ஞாயிறு 25 2013

“ஆன்மா”வை கண்டுபிடிக்க குருவானவர் சொன்ன வழி கதை....


நித்தியானந்தா  நிறுவியிருக்கும் மாதிரியான ஒரு ஆசிரமம். அந்த ஆசிரமத்தில் ஒல்லியான குருவானவர். தம் சீடர்களிடம. “ஆன்மா”
வைப் பற்றி கதை அளந்து கொண்டு இருந்தார்.

மனிதன் சாகுமுன் கடைசியாக விடும்  காற்று மூக்கிலிருந்து வெளியேறும் தருணத்தில் மனிதனின் “ஆன்மா” உடலை விட்டு வெளியேறுகிறது
என்றரார்

மனிதனின் ஒரு உடம்பு அழிய,அதன் இரண்டாவது உடம்பு மட்டும்
பிழைத்து இருக்கிறது என்றார்.

சீடர்களுக்கு. குருவானவர் சொல்வதை மட்டுமே கேட்பதற்கு உரிமை இருக்கிறதே ஒழிய, கேள்வி கேட்க உரிமையில்லை..

அப்படியிருந்தும் முந்தா நாள் வந்திருந்த ,சுட்டிப்பயல் சீடன் ஒருவன்,
 ஒரு கேள்வியை கேட்டு விட்டான்.

“ மனித உடலிலுள்ள “ஆன்மாவை” எப்படி கண்டு கொள்வது”

சுட்டிப்பயல் சீடனால்  கேட்ட கேள்விகளால் கோபமடைந்த
குருவானவர், வெளிக் காட்டிக் கொள்ளாமல், அந்த சீடனின்
விபரங்களை கேட்டுவிட்டு. இப்படி சொன்னார்.

பழுத்து கொழுத்த உடம்பில் சன்னமான “ஆன்மா” இருக்கும், மெலிந்த உடம்பிலே பருத்த “ஆன்மா” இருக்கும்.

இந்த பருத்த “ஆன்மா”வைப் பெறத்தான் சந்நியாசம் பெற்ற குருவான
வர்களும் முனிவர்களும்நீண்ட உபவாசங்கள்  மேற்க்கொண்டதால்
 உடல் மெலிந்தனர். அந்த மெலிந்த உடம்பிலேதான் ”ஆன்மா” பெருகும்.

பெருத்த “ஆன்மா” மெலிந்த உடம்பில் குடி கொள்வதற்கு விசலாமாக இடம் கிடைக்கும். இதிலிருந்தான் ஆன்மாவை கண்டுபிடிக்க வேண்டும்-என்றார்

குருவானவர். இப்படிச் சொன்னவுடன். சீடர்களில் குண்டாவனர்கள் ஒல்லியான சீடர்களை. பொறாமையால் பார்த்தனர். மெலிந்த சீடர்களேர் காலரை தூக்கிவிட்டுக்கொண்டு குண்டானன சீடர்களை  கேலியாக பார்த்தனர்..


2 கருத்துகள்:

  1. //ஆன்மாவைப் பற்றிக் கதை அளந்துகொண்டிருந்தார்...//

    சிரிக்க வைத்துச் சிந்திக்கத் தூண்டும் பதிவு.

    பதிலளிநீக்கு
  2. வாங்க! கிழத்தன். தங்கள் கருத்துரைக்கு நன்றிங்க! கிழத்தன்.

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...