை செய்தபோது,மக்கள் திருப்பி தாக்கியபோதும் புரட்சிகரமான பேராட்டங்களில் இறங்கியபோதும் மிருகத்தனமான,காட்டமிராண்டித்தனமான செய்கை என்று கணடித்தார்.

6.ரௌலட்சட்டத்தையும்,போலீஸ்அடக்குமுறையையும் எதிர்த்து நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களைஜாலியன்வாலாபாக்மைதானத்தில்,படுகொலைசெய்தபோது,அந்தக்கூட்டமே,பொறுப்பற்றவர்களால் கூட்டப்பட்டதாக கை கழுவி விட்டார்.

7.ஜாலியன்வாலா படுகொலையை திட்டமிட்டு நடத்திய காலனிய சிவில் மற்றும் இராணுவ அதிகாரிகளை பதவிகளிலிருந்து நீக்கினால் போதும் அதுவும் மேண்மை மிகு பிரிட்டீஷ் அரசரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்ப்படும் வகையில் செயல் பட்டதாக அவர்களை விலக்கி வைக்க வேண்டும். வேறு நடவடிக்கை தேவையில்லை என்று இவரும் இவரின் காங்கிரசும் சிபாரிசு செய்தன.





7 கருத்துகள்:

  1. விடுதலை போராட்டத்தில் கம்யுனிஸ்டுகளின் பங்கு என்ன?

    பதிலளிநீக்கு
  2. அதெல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாம் சரி...!


    உங்களின் நோக்கம் என்ன ...?

    இது தானோ : http://dindiguldhanabalan.blogspot.com/2012/11/GOSSIP.html அல்லது
    http://dindiguldhanabalan.blogspot.com/2013/02/If-I-get-back-to-life.html

    விளக்கம் தேவை...

    சும்மா கதை உடுவது என்றால் தொடரவும்... வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  3. இதே போல தமிழினத்திற்கு பெரியார் செய்த துரோகத்தையும் பட்டியலிடலாம், அதற்கு பெரியார் என்றால் துரோகம், துரோகம் என்றால் பெரியார் என்று தலைப்பிடலாம். பகத்சிங்கை தூக்குல போடும்போது, பெரியார் என்ன செஞ்சிட்டு இருந்தார்.

    பதிலளிநீக்கு
  4. பழைய குப்பைக் கிளறுவதால் இப்போதைய இந்தியாவில் துரும்பளவு மாற்றம் வருமா?! இன்றையக் காலக் கட்டத்தில் என்ன செய்யலாம் என பிரஞ்ஞையோடு சிந்தித்தால் நலம்..

    பதிலளிநீக்கு
  5. சரியான புரிதல் இன்றி பரபரப்புக்காக காந்தியைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்துவது சரியானதல்ல..ஜெயமோகனின் கட்டுரைகளை படியுங்கள்

    பதிலளிநீக்கு
  6. காந்தியைப்பற்றி கதை விடவேண்டிய அவசியம் இல்லை, நான் படித்த, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வெளியீடான“ காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு” என்ற புத்தகமே சாட்சி
    பரபரப்புக்காவோ, புரிதல் இல்லாமலோ இவற்றை பதிவிடவில்லை, ஆண்டுதோறும் ஆகஸ்டு 15யை நிணைவுட்டாமல் இருந்தால், துரோகத்தையும் நிணைவூட்ட அவசியமில்லை. எல்லோரும் முடிந்தால் அந்த புத்தகத்தை வாங்கி படித்து பார்த்து பொய்யா, உண்மையா என்று தாங்கள் தெளிவு படுத்திக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  7. காந்தி, நேரு போன்றவர்கள் தங்களின் சுயலாபத்திற்காக நாட்டின் நலனையும், கௌரவத்தையும் பலி கொடுத்தவர்கள். இன்று விஷ விருட்சமாக வளர்ந்து நிற்கும் காங்கிரசின் வித்துக்கள் இவர்கள்தான்!. இவர்கள் நேர்மையானவர்களாக இருக்கலாம். ஆனால் நாட்டை ஆளும் தகுதி படைத்தவர்கள் அல்லர். நம் நாட்டின் இன்றைய பலவீனமான நிலைக்கு இவர்கள்தான் காரணம்! இங்கு கூறப்பட்டுள்ளது சிறிதளவே! நேதாஜியின் பெருந்தன்மைக்கு முன்னால் காந்தி எவ்வளவு குறகிய மனம் படைத்தவர் என்பது நடுநிலையாளர்கள் எழுதிய இந்திய வரலாறினை படித்துப் பார்த்தால் தெரியும். பாட புத்தகத்தில் உள்ளதை படித்துவிட்டு இங்கு காந்தியை பற்றி யாராவது பேசினால், பாவம்! குற்றம் அவர்களது அல்ல. ஏனென்றால் அது அறுபதாண்டு காலாமாக காங்கிரஸ் கட்டிய மாயக்கோட்டை!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...