திங்கள் 28 2013

இறைவனையும்,மன்னனையும் பாடி வந்த கீர்த்தனையை மாற்றிய கவிஞர்.


இறைவனை நிணைத்து மனம் உறுகி பாடி வேண்டுதலையும், நாட்டை ஆளும் மன்னனை புகழ்ந்து பாடி பரிசினை பெருவதும்மே,கீர்த்தனை பாடல்களாக இருந்து வந்தன.தமிழ் கவிஞர்களுக்கு

அப்படிப்பட்ட, இல்லாத ஒன்றிடம் வேண்டுவதும், இருப்பவர்களை புகழ்ந்து பாடி யாகசம் பெறுவதும்மாக இருந்த கீர்த்தனைப் பாடல்களை மாற்றி,எல்லா தொழில் முறைகளுக்கும்,ஏழை எளியவர்களுக்கும், சாதரணமான வர்களுக்கும்  புரியும் வண்ணம் பாடல் கீர்த்தனைகளை பாடி,பாடல்(கவிதை) உலகில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர்  கவிஞர்.

கவிதைகளிலே தமிழே கோலோச்ச வேண்டும என்று தன் கவிதைகளிலே, பாடல்களிலே  அதை நடைமுறைப்படுத்தியவர் கவிஞர்

தமிழ்நாட்டில் தமிழ்க் கவிஞர்களிலே,உறையாடல்கள்  இன்றி முழுக்க,முழுக்க கவிதையிலே நாடகம் எழுதியவர்.  

இவர் எழுதிய “புரட்சிகவி” என்ற கவிதை நாடகம். இந்திய வரலாற்றில் இலக்கிய உலகில், கவிதையிலே.இரண்டுமணி நேரம் நாடகமாக நடந்தது.

இந்த நாடகத்துக்கு “தந்தை பெரியார்” தலைமை வகித்து அவரின் பாராட்டைப் பெற்ற  கவிஞர்.

தன் பாடல்களிலே,மூடப்பழக்த்தை சாடி, அறிவியலை மிகுதியாக இழைய விட்டிற்கும் பெருமைக்குரிய கவிஞர். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.


2 கருத்துகள்:

  1. அட எங்க புச்சேரி கவிஞரு. இந்த மனுஷருடைய படத்தை பாத்தாலே மயிர் கண்ணுங்களாம் சிலுர்த்துகுது.

    நல்ல பகிர்வு வலிப்போக்கன்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் வாழ்த்துக்கு நனன்றி! மாசிலா அவர்களே!

    பதிலளிநீக்கு

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.

  பகுத்தறிவு சுய மரியாதை சிந்தனை களம்  வழங்கும் தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த ஆண்ட மோண்ட பரம்பரைகள்? வன்னியர்கள், கவு...