வெள்ளி 30 2013

மனிதனை சூழ்ந்து திட்டிய காக்கைகள்.....!!!


காற்றும் மழையும் சேர்ந்து வந்தபோது, மனிதனின் வீட்டு குடிசை முன் மரம் ஒன்று ஆடி அசைந்து  குடிசையின் மீது விழுவேன் என்று மனிதனுக்கு பயம் காட்டியது.

அந்த மரத்தின் அடிப்பாகத்தில் பெருச்சாளிகள் துளையிட்டு  இருந்ததால் மரத்தின் அடிப்பாகம் பலமில்லாமல் இருந்தது. பலகாலமாக அவ்வப்போது காற்றும்.மழையும் சேர்ந்தோ தனித்தோ வந்து மனிதனை மிரட்டி பயம் காட்டி யது

இதனால் ,மரம் தன்வீட்டின் மேல் விழுந்து விடுமோ என்ற பயத்தில் மனிதன் தூங்க முடியாமல் தவித்தான்.

எப்படிபட்டாவது பலத்தை (பணத்தை) சேர்த்துக்கொண்டு, காற்று மழையுடன்  கூட்டணி அமைத்து தன்னை பயமுறுத்தும் மரத்துக்கு தக்கப்பாடம் கற்பிக்க எண்ணினான் மனிதன்..

 சில மாதங்களில். மனிதன் சில தியாகங்களை செய்து ,வரும் வருவாயில் சிக்கனமாக இருந்து பலத்தை சேர்த்துக்கொண்டான்.

 மூன்று வேலையாட்கள் கேட்ட , ஒரு நாளில் முடிக்கிறமோ, அரைமணி நேரத்தில் முடிக்கிறமோ, எங்களுக்கு ஒருநாள் கூலி 600ரூபாயை கொடுத்து விடவேண்டும் என்ற கூலியை  100யை குறைத்து மூன்று பேருக்கு கூலியாக 500X3= 1500 ஆக  கொடுத்து

காற்று,மழையுடன் சேர்ந்து பயமுறுத்திய மரத்தை வெட்டி கீழே சாய்த்தான். அன்று மரத்தின் மிரட்டலின் பயம் இல்லாமல் தூங்கினான் மனிதன்.

 காலையில் தூங்கி எழுந்து வெளியே வந்த மனிதனை ,காக்கைகள் கூட்டமாக சூழ்ந்து கொண்டு கா..கா...கா...  தங்களுக்கு உரித்தான  வசவு  வார்த்ததைகளில் திட்டிக்  தீர்த்துக் கொண்டு இருந்தன.

 நேற்று, மரத்தை வெட்டும்போது, மரத்தில் வசித்து வந்த காக்கைகள். தங்கள் பொழப்பை தேடி வெளியே சென்று விட்டதால் ,அவைகள்  இல்லை, இருந்திருந்தால், மறியலே, நடந்திருக்கும்........காக்கைகள் திட்டுவதை கேட்டு மௌனமாக இருந்த மனிதன்..

திடீரென்று. ஞாபகம் வந்தவனாக வெட்டி எறிந்த மரத்தின் தலைப்பாகத்தை தேடி ஓடினான். மரத்தின் தலைப்பாகத்தில் காக்கைகள் கட்டிய கூடுகள் கலையாமல் இருந்தன. உற்றுப் பார்த்ததில் கூட்டுகுள்ளே, முட்டைகளோ, குஞ்சுகளோ இல்லை.

முகத்தில் நிம்மதி வந்தவனாக. மனிதன், தன் மொழியில் பேசினான்.

காக்கைகளா?. நான் உங்கள் வீட்டை  அபகரிக்கவோ,கெடுக்கவோ, இல்லை, என்னை பயமுறுத்திய மரத்திலிருந்து என்னையும் என்வீட்டையும் பாது காத்து கொள்ளவே கூலி கொடுத்து பாடம் புகட்டினேன். சத்தியமாக உங்களை அப்புறப்படத்தவேண்டும் என்ற எண்ணம் துளியளவு இல்லை, உங்களுக்கோ, உங்கள் கூட்டுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.


 நான் சொல்வவதை நீங்கள் நம்பாத பட்சத்தில். நீங்கள்.என் மண்டயை கொத்தி உங்கள் கோபத்தை தீர்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வெட்டிய மரத்தின் மேலே அமர்ந்தான் மனிதன்.

சூழ்ந்திருந்த காக்கைகள், ஒவ்வொன்றாக தங்கள் வசவுகளை  வெளியிட்டு பின் மெது மெதுவாக வசவுகளை குறைத்துக்கொண்டன.

கூட்டுக்கு சொந்தக்காரன இரண்டு காக்கைகள் மட்டும் கலையாமல் இருந்த கூட்டின் குச்சிகளையும,முட்களையும் கட்டுக்கம்பிகளையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள மரத்துக்கு சென்றன.

மனிதனும்  காக்கைகள் மன்னித்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நகர்நதான்.

2 கருத்துகள்:

  1. அஃறிணையின் அலர் எத்தனை உயர்திணைகளுக்கு கேட்கிறது இன்று?. உயர்திணை என்று நாம் சொல்லிக் கொண்டு இயற்கையை சுய நலத்திற்காக அழிப்பது அநியாயம். தாங்கள் இந்த பதிவின் மூலம் யோசிக்க வைத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...